கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Sunday, August 24, 2008

அதிகாரின்னா இப்படி இருக்கணும்

சின்னமனூர்: "எச்.ஐ.வி., (எய்ட்ஸ்) இல்லா தம்பதிகளுக்கு மட்டுமே திருமணம்' செய்து வைக்கப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, சின்னமனூர் மறவர் மக்கள் மன்ற திருமண மண்டப நிர்வாகிகள் அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் மறவர் மக்கள் மன்றத்தில் திருமணம் செய்யும் புதுமண தம்பதிகள் எச்.ஐ.வி., பரிசோதனை செய்ய வேண் டும் என்ற விதிமுறை உள்ளது.கடந்த வாரம் மணமகனுக்கு எச்.ஐ.வி., உள்ளது பரிசோதனையில் உறுதியானதால் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த மணமகளுக்கும், சின்னமனூரை சேர்ந்த மணமகனுக்கும் இங்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டது.


இந்த திருமண மண்டபத்தை 52 பேர் கொண்ட நிர்வாக குழு நிர்வகித்து வருகிறது. இக்குழுவினர் தலைவர் திருவாணன் 37 ஆண்டுகள் சுகாதாரத்துறையில் வட்டார சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மண்டப நிர்வாகியாக பொறுப்பேற்றதும் திருவாணன் "மறவர் சமூகத்தில் எச்.ஐ.வி., இல்லாத தம்பதிகளுக்கு மட்டுமே திருமணம்' என்று இவர் கொண்டு வந்த திட்டத்திற்கு 52 நிர்வாக குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.


இத்திட்டத்தை மறவர் சமுதாய மக்களும் ஏற்று திருமணத்திற்கு முன்னர் எச்.ஐ.வி., பரிசோதனை செய்தனர். இங்கு திருமணம் முடிக்கும் மற்ற சமுதாய மக்களும் இவர்களின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து எச்.ஐ.வி., பரிசோதனை செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகாலமாக இங்கு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு எச்.ஐ.வி., பரிசோதனை நடத்தப்பட்டாலும், கடந்த வாரம் தான் மணமகனுக்கு பரிசோதனையில் எச்.ஐ.வி., கண்டறியப்பட்டு ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.


சென்னையில் நடந்த சுகாதாரத்துறை கருத்தரங்களில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய டாக்டர் இந்த திருமண மண்டபத்தில் அமல்படுத்தப்படும் விதிமுறை குறித்து தெரிவித்த போது, அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி வரவேற்று உள்ளனர். இந்த குழுவினரின் நடவடிக்கையை முன் உதாரணமாக ஏற்று அரசு திருமணத்திற்கு முன்னர் எச்.ஐ.வி., பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


அனைவரின் வரவேற்பையும் பெற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ள இத்திருமண மண்டப தலைவர் திருவாணன், பொருளாளர் சிவானந்தன், துணை தலைவர் சந்திரன் கூறியதாவது: அனைத்து தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளதால் திருமணத்திற்கு முன்னர் எச்.ஐ.வி., பரிசோதனை என்ற திட்டத்தை நிச்சயத்திற்கு முன்னர் வைக்க திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் வைத்து 3 மாதங்கள் கழித்து திருமணம் முடித்தால் மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி., சோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். அடுத்து எங்கள் சமுதாய இளைஞர்களுக்கு இலவச எச்.ஐ.வி., விழிப்புணர்வு பரிசோதனை முகாம் கருத்தரங்கு நடத்த உள்ளோம். மற்ற சமுதாயத்தினரிடம் எங்கள் கருத்துக்களை திணிக்க முடியாது. ஆனால் பின்பற்றுபவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்வோம். அரசு இதனை சட்டமாகவே கொண்டு வரலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

நன்றி:தினமலர்

Wednesday, August 20, 2008

ஜோதிடத்தின் மகிமை

ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் இந்த செய்தியை படியுங்கள்.
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?news_id=4118&ncat=DI&archive=1&showfrom=8/18/2008
தன் மகனை தானே கொன்றுவிட்டு வாழ்க்கை முழுக்க நரகவேதனையை சுமந்துதிரியும் எண்ணற்ற அப்பாவிகள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.மகனையே கொலை செய்யும் அளவுக்கு மனதில் நஞ்சை விதைத்த ஜோசியக்காரருக்கும் இந்தக்கொலையில் பங்குண்டு, ஆனால் இப்படிப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுத்தது போல் தெரியவில்லை.

சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் முன் பிச்சைக்காரர்களுடன் சேர்த்து ஜோசியக்காரர்களையும் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். சீனா தங்கமாக குவித்துக்கொண்டிருக்கிறது. இதை நாமும் பின்பற்றினால் அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கலாம்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்