கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, December 2, 2006

???? காதில் ஊதிய சங்கு

மடத்தலைவர் சங்கராச்சாரியார் கைதின் போது சில நாள் கழித்து கலைஞர் விடுத்த வேண்டுகோள்.இனிமேலாவது இந்திய அரசின் உயர்ந்த நிலைகளில் இருக்கும் பிரதமர்,குடியரசுத்தலைவர் போன்றோர் இவர்களை சந்திக்கும் போது பணிவாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே.

ஏன் தவிர்க்க வேண்டும் ?

அறிவியலையும், அறிவுபூர்வமான அணுகுமுறைகளையும் சற்றும் ஏற்றுக்கொள்ளாத இந்த சாமியார்களை அறிவில் சிறந்த பிரதமரும்,குடியரசுத்தலைவரும் ஏற்றுக்கொள்வது போல் நடத்தப்படும் விழாக்களால் பாதிக்கப்படுவது வளரும் குழந்தைகளின் வெள்ளை உள்ளங்கள் தான்.

அறிவியலும்,தொழில்நுட்பமும் தான் இந்தியாவை முன்னேற்றும் என்று தினமும் மாணவர்களிடம் வலியுறுத்தும் நமது குடியரசுத்தலைவர் சாயிபாபாவின் விழாவில் கலந்து கொண்டதை அம்மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவே கருதுகிறேன்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்