கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, November 27, 2008

இலங்கைக்கு ஒரு பண்டாரநாயகே,இந்தியாவுக்கு ஒரு அத்வானி.

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தந்தை சாலமன் பண்டாரநாயகே தான் இன்று இலங்கை பற்றி எரியக்கொள்ளி வைத்தவர்.ஆட்சியைப்பிடிக்கும் அதிகாரவெறியில் 'சிங்களா ஒன்லி' என்ற முழக்கத்தோடு சிங்கள மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தினார்.ஆட்சியையும் பிடித்தார்,சிங்களம் தான் ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த உடனேயே தமிழர்களின் எதிர்ப்பும் ஆரம்பித்தது.தங்களுடைய உரிமைகளும்,சுயமரியாதையும் பறிபோக ஆரம்பித்தவுடன் ஜனநாயக ரீதியில் போராட ஆரம்பித்தனர் தமிழர்கள். இராணுவ பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்க முனைந்த ஆரம்பித்த அதேகணத்தில் கொழும்பில் குண்டுவெடிக்க ஆரம்பித்தது.இன்றுவரை தொடர்கிறது. உலகின் உல்லாசபுரியாக இருந்திருக்க வேண்டிய நாடு , இன்று உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் ஓட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்தியாவிலும் ஒரு பண்டாரநாயகா இருக்கிறார்.அவர் பெயர் அத்வானி.இந்த நடமாடும் பிணத்தின் நாசகார சிந்தனைகளால் இந்தியா இன்று தாங்கொணா இன்னல்களை அனுபவித்து வருகிறது.சாதியால் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் வாழவகை செய்யும் மண்டல் கமிசனை அமுல்படுத்த வி.பி.சிங் அரசு முயன்ற போது அத்வானியின் உள்ளிருக்கும் சாத்தான் விழித்தது. பிராமணர்களுக்கு சமமாக மற்றவர்களும் வருவதா? அது இந்து மத தர்மத்திற்கு விரோமானதாயிற்றே? என்றெல்லாம் சிந்தித்து அந்த மண்டல் கமிசனை இல்லாது ஒழிக்க திட்டம் தீட்டினார்.அந்த திட்டத்திற்கு கிடைத்த பலியாடு, முஸ்லிம் மக்கள். பத்துபைசா பிரயோஜனம் இல்லாத பாபர் மசூதியை உடைத்த பொழுது இந்தியா என்னும் நாட்டை தான் நாம் உடைக்கப்போகிறோம் என்பதை அவர் உணரவில்லை.

பேரினவாதம்,மதவாதம் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவன் விரலைச்சூப்பிக்கொண்டா உட்கார்ந்திருப்பான்.காயம்பட்ட அவனது மனது எந்த ஒருகொடூர செயலையும் செய்ய துணிந்து விடுகிறது.எந்த ஒரு குற்றத்திற்கும் மோட்டிவ் (motive) ஒன்று உண்டு.இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு மோட்டிவ், அத்வானி அன்கோ தான் என்று கண்ணை மூடிக்கொண்டு கை காட்டலாம்.

அத்வானி மட்டுமல்ல அவர்தம் கொள்கைகளும் நடமாடும் பிணம் தான்.அந்தப்பிணங்களுக்கு மக்கள் என்றைக்கு சமாதி கட்டுகிறார்களோ அன்றைக்கு தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.

பி.கு:
இன உணர்வு,மொழியுணர்வை தூண்டி தான் திமுக முன்னோடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.ஆனால் எக்காலத்திலும் அவர்கள் பார்ப்பனர்கள் மேல் வன்முறையை ஏவிவிடவில்லை.அதற்குக்காரணம் இயல்பிலேயே அமைந்த தமிழனின் பரந்த மனப்பான்மையும், திராவிட இயக்கத்தலைவர்களின் எண்ணங்களை ஆளுமை செய்த காந்தியடிகளும் தான்.

Wednesday, November 26, 2008

சீனு அவர்களுக்கு பகிரங்க தந்தி

//சீனு said...
ம்ம்...அந்த நானூறு கோடிய உங்க கிட்ட கொடுத்திருந்தா என்ன புடுங்கியிருப்பீங்க? 350 கோடிய சுருட்டிட்டு 5 கோடியில பேருக்கு நலத்திட்ட உதவிங்கிற பேருல அதுலயும் கொள்ளை அடிச்சிருப்பீங்க.//

இந்தியா என்னும் மாட்டுக்கொட்டடியில் இருந்து எதையும் பிடுங்க முடியாது.தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் மதிப்புக்குறையாத வண்ணம் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.இப்போதும் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.முற்போக்கு எண்ணங்கொண்ட திராவிட இயக்கத்தலைவர்களே அதற்குக் காரணம்.

//காயடித்தால் மட்டும் போதாது. வீதியில் கட்டி வைத்து சாகும் வரை சவுக்கால் அடிக்க வேண்டும்.//

அனானி, மனிதநேயம் என்பதற்கு முன்னால் தேசியம்,தேசபக்தி என்பது எல்லாம் அவற்றின் மீது ஒன்னுக்கடிக்க கூட தகுதியில்லாதவை . உங்களைப் போன்ற ஆசாமிகளை கழுவில் ஏற்றினால் தான் நாடு விளங்கும்.

முற்போக்காளரையும் விஞ்சிய அதிமுற்போக்காளர்களுக்கு இந்தச்சுட்டி .
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=532

Friday, November 7, 2008

கறுப்பரசன் ஒபாமா

அமெரிக்கா என்றாலே பிரம்மாண்டம் தான்.நாட்டின் பரப்பிலும்,அறிவின் ஆழத்திலும் பிரம்மாண்டம் தான், இப்போது எங்களுடைய மனசும் பிரம்மாண்டம் தான் என்று உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறார்கள்.கறுப்பு,வெள்ளை பெற்றோருக்கு பிறந்த கலப்பின ஒபாமாவை அமெரிக்க அதிபர் ஆக்கியிருப்பதன் மூலம் புதியதோர் செய்தியை உலகிற்கு தெரிவித்துள்ளனர். இனமோ,நிறமோ ஒரு பொருட்டல்ல என்பதே அந்தச்செய்தி.இந்த நிகழ்வானது உலக சமுதாயத்திலே கறுப்பின மக்களுக்கு தன்னம்பிக்கையையும்,வெள்ளையின மக்களுக்கு புதிய பார்வையையும் அளிக்கும்.

இந்தியா , அமெரிக்காவை விட மாபெரும் ஜனநாயக நாடு,அதிலும் மதச்சார்பற்ற நாடு என்பதில் நமக்கெல்லாம் பெருமை தான்.மதச்சார்பற்ற நாடு என்பது அதிகாரபூர்வமாக இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை. நம் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் வாய்ந்த பிரதமர் பதவிக்கு ஒரு முஸ்லிமையோ, அல்லது தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து ஒருவரையோ வேட்பாளராக அறிவிக்கும் அளவுக்கு மனவளர்ச்சி எந்தக்கட்சிக்கும் இல்லை.அமெரிக்காவிலே நடந்துள்ள மாற்றமானது இந்தியாவிலும் எதிரொலிக்க வேண்டும்.அப்படிப்பட்ட ஒரு பொன்னாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

Saturday, November 1, 2008

இந்திய தேசியம்

இப்போது இருக்கும் இந்தியா ராமரும்,பரதனும் சேர்ந்து உருவாக்கியதா?இல்லை. வெள்ளையர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக எல்லை வகுத்து வைத்திருந்த மாபெரும் நிலப்பரப்பு தான் இன்றைய இந்தியா.இந்துமத நாடாக இருந்தாலும் நேபாளம் இன்று தனி நாடு , ஏனென்றால் அது வெள்ளையர்களால் கைப்பற்றப்படவில்லை .எனவே அது சுதந்திர நாடாக இருக்கிறது. 1934லேயே பர்மா தனி காலனி நிர்வாகத்தில் சென்றதால் அது தனி நாடாக இன்று இருக்கிறது, அதே போன்று தான் இலங்கையும். பர்மா,இலங்கை,மற்றும் இந்தியா மூன்றும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்திருந்தால் இன்று இந்தியா அகண்ண்ண்ட தேசமாக இருந்திருக்கக்கூடும்.ஆக இன்றைய இந்தியா என்பது வெள்ளையன் மென்று துப்பிய சக்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பாரத்மாத்தாக்கிஜே போடுவது சுத்த பத்தாம்பசலித்தனம்.

நேபாளம் இந்துநாடு தானே என்று அதை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடியுமா? முடியாது.இலங்கையில் இருக்கும் தமிழர்கள், இந்துக்கள் தானே மற்றும் ஸ்ரீலங்கா என்னும் பெயரே சமஸ்கிருதம் தானே , அதனால் அது இந்து தேசியத்தில் இருப்பது தானே முறை என்று சொல்லி இலங்கையை இணைத்துக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது . இதிலிருந்து இந்தியாவை இணைத்து வைத்திருப்பது அரசியலமைப்புச்சட்டம் தானே,தவிர இந்துமத உணர்வோ,கலாச்சார ஒற்றுமையோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வெள்ளைக்காரன் போட்ட பெவிகால் 50,60 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்து உள்ளது.அந்த பெவிகால் ஒட்டு உதிர்ந்துவிடும் சூழலை நோக்கி தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இந்துதேசியம் பேசிக்கொண்டு பிஜேபி போன்ற கட்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இந்துதேசியமானது இந்தியா சிதறுண்டு போவதிலிருந்து எத்தனை ஆண்டுகள் காப்பாற்றும் என்பது நம்முள் எழும் மிகப்பெரிய கேள்வி.

இந்தியாவில் வாழும் பலநூற்றுக்கணக்கான இனமக்களில் தமக்கான உரிமைகளையும்,மரியாதையையும் போராடிப்பெற்ற இனங்கள் பலவுண்டு(தமிழ்நாடு),போராடாமலே பெற்ற இனங்கள் சிலவுண்டு. என்னதான் போராடினாலும் அதையெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத இனங்கள் நிறையவே உண்டு.அப்படிப்பட்டவர்களை தனியாகப்பிரிந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.அதனால் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடாது. வெறும் 12,000 மக்கள்தொகை கொண்ட டுவாலு என்ற நாட்டுக்கு பிரிட்டன் விடுதலை அளித்துள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பேரினவாதம்,பெரும்பான்மை வாதம் போன்றவை நமக்கு நாமே குண்டு வைத்துக்கொள்ளும் திட்டம் தாம்.

தொடர்புடைய இடுகைகள்:
http://baluindo.blogspot.com/2008/10/blog-post_5013.html
http://www.maraneri.com/2008/10/blog-post_23.html

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்