கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, September 23, 2008

கோவியாருக்கு எச்சரிக்கை

பொறுத்துப்பொறுத்துப்பார்த்து வேறு வழியில்லாமல் தான் இதை எழுத வேண்டியதாகி விட்டது. தெரிந்து செய்கிறாரா,தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை. இனிமேலும் இதை சுட்டிக்காட்டாமல் இருந்தால் தமிழன்னை என்னை மன்னிக்க மாட்டாள். சுவாரஸ்யம் என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச்சொல் என்ன என்று கேட்டு இராம.கி அய்யா "சுவையாரம்" என்ற சொல்லை வழங்கினார். கேள்வி கேட்டவரே கோவியார் தான். இப்போது அவரே சுவையார்வம் என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். சுவையாரமா, ஆர்வமா எது சரி? கோவியாரின் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

கொஞ்சம் அரசியல்

எம்ஜியார் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை படிக்க நேர்ந்தது. திமுகவை விட்டு விலகிய பின் எம்ஜியார் சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல். அதில் போட்டியிட்ட மாயத்தேவரை விளிக்கும் போதெல்லாம் மாயன் என்றே விளித்தாராம்.அதனால் அவர் சாதியைக்கடந்தவராம். ஆனால் மாயன் என்ற பெயரில் மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டிருந்தவருக்கு மாயத்தேவர் என்ற பெயர் சூட்டி தேர்தலில் நிற்க அனுமதித்தவரே எம்ஜியார் தான்.சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்ளும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்ட திராவிட இயக்கங்களின் தலையில் மண் அள்ளிப்போடும் விதமாக சாதிப்பெயருடன் ஒருவரை தேர்தலில் நிற்க அனுமதித்தது தவறில்லையாம், சாதிப்பெயரை தவிர்த்துவிட்டு மேடையில் பேசியது உயர்வான செயலாம். என்னாங்கடா உங்க வார்த்தை ஜாலம்.

35 ஆண்டுகளுக்கு முன்பே சாதி அரசியலுக்கு வழிவகுத்தவர் எம்ஜியார்.இத்தனை வருடங்களில் சாதியில்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையிலும் கலைஞர் சென்ற சட்டமன்ற தெர்தலின் போது மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஒச்சாத்தேவர் என்ற வேட்பாளர் நிறுத்தப்பட்ட போது சாதி்ப் பெயருடன் கூடிய வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்ல மூ.மு.க கூட்டணியை விட்டு விலகியதும் வரலாறு.

அடுத்து சினிமா

சமீபத்தில் திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் அஞ்சாதே,மற்றும் வேட்டையாடு விளையாடு. இதே கதையுள்ள இரண்டு ஆங்கிலப்படங்களை பார்த்தேன் . DEVIL'S OWN, மற்றும் BONE COLLECTOR. அஞ்சாதே, டெவில்ஸ் ஓன் படத்தின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். வேட்டையாடு விளையாடு போன் கலெக்டரின் அப்பட்டமான காப்பி.

Monday, September 22, 2008

இலக்கிய மனமும், இளகிய மனமும்

புதுமைப்பித்தனின் நினைவில் நிற்கும் சிறுகதை ஒன்று. கணவனை இழந்துவிட்ட அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்ணொருத்தி மிகுந்த துயரத்தோடு நாட்களைக்கடத்திக்கொண்டிருக்கிறாள். அதைக்கண்டு மனம் வாடிய இளைஞன் ஒருவன் தன் காதலை அவளிடத்தில் சொல்கிறான். பரிதாபத்தில் பிறந்த உன் காதல் வேண்டாம் என மறுத்துவிடுகிறாள். இதுவரை கதை இயல்பாக இருக்கிறது. அதன்பின் அந்தப்பெண் அவனிடம் "உன் தியாகத்துக்கு என்னைப் பலியாடு ஆக்கிவிடாதே" என்று கூறுகிறாள். இப்படியும் ஒருபெண் சிந்திப்பாளா என்று எண்ணலானேன். இப்படி ஆழமாக சிந்திப்பதால் தான் புதுமைப்பித்தன் தமிழின் சி்றந்த இலக்கியவாதியாகப் போற்றப்படுகிறார்.

ஆனால் இவ்வாறில்லாமல்
"கண்ணுக்குள் பாவை போல் உருண்டிடும் உள்ளம்
கைம்பெண்ணுக்கும் உண்டென்று உணர்ந்திடுவாய்"
என்று எழுதினால் அது பிரச்சாரத்தன்மையுடையதாகி விடுகிறது , அதனால் இது இலக்கியம் இல்லை என்றாகி விடுகிறது. அதனால் இதை எழுதிய கலைஞர் இலக்கியவாதி இல்லை, என்ன கொடுமை?:-(.

இலக்கியச்சுவையும்,படித்து சிலாகிப்பதும் மட்டும் தானா படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.சமூகத்திற்கு எந்த வகையிலாவது உதவ வேண்டாமா?.அந்த வகையில் புதுமைப்பித்தனை விட கலைஞரே மேலானவராக எனக்குத்தோன்றுகிறார். எனது எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே ஈழத்தைச்சேர்ந்த இலக்கியவாதி தளையசிங்கம் கலைஞரைப் பற்றி மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.
"அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி"
(நன்றி-ராஜநாயஹம்)

மனித மனத்தினை ஆழ்ந்து ஆராய்ந்து பீராய்ந்து எழுதுவதை விட மனித மனத்திலே மாற்றத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களே பிடித்திருக்கிறது.

திராவிட மரம்


http://www.dravidianuniversity.ac.in/tree.html

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்