கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, March 26, 2007

மேதைகளும்,ஜோசியமும்.

Astronomy is a science, the study of the uviverse as it is.Astrology is a pseudoscience-a claim,in the absence of good evidence,that the other planets affect our everyday lives. CARL SAGAN

வானியல் பற்றிய புத்தகங்களில் பித்தனானேன்.விண்வெளி மண்டலங்கள் பற்றிப்படிப்பதும் தேனாய்த் தித்தித்தது.விண்கலங்கள் தொடர்பாக நண்பர்கள் கேள்வி கேட்கும் போது எங்கள் பேச்சு சில சமயங்களில் ஜோதிடஇயல் பற்றியும் திசைமாறும்.

சூரியக்குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும்,அக்கறையும் வந்திருக்கிறது?அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படி பிணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நிஜமாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஜோதிடம் ஒரு கலை என்ற அளவில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

கிரகங்கள்,நட்சத்திர மண்டலங்கள்,துணைக்கோள்கள் பற்றியெல்லாம் கூட எப்படி மக்களுக்கு மாயை பிறந்தது?தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.விண்கோள்களின் அசாதரணமான இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக்கழித்து பகுத்துப்பார்த்து,இட்டுக்கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அப்துல் கலாம்

Wednesday, March 21, 2007

வேத அறிவு vs பகுத்தறிவு

மனிதனை மற,கடவுளை நினை-வேதஅறிவு
கடவுளை மற,மனிதனை நினை-பகுத்தறிவு

கருங்கல்லிலே கடவுளைக் காண்பது-வேதஅறிவு
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது-பகுத்தறிவு

உலகம் பஞ்சபூதங்களால் ஆனது-வேத அறிவு
உலகம் அணுக்களால் ஆனது-பகுத்தறிவு

கிச்சாவின் வாய்க்குள் உலகத்தைக் கண்டுபிடித்தது-வேதஅறிவு
உலகம் உருண்டை என கண்டுபிடித்தது -பகுத்தறிவு

ராகு கேது கண்டுபிடித்தது-வேத அறிவு
நெப்டியூன்,ப்ளுட்டோ கண்டுபிடித்தது-பகுத்தறிவு

ஜாதகப்பொருத்தம் பார்ப்பது-வேத அறிவு
HIV சோதனை செய்வது-பகுத்தறிவு

2000 வருடங்களாக ஒருவர் இமயமலையில் வாழ்கிறார்-வேத அறிவு
150 வருடங்களைத் தாண்ட வாய்ப்பேயில்லை-பகுத்தறிவு

எதை இழந்தாயோ அதை இங்கேயே இழந்தாய் .வறட்டு வேதாந்தம் பேசுவது-வேத அறிவு
இழப்பதற்கு ஒன்றுமில்லை.வெல்வதற்கு உலகமே இருக்கிறது,நம்பிக்கையூட்டுவது பகுத்தறிவு.

சத்துரு சம்ஹார யாகம் செய்வது வேத அறிவு
95 வயது வரை வாழ்ந்து காட்டுவது பகுத்தறிவு.

தீண்டாமையை வலியுறுத்துவது வேத அறிவு
அரசியல் அனாதைகளாக்குவது பகுத்தறிவு.

பின் குறிப்பு:
நண்பர் ஒருவர் என்னிடம் நான் "வேதிக் மேத்ஸ்"என்ற பயிற்சி வகுப்புகளை பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கிறேன் என்று சொன்னார்.நான் வேதிக் மேத்ஸ் என்றால் என்ன? என்று கேட்டதற்கு பத்து ரூபாய்க்கு புத்தகக்கடைகளில் விற்கும் "எளிய முறையில் கணிதம் பழகலாம் " புத்தகத்தில் இருந்து சில குறுக்கு வழிகளை எடுத்து விடுகிறார்.நான் அசந்து போனேன்.உங்க அட்டகாசங்களுக்கு ஒரு அளவே இல்லையா என்று நொந்து கொண்டே போட்டது தான் இந்தப்பதிவு.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்