முத்துக்குமரனின் வருகையையொட்டி மதுரையில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.தருமி அய்யா,நான்,முத்துக்குமரன்,இராம்,லிவிங்ஸ்மைல்,மதுரை புல்லட் பாண்டி ஆகியோர் கலந்து கொண்ட இச்சந்திப்பில் இருந்து சில துளிகள்:-
லிவிங்ஸ்மைல் தன் ஜாகையை இன்னும் சில மாதங்களில் சென்னைக்கு மாற்றுகிறார்.மதுரை மக்கள் சரியில்லை என்று அதற்கான காரணங்களில் ஒன்றாக சொன்னார்.உடனே நான் ஆமாம்,அறிமுகமான கொஞ்ச நேரத்திலேயே நீங்க என்ன ஆளுங்க?என்று கேட்கும் மக்கள் இங்கு நிறையவே உண்டு.சென்னையில் இந்த அளவிற்கு இருக்காது என்று கூறினேன்.உடனே புல்லட் பாண்டி சாதியை அறிந்து கொள்வதில் இருக்கும் சில சாதகமான விஷயங்களைக் கூறினார்.என்னைப் பொறுத்தமட்டில் அது ஏற்கத்தக்கதாக இல்லை.
இராம் தான் இன்னமும் தினமலர் சிறுவர்மலர் படிக்கிறேன்,அதனால் தான் ஒரு பார்ப்பன அடிவருடியா என்று கேட்டு குத்து விட்டுக் கொண்டிருந்தார்.
தருமி அய்யா,இட ஒதுக்கீட்டில் நடக்கும் தில்லுமுல்லுகளையும்,அரசியல்வாதிகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையையும் சொல்லி,இதைப்பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடம் பரவ வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
நான் என் பங்குக்கு தினமலர் நாளிதழ் BC,SC பிரிவினரிடையே பகையுணர்வை வளர்க்கும் நோக்கத்தோடு செய்திகளை வெளியிடுவதை அம்பலப்படுத்தினேன்.அதாவது SCஇட ஒதுக்கீட்டால் BC பிரிவினர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது போன்ற செய்திகள்.ஓ!அப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனார் இராம்.
முத்துக்குமரன் தன் எழுத்தைப் போலவே பேச்சிலும் தெளிவாக தன் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.குமரனின் பதிவகளைப் படித்து அவர் ஒரு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என நினைத்த எனக்கு அவர் ஒரு பையனைப் போன்ற தோற்றத்துடன் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமாகப் போய்விட்டது.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது இரண்டு ஃபுல் ரம் காலி.சைட் டிஷ் மிக்சர்,மில்க்ஸ்வீட்.
மதுரையை மையப்படுத்தி ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை இராம் வெளிப்படுத்தினார்.அதனால் மதுரை பதிவர்கள் அவரை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்த சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.
புல்லட்பாண்டி தன்னுடைய புல்லட்டில் ஏறி பறந்து விட்டார்.மீதி அனைவரையும் தருமி அய்யா தன்னுடைய சொந்தக்காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு அவரவர் இடத்தில் இறக்கி விட்டு வீடு நோக்கிப் பறந்தார்.
பின்குறிப்பு:
வீடு திரும்பியதும் மனது கனத்துப் போயிருந்தது.ஒரு அழகு நங்கையாக திகழ வேண்டிய லிவிங்ஸ்மைல் வித்யா,
இயற்கையின் சிறு எழுத்துப்பிழையால் தன் வாழ்நாள் முழுதும் சொல்லொணா துயரத்தை
சுமக்க வேண்டிய அவலத்தை நினைத்து.
ஆனாலும் அவருடைய தன்னம்பிக்கை அவரை புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்லும்.
கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.
Tuesday, July 31, 2007
Saturday, July 28, 2007
ஸ்மூத் கிரிமினல்
சமீபத்தில் தலித் சிறுகதை ஒன்றை வாசித்தேன்.நெஞ்சில் ஒட்டிக்கொண்ட அக்கதையின் கருவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு தலித் குடியானவர் பண்ணையில் வேலை செய்கிறார்.கடும் உழைப்பின் காரணமாக அவரது துணிமணிகள் விரைவிலேயே கிழிந்து விடுகிறன.இதை பண்ணையார் கண்டும் காணாதது போல்
இருக்கிறார்.அடுத்து அந்தக் குடியானவரிடம் இருக்கும் துண்டு நைந்து போய் கிழிந்து விடுகிறது. அதை தூக்கி எறிந்து விடுகிறார்.
குடியானவரிடம் ஏதோ ஒன்று குறைகிறதே என பண்ணையார் உணர்கிறார்.உடனே வீட்டினுள் சென்று புதிய துண்டு ஒன்றை எடுத்து வந்து கொடுக்கிறார்.
பண்ணையார் வழங்கிய பரிசின் நோக்கம் ,குடியானவர் தன்னைக் கண்டவுடன்
வழக்கம் போல் துண்டை எடுத்து சுருட்டி இடுப்பில் வைத்துக்கொண்டு வணக்கம் சொல்வது காணாமல் போய்விட்டதே
என்ற கவலை தான்.
இந்தக் கதையின் மூலம் இன்னொரு விஷயமும் புரிந்தது.மதமாற்றம் கூடாது என கூக்குரலிடுபவர்கள் அனைவருமே உயர்சாதியினர்.இவர்கள் இந்து என்னும் பட்டுத்துண்டை கொடுத்து என்றென்றும் அவர்களுக்கு கீழேயே இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதே நாம் அனைவரும் இந்துக்கள் என்று சொல்வதின் நோக்கம்.
வெள்ளையர்களும் ,மொகலாயர்களும் ஆயுதங்களால் நம்மை
அடிமைப்படுத்தினர்.வெறும் வாய்ஜாலத்திலேயே வண்டியை
ஓட்டிக் கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று சொல்ல!

மெக்மேன் மரணம்:ஒரு கட்டுடைப்பு
WWE சண்டை நிகழ்ச்சிக்கு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.நானும் தான்.அது ஒரு டுபாக்கூர் சண்டை என்று என்னுடைய சிற்றறிவுக்கு தெரிந்தாலும் அது ஒரு நிஜ சண்டை என்று நம்புபவர்கள் ஏராளம்.
என்னுடைய நண்பன் ஒருவனிடம் இதைப் பற்றிப் பேசி சண்டையே வந்து விட்டது.அது ஒரு பொய்ச்சண்டை என்று நான் சொல்ல , பொய்சண்டையையா இத்தனை பேர் பார்க்கிறார்கள் என்றும்,ரத்தம் சிந்தி,உயிரைக் கொடுத்து போடும் சண்டையை பொய் என்று சொல்கிறாயே நீ என்ன லூஸா என்றும் கேட்கிறான்.எல்லா வகையான விளையாட்டுகளிலுமே எதிர்பாராத விபத்துகளினால் ரத்தம் சிந்தத்தான் செய்யும் என்றும் நிஜமான குத்துச் சண்டைகளை பார்த்ததில்லையா என்றும் கேட்டேன்.
என்ன சொல்லியும் அவனை ஏற்க வைக்க முடியவில்லை.இந்த சூழ்நிலையில் தான் மெக்மேன்(McMahon) என்னும் பழைய வீரரும்,தற்போது ஒரு நிர்வாகியாகவும் இருக்கிற ஒருவரை தீ வைத்து மற்ற வீரர்கள் கொன்று விட்டதாக பரபரப்பு எழுந்தது.
அடப்பாவிகளா இந்த டுபாக்கூர் விளையாட்டுக்காக ஒருவனை கொல்லவா செய்வார்கள் என்று மிரண்டு போய்விட்டேன்.இந்த சண்டை பற்றி நன்கு தெரிந்த ஒரு சிறுவனிடம் வாயைக் கிண்டிய போது,"ஆமாண்ணே,ஆளை வச்சு அடிக்கிறது,கள்ளாட்டை ஆடுறதுன்னு ரொம்ப சேட்டை பண்ணான்.அதான் சீனை முடிச்சுட்டாய்ங்க"என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு போய்விட்டான்.
உயிரை எடுக்கும் ஒரு விளையாட்டை அரசு எப்படி அனுமதிக்க முடியும் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு இணையத்தில் தேடினேன்.அப்போது தான் உண்மை தெரிந்தது.
அந்த சண்டை முழுவதுமே ஒரு தொடர்நிகழ்ச்சி,அதில் மெக்மேனின் மரணம் என்பது ஒரு பகுதி.ஆனால் அவர் நிஜமாகவே செத்துவிட்டார் என்று நிறைய குழந்தை உள்ளத்துக்கு சொந்தக்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது.
பி.கு:கடைசி வரி ஜூ.வி பாதிப்பால் வந்தது.

Sunday, July 22, 2007
ரஜினி பரபரப்பு அறிக்கை
ரஜினிக்காக கலைஞர் கவிதை எழுதி உள்ளதை தமிழ்மணத்தில் பலரும் படித்திருப்பார்கள்.கவிதை எழுதும் அளவுக்கு ரஜினி என்ன சொன்னார் என்பதை பலர் தவற விட்டிருப்பார்கள்.அவர்களுக்காக இந்தப் பதிவு.
ரஜினி எழுதிய கடிதம் வருமாறு:
பெரியார் படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன்.நான் மதிப்பிற்குரிய பெரியார் அவர்களின் கொள்கைகளைத்தான் அறிந்திருக்கிறேன்.அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாக தெரியாது.அவருடைய வரலாறை அறிந்து அவர்களின் மேல் எனக்கு இருந்த மதிப்பும்,மரியாதையும் இன்னும் ஆயிரம் மடங்கு உயர்ந்து விட்டது.அவர் சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாமும் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும் பொழுது ஏற்பட்டாலும்,அவருடன் நெருங்கிப் பழகிய மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களோடும்,மதிப்பிற்குரிய கி.வீரமணி அவர்களோடும் எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சிப்பட்டு இந்த திரைக்காவியத்தை,அருமையாக படைத்த ஞானசேகரன் அவர்களுக்கும் இந்த திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு பெரியாராக நடிக்காமல்,பெரியாராக வாழ்ந்து காட்டிய என் அருமை நண்பர் சத்யராஜ் அவர்களை கட்டித்தழுவி என் இதயம் கனிந்த வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தந்தை பெரியார் புகழ்.

Thursday, July 19, 2007
தன்னைதானே மெச்சிக்கொள்ளும் தவிட்டுக் கொழுக்கட்டை
//என்.கணேசன் சென்னையிலிருந்து எழுதுகிறார்:-அண்மைக்காலத்தில் இடஒதுக்கீடு பற்றி அடிக்கடி செய்திகள் அடிபடுகின்றன.வேலை வாய்ப்புகளில் தகுதிகள் இருந்தும் திறமைகள் இருந்தும் ஒரு சிலர் பாதிக்கப்படுகின்றனர்.இனி உள்நாட்டில் முயற்சிப்பதில் பலனில்லை என அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலியா போன்று வெளிநாடுகளில் முயற்சி செய்து வெற்றியும் பெறுகின்றனர்.மாம்பலம்,தி.நகர்,போன்ற பகுதிகளில் வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிவதைக் காணமுடிகிறது.இது எந்த விதத்தில் நியாயம்?இதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?ஐ.நா, மூலமாக அமெரிக்கா,பிரிட்டன் நாடுகளுக்கு மத்திய அரசின் மூலம் தாக்கீது அனுப்பலாம்.ஜாதிவாரி கோட்டா ஒன்றை அனுப்பி,'எங்கள் நாட்டு ஆசாமிகள் விஷயத்தில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி வேலை கொடுங்கள்' என வலியுறுத்தலாம்.இதனால்,சமூகநீதி காக்கப்படும் என்பது எனது தாழ்மையான கருத்து.இதை யாரும் ஏன் முயற்சிக்கவில்லை.//
மேற்கண்ட கருத்தை இன்றைய தினமலத்தில் (19-7-07) இது உங்கள் இடம் பகுதியில் எழுதியுள்ளார் ஒரு வாசகர்.
தங்கள் திறமையை எல்லாம் உள்நாட்டிலேயே காட்டி தாய்நாட்டுக்கு தியாகம் செய்ய தயாராக இருந்தது போலவும்,வேறு வழியில்லாததாலேயே வேறு நாட்டில் பணி செய்வதாகவும் நொந்து கொண்டுள்ளார்.வெளிநாடுகளில் இருப்பவர்கள் அனைவருமே மாம்பலம்,தி.நகர் பகுதிகளில் இருந்து சென்றவர்களா என்ன?.
இதைவிட கூத்து,வெளிநாடுகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என போராட வேண்டியது தானே என்று சொல்கிறார்.அதாவது இடஒதுக்கீடை கேலி செய்கிறாராம்.
தகுதி,திறமை என்று மட்டுமே இருந்தால் அவர்களை விஞ்ச முடியாதாம்.
இப்படி பேசுபவர்கள் முகத்தில் கரி பூசும் விதமாகத் தானே
இந்த வருட மருத்துவகல்லூரி தரவரிசைப் பட்டியலில் நூற்றுக்கு எண்பது பேர் B.C,S.C பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தானே உயர்ந்தவன் என்று பழங்காலத்திலிருந்தே பாடிய பாட்டால் தானே இன்று ஆரிய,திராவிட பிரச்சினை;இடஒதுக்கீடு பிரச்சினை என்று பிரச்சினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இப்போதும் இந்தப்பாட்டை பாடும் இந்த கணேசன் 40 வருடங்களாக கோமாவில் இருந்து இப்போது தான் சுயநினைவு திரும்பிய ஒரு பெருந்தகையாகத் தான் இருக்க முடியும்.

Thursday, July 12, 2007
விகடனுக்கு வந்த வேதனை
சென்னையில் பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பேரணி குறித்து ஆனந்தவிகடனின் பதிப்பாளர் ஒரு பக்க கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.அதன் இறுதிப் பகுதியில்-
"கட்சி பலத்தை ஊரறியக்காட்டி முண்டா தட்டுவதற்காக,ஊர்வலம்,பேரணி என்று நடத்தி போக்குவரத்தை மூச்சு திணற வைத்து, கட்சித்தொண்டர்களையும்,கட்சிக்கே சம்பந்தமில்லாத பொதுஜனங்களையும் ஒருசேர மண்டை காய வைக்கிற தலைவர்கள் இனியாவது யோசிக்கலாமே"
-என்று எழுதியிருக்கிறார் பதிப்பாளர்.
திருவாரூர் தேரோட்டம்,திருச்செந்தூர் தேரோட்டம்,கபாலி கோயில் தேரோட்டம் போன்றவைகள் எல்லாம் நடத்தப்படும் போது போக்குவரத்து திணறுவதில்லையா?
மயிலை அறுபத்துமூவர் உற்சவம் என்றால் ஒருநாள்-இரண்டு நாளல்ல;10 நாட்களுக்கு மேல் அந்தப் பகுதியிலேயே பஸ்கள் செல்லாமல் திருப்பி விடப்படுகிறதே;
அப்போதெல்லாம்-போக்குவரத்து திணறுகிறது;பொதுஜனங்களின் மண்டை காய்கிறது என்று எழுதத்தோன்றியதில்லையே விகடனாருக்கு ஏன்?
அப்போது தேர்மேல் அமர்ந்து வெயில் படாமல் வருபவர்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவர்கள்;வெயிலில் வியர்க்க வியர்க்கவடம் பிடித்து தேரை இழுப்பவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாலா?
நன்றி-முரசொலி

Tuesday, July 10, 2007
அனானிகளின் அக்கப்போர்
அனானி ஒருவர் என்னை தாறுமாறாக திட்டித்தீர்த்திருந்தார்.வசவாளர்கள் வாழ்க என்று பெருந்தன்மையுடன் சொன்ன கலைஞர் வழி வந்த எங்களால் அவரைப் போன்றே திருப்பி திட்டத் தெரியாது.
அக்கப்போர் என்ற வார்த்தையை மதுரையில் சிலபேர் டக்கப்போர் என்று சொல்வார்கள்.அக்கப்போர் என்ற அழகான வார்த்தையை இப்படி டக்கப்போர் என்று சொல்லி அக்கப்போர் செய்கிறார்களே என்று யோசிப்பதுண்டு.
அப்போது தான் TUG OF WAR என்ற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டேன்.இதற்கு "இழுபறி பந்தயம்" என்று அர்த்தம் கூறப்பட்டிருந்தது.
இதற்கும் அக்கப்போருக்கும் தொடர்பு இருக்குமோ என்று இணையத்தில் தேடினேன்.
அக்கப்போருக்கு இரண்டு முடிவுகள் கிடைத்தன.
1.அக்பார் என்ற உருதுச்சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை.அக்பார் என்றால் செய்தி என்று பொருள்.கற்பனையாகக் கூறப்படும் பொய்ச் செய்திகளை தான்
அக்கப்போர் என்று குறிப்பிடுகிறோம்.
2.அக்கப்போர் என்பது TUG OF WAR என்பதிலிருந்து தக்கப்போராகி பின் அக்கப்போரானது .
என்று இரண்டு விதமாக அறிந்து கொண்டேன்.

Monday, July 9, 2007
தமிழ்த்தாய் வாழ்த்து-இடை உருவல்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட அந்த வரி,
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து படாது இருக்கும்
உந்தன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
இந்த நீக்கத்தின் பின்ணனி தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Sunday, July 8, 2007
இந்தியாவின் நம்பர் 1 பிரதமர் மரணம்.
50 எம்பிக்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் பிரதமராகலாம் என்று நிரூபித்த 5 மாதங்கள் இந்தியாவை ஆண்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணமடைந்தார்.இந்தியாவின் சிறந்த பிரதமர்களை வரிசைப்படுத்திய சோ அவர்கள் சந்திரசேகரையே அனைவரிலும் சிறந்தவர் என தேர்ந்தெடுத்தார்.இவருக்கு அடுத்து தான் நரசிம்மராவ்,இந்திராகாந்தி,ராஜிவ்காந்தி,வி.பி.சிங் முதலியோர் இருந்தனர்.
Saturday, July 7, 2007
ஒரு மினி வலைபதிவர் சந்திப்பு.
திடீரென ஒருநாள் தருமி அய்யாவிடமிருந்து அழைப்பு.இன்று மாலை (24-6-2007) ஓகை அவர்களை சந்திக்க உள்ளேன்.கலந்து கொள்ள இயலுமா? என்று கேட்டார்.கரும்பு தின்ன கூலியா என்ன?
ஓகை அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று காத்திருந்தேன்.தருமி அய்யா வந்து என்னையும்,ஓகை அவர்களையும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்ரார்.தருமி அம்மா முகம் மலர வரவேற்று எங்களை உள்ளே அனுப்பி வைத்தார்.
நொங்கும்,மாம்பழத் துண்டுகளும் வெட்டிப்போட்டு ஊறவைத்த குளுகுளு பால் தரப்பட்டது.அதை உள்ளே தள்ளி உடலையும்,மனதையும் குளிர்ச்சியாக்கி விட்டு உரையாடலை தொடங்கினோம்.
ஓகை அவர்கள் இறையுணர்வு எவ்வாறு மனிதனுக்கு இன்றியமையாதது என்று விளக்கினார்.பசி,தூக்கம்,உடலுறவு போன்றே இறையுணர்வும் ஒரு அடிப்படையான INSTINCT.அதை மனிதனால் தவிர்க்க இயலாது என்றார்.
தன் நம்பிக்கையை தானே கேள்விக்கு உள்ளாக்க விரும்பாதவரிடம் வாதிடுவதே தவறு என்று நீங்கள் எப்படி சொல்லலாம் என்று கேட்டார்.(இதை சொன்னது கல்வெட்டு.தருமி அவர்கள் அதை மேற்கோள் காட்டியிருந்தார்).நீங்கள் எவ்வாறு உங்கள் இறைநம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கினீர்கள் என்று தருமி அய்யாவிடம் கேட்டதற்கு அவர் அழகாக விளக்கினார்.தான் இறைநம்பிக்கையுடனிருந்த காலங்களில் தனக்கு எந்தவிதமான இறைமறுப்பு சந்தேகங்களும்,கேள்விகளும் வரக்கூடாது என்று வேண்டியதாகவும்,ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை என்றும் கூறினார்.இதைக்கேட்டு ஓகை அவர்கள் ஒருகணம் திகைத்தார்.பின் "இது நல்லாருக்கே" என்று நகைச்சுவையாகக் கூறினார்.
தஞ்சைப் பெரியகோயிலைப் பற்றிய பேச்சு வந்தது.அவ்வளவு பெரிய கல்லை கோபுரத்தின் உச்சியில் எப்படி வைத்தார்கள் என்பதற்கு ஓகை அருமையான விளக்கம் சொன்னார்.அது ஒரே கல் இல்லை,பல துண்டுகளாக செய்யப்பட்டு மேலே கொண்டு சென்று பொருத்தப்பட்டது என்றார்.மேலும் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்பதும் தவறான தகவல் என்றும் விளக்கினார்.
பேசிக்களைத்த பின் உணவருந்த சென்றோம்.சப்பாத்தியும்,கோழிக்குழம்பும் தன் கையாலேயே தருமி அய்யா பரிமாறினார்.பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன் என்று சொல்லி உற்சாக பானத்தை ஈடுகட்டும் விதமாக திராட்சை ஜுஸ் கொடுத்தார்.அருந்தி விட்டு பிரியாவிடை பெற்றுச் சென்றோம்.

Subscribe to:
Posts (Atom)
Labels
- WHERE DO YOU WANT TO GO TODAY? (1)
- இந்திய தேசியம் (2)
- எய்ட்ஸ் (1)
- ஒலிம்பிக் (1)
Blog Archive
- November 2006 (2)
- December 2006 (1)
- March 2007 (2)
- April 2007 (1)
- June 2007 (10)
- July 2007 (10)
- August 2007 (4)
- September 2007 (9)
- October 2007 (5)
- November 2007 (6)
- December 2007 (4)
- January 2008 (1)
- March 2008 (2)
- April 2008 (2)
- May 2008 (2)
- June 2008 (1)
- August 2008 (2)
- September 2008 (3)
- October 2008 (2)
- November 2008 (4)
- January 2009 (1)
- February 2009 (1)
- May 2009 (2)
- June 2009 (1)
- July 2009 (1)
- October 2009 (1)
- January 2010 (1)
- June 2010 (1)