கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, February 4, 2009

ஏன் நான் கலைஞர் ஆதரவாளனாக இருக்கிறேன்?

மு.கு:சென்ற மாதம் 25ஆம் தேதியில் இந்தப்பதிவை எழுதி. அப்போது இருந்த கலைஞர் எதிர்ப்பு சூழ்நிலையால் வெளியிடாமல் வைத்திருந்தேன்.அப்போது இருந்த தயக்கம் இப்போது இல்லை.


மத்திய அரசே, தமிழகத்திற்கு கேபினட் அந்தஸ்து மந்திரி கொடுஎன்று தமிழக நகரங்களின் சுவர்களில் கதறும் வாசகங்களை இருபது ஆண்டுகளுக்கு முன் பார்த்திருப்போம்.மத்திய அரசின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதே கனவாக இருந்த ஒரு காலத்தில் அக்கனவை நனவாக்க திராவிட இயக்கத்தலைவர்கள் செய்த தியாகமும்,ஆற்றிய உழைப்பும் அளவிடற்கரியது. இனவுணர்வையும்,மொழியுணர்வையும் மக்களுக்கு ஊட்டி வளர்த்து, ஒன்று திரட்டி தமிழகத்திற்கு தேவையானதை சாதித்துக்கொள்ளும் ஆற்றல் , கலைஞரை விட்டால் வேறு யாருக்கு இருந்திருக்கும்.

இலங்கையில் நடக்கும் தமிழினப்படுகொலையை சாக்காக வைத்து கலைஞர் மீது காழ்ப்பை வெளிப்படுத்தும் போக்கு தமிழின ஆ ர்வலர்களிடையே தீவிரமாக வளர்ந்து வருகிறது.சிங்கள அரசுடன் போரிட்டு வெல்லும் வாய்ப்பு ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதில் பத்தில் ஒரு பங்கு வாய்ப்பு கூட இந்திய அரசை எதிர்த்து நின்றால் இந்தியத்தமிழர்களுக்கு இருக்காது.இந்த உண்மையை உணர்ந்து அண்ணா தனிநாடு கோரிக்கையை கைவிட்டார்.பின்னால் தமிழகத்தின் அதிகாரத்தைப் பிடித்ததும், இப்போது இந்திய அரசிலே மதிப்புமிக்க இடத்தைப் பெற்றிருப்பதும் செயலலிதாவின் நாடகத்தனமான சாதனை போன்றது அல்ல.பெற்றிருக்கும் அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித்திட்டங்களைப் பெறுவதில் மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு கலைஞரின் செயல்கள் இருக்கின்றன. இதற்குத்தான் கலைஞரை நம்புகிறோம்.இதை விட்டுவிட்டு ஈழப்பிரச்சினையில் தானே வலியச்சென்று பலியாடு ஆக வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

திருமா,சீமான் போன்ற இளந்தலைவர்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படமாட்டோம் என்று காட்டினாலும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.அது தலைவிதி.அப்படி உட்பட்டு என்ன செய்யமுடியுமோ அதைவிட அதிகமாகவே செயலாற்றுகிறார் கலைஞர்.

கலைஞர் குடும்பத்தினர் அரசியலில் நுழைவது பலரின் கண்களை உறுத்துகிறது.வாரன் பபெட் போன்ற வள்ளல்களுக்கே அதைக் கேள்விகேட்கும் அருகதை உள்ளது.மட்டுமின்றி செயா போன்ற நாலாந்தர நாரீமணிகளிடம் அரசியல் செய்ய அண்ணன் அழகிரி பாணியும் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்.

கலைஞரின் போராட்டகுணமும்,ஆதிக்கத்திற்கு அடிபணியாத தன்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.இந்திராவின் அவசர நிலைப்பிரகடனத்தை எதிர்த்து நின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு,அதனால் ஒருமுறை ஆட்சி கலைக்கப்பட்டது.அடுத்து ஈழத்தமிழருக்கு காட்டிய ஆதரவால் இன்னொரு முறை அவரது ஆட்சி காவு வாங்கப்பட்டது.ஆனால் மண்டல் கமிசன் பிரச்சினையால் கலைக்கப்பட்டதாக புதுக்கதை புனையப்படுகிறது.செயா,சு.சாமி,வெங்கட்ராமன் போன்ற தமிழ் எதிரிகளால் சட்டம்,ஒழுங்கு பிரச்சினை காரணம் காட்டி ஆட்சி கலைக்கப்பட்டது.செயாவைக் கண்டிக்க வக்கில்லாமல் கலைஞரின் மீது பாய்ந்து பிறாண்டுவதின் உளவியலை புரிந்துகொள்ள இயலவில்லை.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்