மு.கு:சென்ற மாதம் 25ஆம் தேதியில் இந்தப்பதிவை எழுதி. அப்போது இருந்த கலைஞர் எதிர்ப்பு சூழ்நிலையால் வெளியிடாமல் வைத்திருந்தேன்.அப்போது இருந்த தயக்கம் இப்போது இல்லை.
“மத்திய அரசே, தமிழகத்திற்கு கேபினட் அந்தஸ்து மந்திரி கொடு” என்று தமிழக நகரங்களின் சுவர்களில் கதறும் வாசகங்களை இருபது ஆண்டுகளுக்கு முன் பார்த்திருப்போம்.மத்திய அரசின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதே கனவாக இருந்த ஒரு காலத்தில் அக்கனவை நனவாக்க திராவிட இயக்கத்தலைவர்கள் செய்த தியாகமும்,ஆற்றிய உழைப்பும் அளவிடற்கரியது. இனவுணர்வையும்,மொழியுணர்வையும் மக்களுக்கு ஊட்டி வளர்த்து, ஒன்று திரட்டி தமிழகத்திற்கு தேவையானதை சாதித்துக்கொள்ளும் ஆற்றல் , கலைஞரை விட்டால் வேறு யாருக்கு இருந்திருக்கும்.
இலங்கையில் நடக்கும் தமிழினப்படுகொலையை சாக்காக வைத்து கலைஞர் மீது காழ்ப்பை வெளிப்படுத்தும் போக்கு தமிழின ஆ ர்வலர்களிடையே தீவிரமாக வளர்ந்து வருகிறது.சிங்கள அரசுடன் போரிட்டு வெல்லும் வாய்ப்பு ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதில் பத்தில் ஒரு பங்கு வாய்ப்பு கூட இந்திய அரசை எதிர்த்து நின்றால் இந்தியத்தமிழர்களுக்கு இருக்காது.இந்த உண்மையை உணர்ந்து அண்ணா தனிநாடு கோரிக்கையை கைவிட்டார்.பின்னால் தமிழகத்தின் அதிகாரத்தைப் பிடித்ததும், இப்போது இந்திய அரசிலே மதிப்புமிக்க இடத்தைப் பெற்றிருப்பதும் செயலலிதாவின் நாடகத்தனமான சாதனை போன்றது அல்ல.பெற்றிருக்கும் அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித்திட்டங்களைப் பெறுவதில் மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு கலைஞரின் செயல்கள் இருக்கின்றன. இதற்குத்தான் கலைஞரை நம்புகிறோம்.இதை விட்டுவிட்டு ஈழப்பிரச்சினையில் தானே வலியச்சென்று பலியாடு ஆக வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
திருமா,சீமான் போன்ற இளந்தலைவர்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படமாட்டோம் என்று காட்டினாலும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.அது தலைவிதி.அப்படி உட்பட்டு என்ன செய்யமுடியுமோ அதைவிட அதிகமாகவே செயலாற்றுகிறார் கலைஞர்.
கலைஞர் குடும்பத்தினர் அரசியலில் நுழைவது பலரின் கண்களை உறுத்துகிறது.வாரன் பபெட் போன்ற வள்ளல்களுக்கே அதைக் கேள்விகேட்கும் அருகதை உள்ளது.மட்டுமின்றி செயா போன்ற நாலாந்தர நாரீமணிகளிடம் அரசியல் செய்ய அண்ணன் அழகிரி பாணியும் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்.
44 comments:
நாங்கள் இன்னமும் கலைஞர் பக்கம் தான் ஆனால் ஈழம் விசயத்தில் அவரின் வெற்று அறிக்கைகள் கொஞ்சம் ஏமாற்றத்தை அளிக்கின்றன
//நாங்கள் இன்னமும் கலைஞர் பக்கம் தான் //
மிகவும் நன்றி உடன்பிறப்பு.கலைஞரை குற்றவாளிக்கூண்டிலே நிறுத்தும் முயற்சி அமோக வெற்றியடைந்துள்ளது.
பதவி விலகல் குறித்து ராமதாசிடம் கேட்டதற்கு 'நடப்பு கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஆட்சிக்காலம் முடிகிறதே. ஏன் பதவிவிலக வேண்டும்?' என்ற ரீதியில் பதில் அளித்துள்ளார்.இவர் நல்ல தலைவராம், கலைஞர் கெட்டவர் ஆகிவிட்டாராம்.
ஈழப் பிரச்சனையை சாக்காக வைத்து இட்லிவடை போன்றவர்கள் (இவர்களெல்லாம் தமிழ்ப் பற்றாளர்களாம்!) குறுக்கே புகுந்து கோல் அடிக்க முயற்சிக்கிறார்கள். அதை நாம் அனுமதிக்க இயலாது.
வருகைக்கு நன்றி சுந்தர்.
இட்லிவடை கூட்டத்தை நல்லவங்க என்று சொல்லவைக்கும் அளவுக்கு தமிழ் அறிவுசீவிகளின் உணர்ச்சிப்பெருக்கு எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.
”ஏன் நான் ஏமாளியாக இருக்கிறேன்” என்பதே சிறந்த தலைப்பாக இருக்கும்.
//“மத்திய அரசே, தமிழகத்திற்கு கேபினட் அந்தஸ்து மந்திரி கொடு” என்று தமிழக நகரங்களின் சுவர்களில் கதறும் வாசகங்களை இருபது ஆண்டுகளுக்கு முன் பார்த்திருப்போம்.//
அப்போது கேட்டது மக்களுக்கு எதாவது செய்ய!
//அக்கனவை நனவாக்க திராவிட இயக்கத்தலைவர்கள் செய்த தியாகமும்,ஆற்றிய உழைப்பும் அளவிடற்கரியது. //
உண்மை தான் தமிழினத்தையே அடமானம் வைப்பது என்பது சின்ன தியாகமா என்ன?
//ஒன்று திரட்டி தமிழகத்திற்கு தேவையானதை சாதித்துக்கொள்ளும் ஆற்றல் , கலைஞரை விட்டால் வேறு யாருக்கு இருந்திருக்கும்.//
சிறு மாற்றம்
ஒன்று திரட்டி தனது குடும்பத்துக்கு தேவையானதை சாதித்துக்கொள்ளும் ஆற்றல் , கலைஞரை விட்டால் வேறு யாருக்கு இருந்திருக்கும்.
//பத்தில் ஒரு பங்கு வாய்ப்பு கூட இந்திய அரசை எதிர்த்து நின்றால் இந்தியத்தமிழர்களுக்கு இருக்காது.//
இருந்திருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டே ஆகிருந்தால், இப்போது தான் அடுத்த தேர்தல் வரப்போகிறதே!
அதனால் ராஜினாமா பருப்பு வேகாதென்று குழந்தைக்கும் தெரியும்.
பதவி விலகல் குறித்து ராமதாசிடம் கேட்டதற்கு 'நடப்பு கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஆட்சிக்காலம் முடிகிறதே. ஏன் பதவிவிலக வேண்டும்?' என்ற ரீதியில் பதில் அளித்துள்ளார்.இவர் நல்ல தலைவராம், கலைஞர் கெட்டவர் ஆகிவிட்டாராம்.//
உங்களின் இந்தப் பதிவு என்னையும் நோக்கி சுட்டுவதாக அமைவதால் , நான் என்றைக்குமே இராமதாஸை நியாயப்படுத்தவும் இல்லை , அது என் நோக்கமும் இல்லை. நான் எவ்வளவு கலைஞரையும் , திமுகவையும் நியாயப்படுத்தி பேசினேன் என்பதை என் பதிவினை தொடர்ந்து படித்து வருபவர்கள் உணர்வார்கள். அதே சமயம் , நான் பாசக பற்றி பேசியபோது தெரிந்தோ , தெரியாமலோ தவறிழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய உடன்பிறப்பு கூட இன்று கலைஞரின் வெட்டி அறிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக சொல்கிறார் என்றால் கலைஞர் மேல் உடன்பிறப்புக்களாகிய நாம் கூட எந்தளவிற்கு வெறுத்துப் போயிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
இன்னும் நானும்கூட கலைஞர் பக்கம்தான் , , இனியாவது கலைஞர் ஒரு தீர்க்க முடிவெடுத்தால். இல்லாவிட்டால் நம்மை இழப்பதற்கான கலைஞரும் , கட்சியும்தான் ஏற்க வேண்டும், அது எனது தவறாகாது.
//அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித்திட்டங்களைப் பெறுவதில் மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு கலைஞரின் செயல்கள் இருக்கின்றன. //
உண்மைதான் வருமானம் வரும் துறைகள் எல்லாம் இவர்கள் கைக்கே போகுதேன்னு பிற மாநிலங்கள் புலம்ப தான் செய்கின்றார்கள்
//ஈழப்பிரச்சினையில் தானே வலியச்சென்று பலியாடு ஆக வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?//
அதானே! கழகத்துக்கு மற்றவர்களை பலி கொடுப்பது தானே வழக்கம்(உதாரணம் மதுரை தினகரன்) தானே எப்படி பலியாவது
//திருமா,சீமான் போன்ற இளந்தலைவர்கள் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படமாட்டோம் என்று காட்டினாலும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.அது தலைவிதி.அப்படி உட்பட்டு என்ன செய்யமுடியுமோ அதைவிட அதிகமாகவே செயலாற்றுகிறார் கலைஞர்.//
அதைவிட அதிகமாக என்றாலும் சட்ட மீறல் தானே!
என்ன நடக்குது இங்கே?
//கலைஞர் குடும்பத்தினர் அரசியலில் நுழைவது பலரின் கண்களை உறுத்துகிறது.வாரன் பபெட் போன்ற வள்ளல்களுக்கே அதைக் கேள்விகேட்கும் அருகதை உள்ளது.//
ஹாஹாஹாஹா
//மட்டுமின்றி செயா போன்ற நாலாந்தர நாரீமணிகளிடம் அரசியல் செய்ய அண்ணன் அழகிரி பாணியும் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம்.//
அண்ணே எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிசுக்குகோங்க!
ஈரோட்டுக்கு ஆட்டோ அனுப்ப சொல்லிராதிங்க!
//ஈழத்தமிழருக்கு காட்டிய ஆதரவால் இன்னொரு முறை அவரது ஆட்சி காவு வாங்கப்பட்டது.//
அதனால் இம்முறை ஆட்சியை காவு கொடுக்க விரும்பாத தலைவர்................
...............................
கோடிட்ட இடங்களை நிரப்பி கொள்ளலாம்
//செயாவைக் கண்டிக்க வக்கில்லாமல் கலைஞரின் மீது பாய்ந்து பிறாண்டுவதின் உளவியலை புரிந்துகொள்ள இயலவில்லை.//
செயாவை கண்டித்தால், கலைஞரை பிறாண்டும் உரிமை கொடுக்கப்படுமா?
லாஜிக் புரியலையே!
சாலி சம்பர் - நீங்கள் சொல்வது சரி, கலைஞர் மீது சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவரின் காலத்தில் தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் இருந்தது போன்ற விஷயங்களும் இயற்கையிலேயே தமிழுனர்வு இருப்பதாலும் தான் கலைஞரை பலரும் இன்னும் நம்பியிருக்கிறோம்..
வலிய சென்று பலியாக வேண்டுமா என்று உங்கள் கேள்வி கூட நியாயம தான் . ஆனா சற்று யோசியுங்கள்,
ஈழப்பிரச்சனையில் இந்த 5 மாதங்களில் அவரின் நிலைப்பாட்டை யோசியுங்கள்..
கலைஞர் நல்ல முடிவு எடுப்பார் என்று அக்டோபரில் பதிவு எழுதிய நானும் ஒரு சலிப்பில் இந்த வாரம் "உளியின் ஓசை கேட்ட காதுகளுக்கு தமிழன் ஒப்பாரி கேட்கலையோ" எழுதினேன்.. காரணம் என்னவென்றால். அவர் நினைத்தால் ஏதாச்சும் செய்யலாம்.. அதனால் தான்..
இந்தத்துறை வேண்டும் என்று மத்திய அரசை கலைஞர் எந்தளவுக்கு சென்று நிர்பந்தித்து வாங்கினார் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே.. அதில் தவறில்லை.. அவர்கள் கூட்டணியில் அப்படி கேட்டு வாங்கினார்.. தமிழகத்துக்கு முக்கிய துறைகள் வந்தது.. இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாலங்கள் வந்தது, பல தொழில்சாலைகள், ஐ டி துறையில் ஏற்றம் என்பதெல்லாம் இப்படி தமிழகத்திற்கு இந்த துறைகளை கேட்டுப்பெற்றதால் தான்.. ஆனால் நம்மவர்கள் அதை மனதில் வைக்காது, அவர் கேட்டு பெற்றார் என்பதை குற்றமாக சொல்லுவார்கள்..
ஆனால் இலங்கை பிரச்சனையில் கலைஞரின் நடவடிக்கை அயர்ச்சி தருகிறது
ஆட்சி கவிழ்க்க சதி , சதி என்று
தொடர் அறிக்கை விடுவது அயர்ச்சியை தருகிறது., ஒரு சாரார் அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள் என்ற போது ஏன் தேவையின்ற என் ஆட்சியை கவிழாதா என்று பார்க்கிறார்கள் என்று அறிக்கை விடவேண்டும்? பதவி எனக்கு முக்கியமில்லை என்று சொல்லிக்கொண்டே..
அப்புறம் இறுதி தீர்மானம் என்று சொல்லிவிட்டு இப்போது ஏன் மீண்டும் தீர்மானம் , பொதுக்கூட்டம் இது போன்ற முன்னுக்கு பின் செயல்கள், அறிக்கைகள் தான் அதிக சலிப்பை தருகிறது.. நீங்கள் சொன்னது போல இருக்கும் கூட்டத்துக்கு தெம்பை தருகிறது.. வாய்க்கு அவல் தருகிறது..
இதுபோன்ற செய்கைகள் தான் .. ஏன் கலைஞர் இப்படி செய்கிறார் என்று விமர்சிக்க வைக்கிறது..
தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எனக்கு கலைஞரரிடம் உள்ள வருத்தம் என்ன வென்றால் தமிழ் செல்வனுக்கு கவிதை எழுதியது தான். அந்த மோசமான புலிக்கு கவிதை எழுதியிருக்க கூடாது. இன்று கலைஞரை திட்டி திரிபவர்கள் இந்த நன்றி கெட்ட புலிகளே.
வாலு,ஏன் இந்த கொலைவெறி?
நீங்கள் எங்கேயாவது கலைஞரை பாராட்டிப் பேசி பார்த்ததில்லை.அதனால் ஈழப்பிரச்சினையில் அவரை அம்பலப்படுத்த உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்ற போதிலும் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
//”ஏன் நான் ஏமாளியாக இருக்கிறேன்” என்பதே சிறந்த தலைப்பாக இருக்கும்.//
15000ரூபாய் சம்பாதித்து அதில் வாரம் 1000,2000 தண்ணி அடிக்க செலவு செய்வதை சொன்ன போது உங்கள் மீது பரிதாபமாக இருந்தது,ஆனால் உங்களுக்கு அது பெருமையாக இருக்கலாம்.
உங்களுக்கு நான் ஏமாளியாய் தோன்றுவதில் வருத்தம் ஒன்றுமில்லை.
//15000ரூபாய் சம்பாதித்து அதில் வாரம் 1000,2000 தண்ணி அடிக்க செலவு செய்வதை சொன்ன போது உங்கள் மீது பரிதாபமாக இருந்தது,ஆனால் உங்களுக்கு அது பெருமையாக இருக்கலாம்.
உங்களுக்கு நான் ஏமாளியாய் தோன்றுவதில் வருத்தம் ஒன்றுமில்லை.//
தான் சம்பாரிப்பதை செலவளிப்பவனை பார்த்து பரிதாபப்படுவது ஏமாளித்தனமா?
கையில் காசில்லாமல் அரசியலுக்கு வந்து இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவரை புகழ்வது ஏமாளித்தனமா?
சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு கோடி சொந்த காசில் கொடுத்தாராமே!
புல்லரிக்கது!
அவருக்கு மட்டும் பணம் காய்க்கும் மரம் இருக்கும் இடம் தெரியுமோ!
எங்கேயேனும் புகழ்ந்தால் தான் கலைஞரை விமர்சிக்கும் தகுதி எனக்கு வருமா?
சரி புகழ்கிறேன், என் வாழ்விலேயே இப்படியொரு குடும்பபாசமிக்க தந்தையை எங்கேயும் பார்த்ததில்லை.
போதுமா!
மதிபாலா வருகைக்கு நன்றி.கிட்டத்தட்ட உங்களுடைய அனைத்துப்பதிவுகளையும் வாசித்திருப்பேன்.இந்தியாவின் சட்டதிட்டங்கள்,வெளியுறவுக்கொள்கை
போன்றவற்றில் மேம்போக்கான பார்வை கொண்டு கலைஞரை குற்றம் சாட்டுவது உணர்ச்சிவசப்பட்ட ஒன்று.
தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் தமிழ் இனவுணர்வாளர்கள் நினைப்பது எல்லாம் நடக்கும்.பெரியார்,அண்ணா,கலைஞர் இங்கு செய்ததை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் செய்யும் போது தமிழ்நாடு தனிநாடாகும்.
மலம் தின்னும் கருணாநிதிக்கு ஆதரவளிக்கும் மலப்புழுக்களே...
தமிழர்களின் பிணங்களின் மேலேரி ராஜ்ஜியம் நடத்தும் நாதாரிக் குடும்பத்தில் (sun-TV குடும்பம்) எவனுக்கும் இனி தமிழன் என்ற சொல்லை இனி பயன் படுத்தாதீர்கள், ராமதாசையும் யாரும் இங்கு ஆதரிக்கவில்லை.
நீங்க நல்லா இருகோணும் சாமிகளா...!!
//அப்போது கேட்டது மக்களுக்கு எதாவது செய்ய!//
மக்களுக்கு ஒன்னுமே செய்யவில்லையா என்ன? . கலைஞரும்,செயாவும் செய்த பணிகளை பட்டியலிட்டால் கலைஞர் பலபடிகள் முன்னே இருப்பார் என்ற ஒன்று தான் அவரை ஆதரிக்கக்காரணம்.
//உண்மை தான் தமிழினத்தையே அடமானம் வைப்பது என்பது சின்ன தியாகமா என்ன?//
தமிழினத்தை காட்டிக்கொடுத்தது எம்சியாரும்,செயாவும் தான். நீங்கள் தலைகீழாக சொல்கின்றீர்கள்.அரிய ஆரிய மூளை உங்களுடையது.
//சிறு மாற்றம்
ஒன்று திரட்டி தனது குடும்பத்துக்கு தேவையானதை சாதித்துக்கொள்ளும் ஆற்றல் , கலைஞரை விட்டால் வேறு யாருக்கு இருந்திருக்கும்.//
முதலில் குடும்பம் , பிறகு தான் சமூகப்பணி.
//இருந்திருக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டே ஆகிருந்தால், இப்போது தான் அடுத்த தேர்தல் வரப்போகிறதே!
அதனால் ராஜினாமா பருப்பு வேகாதென்று குழந்தைக்கும் தெரியும்.//
பதவி விலகினாலும் உங்களை மாதிரி ஆளுங்க திட்டத்தான் போறீங்க,விலகலைன்னா எங்காளுங்களே திட்டித்தீர்க்குறாங்க.அவர் என்ன தான் செய்வார்?
//உண்மைதான் வருமானம் வரும் துறைகள் எல்லாம் இவர்கள் கைக்கே போகுதேன்னு பிற மாநிலங்கள் புலம்ப தான் செய்கின்றார்கள்//
இந்தப்புலம்பலுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம என்னைப் புலம்ப விட்டுட்டீங்களே.
//அதானே! கழகத்துக்கு மற்றவர்களை பலி கொடுப்பது தானே வழக்கம்(உதாரணம் மதுரை தினகரன்) தானே எப்படி பலியாவது//
மாணவிகளை எரித்தவர்களை தூக்கில் போட்டிருந்தால் அந்த துயரச்சம்பவம் நடந்திருக்காது.
//மக்களுக்கு ஒன்னுமே செய்யவில்லையா என்ன?//
ஏன் செய்யவில்லை, மக்களுக்கு ”அதிமுக்கிய” தேவையான இலவச தொலைக்காட்சி பெட்டியை கொடுத்தாரே!
//தமிழினத்தை காட்டிக்கொடுத்தது எம்சியாரும்,செயாவும் தான். நீங்கள் தலைகீழாக சொல்கின்றீர்கள்.அரிய ஆரிய மூளை உங்களுடையது.//
அடடே கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தது அவுங்க ரெண்டு பேரும் தானா! மன்னிச்சுகோங்க, எனக்கு வரலாறு தெரியல! :)
//முதலில் குடும்பம் , பிறகு தான் சமூகப்பணி.//
தொண்டர்களும் அப்படி இருந்தால் சந்தோசம் தானே!
//பதவி விலகினாலும் உங்களை மாதிரி ஆளுங்க திட்டத்தான் போறீங்க,விலகலைன்னா எங்காளுங்களே திட்டித்தீர்க்குறாங்க.அவர் என்ன தான் செய்வார்?//
தவறான முன்முடிவு,
என்னை போல் நடுத்தரவாதிகள், அடுத்து யார் அதிகாரத்தில் உட்காருகிறார்களோ அவர்களின் குறைகளைத் தான் விமர்சிப்போம்
//மாணவிகளை எரித்தவர்களை தூக்கில் போட்டிருந்தால் அந்த துயரச்சம்பவம் நடந்திருக்காது. //
கொலைக்கு கொலை தண்டனையாகாது!
அவர்களுக்கு குறைந்தபட்சம் ஆயுள்தண்டனை கிடைத்தது. ஆனால்
இந்த விசயத்திலும், தா.பாண்டியன் கொலை விசயத்திலும் ..........................
கோடிட்ட இடங்களை நிரப்புக
// //கலைஞர் குடும்பத்தினர் அரசியலில் நுழைவது பலரின் கண்களை உறுத்துகிறது.வாரன் பபெட் போன்ற வள்ளல்களுக்கே அதைக் கேள்விகேட்கும் அருகதை உள்ளது.//
ஹாஹாஹாஹா//
முதலாளித்துவ சமூகத்தில் வாழ்ந்துகொண்டு கலைஞர் சொத்து சேர்த்ததைச்சொல்லி புலம்புவது அர்த்தமற்றது.நீங்களோ,நானோ பெரும்பணம் சேர்க்கக்கூடாது என்று யாரும் இங்கே தடுத்துக்கொண்டிருக்கவில்லை.அதற்கான
வசதி,வாய்ப்புகளை உருவாக்கித்தரவேண்டியது அரசின் கடமை.அக்கடமையை கலைஞரை விட சிறப்பாகச் செய்யக்கூடியவர் யாருமில்லை என்பது தான் என் முடிவு.
//செயாவை கண்டித்தால், கலைஞரை பிறாண்டும் உரிமை கொடுக்கப்படுமா?
லாஜிக் புரியலையே!//
செயாவையும் கண்டித்தால் நீங்கள் ஒரு நடுநிலைக்குஞ்சு என்று சொல்லலாம்.கலைஞரை மட்டும் கண்டித்தால் ஆரியக்குஞ்சு,செயாவை மட்டும் என்றால் திராவிடக்குஞ்சு.நீங்க எந்த வகைன்னு தெளிவு படுத்துங்க.
//அண்ணே எதாவது தப்பா பேசியிருந்தா மன்னிசுக்குகோங்க!
ஈரோட்டுக்கு ஆட்டோ அனுப்ப சொல்லிராதிங்க!//
செயா பாணி அரசியலுக்கு எதிர்வினை தான் அழகிரி பாணி அரசியல்.
//
செயாவையும் கண்டித்தால் நீங்கள் ஒரு நடுநிலைக்குஞ்சு என்று சொல்லலாம்.கலைஞரை மட்டும் கண்டித்தால் ஆரியக்குஞ்சு,செயாவை மட்டும் என்றால் திராவிடக்குஞ்சு.நீங்க எந்த வகைன்னு தெளிவு படுத்துங்க.//
ஆரிய,திராவிடவெல்லாம் வேண்டாம்
நான் வெறும் ”குஞ்சு” ன்னு வச்சிக்கேங்களேன்
//செயா பாணி அரசியலுக்கு எதிர்வினை தான் அழகிரி பாணி அரசியல். //
கத்திக்கு கத்தி மாதிரி, அது சரி இழப்பு அப்பாவிக்கு தானே!
அரசியலில் இன்னைக்கு அடித்து கொள்பவர்கள் நாலை சேர்ந்து கொள்கிறார்கள்!
தொண்டன்,துண்டு கூட மிஞ்சாமல் தெருவில் திரிகிறான்
//ஈழப்பிரச்சனையில் இந்த 5 மாதங்களில் அவரின் நிலைப்பாட்டை யோசியுங்கள்..
கலைஞர் நல்ல முடிவு எடுப்பார் என்று அக்டோபரில் பதிவு எழுதிய நானும் ஒரு சலிப்பில் இந்த வாரம் "உளியின் ஓசை கேட்ட காதுகளுக்கு தமிழன் ஒப்பாரி கேட்கலையோ" எழுதினேன்.. காரணம் என்னவென்றால். அவர் நினைத்தால் ஏதாச்சும் செய்யலாம்.. அதனால் தான்..//
வருகைக்கு நன்றி வீ.எம்.
கலைஞர் தன் கையறு நிலையை எண்ணி விக்கித்துப்போய் இந்த ஆட்சியே வேண்டாம் என்று உதறி விட்டுச்செல்லலாம்.அப்படி ஒரு தோற்றத்தை,சூழ்நிலையை இந்த அட்டைக்கத்தி வீரர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.முத்துக்குமாரின் மரணம் தமிழ்நெஞ்சங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டதன் மூலம் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்கிறார் என்று கருதினாலும் , மேலும் பல உயிர்கள் பலியாவதை தடுத்துள்ளார் என்பதையும் எண்ணவேண்டும்.
//தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எனக்கு கலைஞரரிடம் உள்ள வருத்தம் என்ன வென்றால் தமிழ் செல்வனுக்கு கவிதை எழுதியது தான். அந்த மோசமான புலிக்கு கவிதை எழுதியிருக்க கூடாது. இன்று கலைஞரை திட்டி திரிபவர்கள் இந்த நன்றி கெட்ட புலிகளே.//
சந்திலே சிந்து பாடும் அனானி,
ஈழத்தமிழர்களுக்கு பிரபாகரன்,இந்தியத்தமிழர்களுக்கு கலைஞர்.இதிலே எந்த மயக்கமும் எங்களுக்கு இல்லை.
விடுதலைபுலிகள் வீழ்ச்சி என்பது தவிர்க்க முடியாதது.ஏனெனில் அவர்களை காப்பாற்ற கலைஞரென்ன, காங்கிரஸ் நினைத்தால் கூட முடியாது.ஏனெனில் புலிகள் காட்டிய தண்ணிக்கு பதிலுக்கு தருவதில் இந்திய ராணுவமும் 'ரா'வும் உறுதியாக உள்ளன.எப்படி போலிஸை மீறி மாநில அரசு செயல்பட முடியாதோ ராணுவத்தை மீறி மத்திய அரசும் செயல்பட முடியாது.
இப்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்து புலிகளை காப்பாற்றினாலும் புலிகள் என்ன சும்மாவா இருப்பார்கள் ஆயுதம் சேர்த்து மீண்டும் சண்டையை ஆரம்பிப்பார்கள். புலிகள் ராணுவரீதியில் வெல்லவது என்பது இயலாத காரியம். ஆதலால் போர் என்பது தொடர்ந்து நடக்கும், தமிழனின் கஷ்டம் தீரவே தீராது. புலம் பெயர்ந்தோர் இப்படியே போருக்கு ஆதரவாக பிளாக் எழுதிக் கொண்டு ஊர்வலம் போய்க் கொண்டே இருப்பார்கள். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழன் கதி?
ஆதலால், எப்படியாவது புலிகளின் ஆயுத போராட்டத்திற்கு முடிவு வந்து,இலங்கையில் அமைதி ஏற்பட்டால் நல்லது. அப்போது கலைஞர் தலையிட்டு தமிழர்களுக்கு உரிமை பெற்று தருவார் என நம்புகிறேன்.அதற்காக வேணும் அவர் பதவியில் இருக்க வேண்டும்.புலிகளுக்கு உதவுவதில்தாம் காங்கிரஸூக்கும் இந்திய ஆர்மிக்கும் பிரச்சனை.அப்பாவி தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் அல்லவே. தனிநாட்டுக் கனவினால் ஏற்கனவே 30 வருடங்களாக ஒரு தலைமுறைக்கே அழிவு நிகழ்ந்து விட்டது. இப்போது நிஜத்தை சந்திக்க வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. அப்போது அம்மையார் ஆட்சி செய்தால் இலங்கை தமிழனுக்கு ஒரு உதவியும் கிட்டாது. இதற்காக வேணும் கலைஞர் பதவியில் நீடிப்பது அவசியம். இது புரியாமல் உணர்ச்சிவசப்படுவர்களை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை.கலைஞர் ஒரு ராஜதந்திரி, அவருக்கு தெரியாத எப்போது எதை செய்ய வேண்டுமென?
//கலைஞர் ஒரு ராஜதந்திரி, அவருக்கு தெரியாத எப்போது எதை செய்ய வேண்டுமென?//
வருகைக்கும்,நல்ல கருத்துக்கும் நன்றி.
சந்திலே சிந்து பாடும் அனானி
ஈழத்தமிழர்களுக்கு பிரபாகரன் இந்தியத்தமிழர்களுக்கு கலைஞர்.இதிலே எந்த மயக்கமும் எங்களுக்கு இல்லை.
இந்தியத்தமிழர்களுக்கு கலைஞர்.இதிலே சந்தேகமே இல்லை. ஈழத்தமிழர்களுக்கு பிரபாகரன் அல்ல. கலைஞரே சொல்லிவிட்டாரே புலிகள் வேறு இலங்கை தமிழர் வேறு என்று.
//கலைஞரே சொல்லிவிட்டாரே புலிகள் வேறு இலங்கை தமிழர் வேறு என்று.//
செயாவைப்போல் கறாராக கலைஞரால் இப்படி சொல்ல முடியாது.அவருடைய இயல்பு அப்படி.புலிகள் மற்ற போராளிக்குழுக்களுடனும்,மற்ற அமைப்புகளுடனும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று தான் கூறியுள்ளார்.இப்போது உள்ள நிலைக்கு ஒற்றுமையின்மையே காரணம் என்ற அளவில் தான் புலிகளை குறை கூறியுள்ளாரே தவிர , நீங்கள் சொல்லும் படி இல்லை என்றே நினைக்கிறேன்.
//செயாவைக் கண்டிக்க வக்கில்லாமல் கலைஞரின் மீது பாய்ந்து பிறாண்டுவதின் உளவியலை புரிந்துகொள்ள இயலவில்லை.//
ஏதோ ஒரு பதிவில் ஈழம் குறித்த ஜெயாவின் எதி(ரி)ர் நிலைப்பாடு சொல்லப்பட்டது.மனதுக்கு வருத்தமளித்தாலும் அது அவருடைய நிலைப்பாடு எனும் போது எதுவும் சொல்வதற்கில்லை.
கலைஞரின் நிலை அப்படியல்ல.முதலாவதாக தமிழக முதல்வர் என்ற அடிப்படையில் மக்கள் தங்கள் கோசங்களை அவர் முன் வைக்கிறார்கள்.MP பதவி விலகல் துவங்கி அவரது நிலைப்பாடும் அரசியல் முரண்களும் ஆழ்ந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவே புலப்படுகிறது.எல்லோரும் சேர்ந்து ஒரு புது அமைப்பை உருவாக்கும் போது அதனை முறியடிக்கும் விதமாக பரணில் போடப்பட்ட பழைய உரிமை அமைப்பை தூசி தட்டிமக்கள் ஒற்றுமையைக் குலைக்கப் பார்க்கிறார்.அவரது தமிழகம் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் பாராட்டுக்குரியதே.ஆனால் ஈழம் சார்ந்த அவரது நிலைப்பாடு கழக அனுதாபம் கொண்டவர்களுக்கு வருத்தமே அளிக்கிறது.பதவிக்காக வேண்டி அவர் தடுமாறுகிறார் என்பது சரியல்ல என்பது எனது எண்ணம்.அதற்கு மாறாக இதில் முழு மனதுடன் செயல்படாததும் வெளிப்படையாகத் தெரிகிறது.காரணங்கள் அவருக்கே வெளிச்சம்.
வால் பையன்,
கலைஞர் என்ன செய்தால் உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னால், நாங்களும் செய்ய சொல்லிக் கேட்கலாம்.
//வால் பையன்,
கலைஞர் என்ன செய்தால் உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னால், நாங்களும் செய்ய சொல்லிக் கேட்கலாம். //
குடும்பத்தை காக்க வேண்டியது குடும்ப தலைவரிம் கடமை தான் அதற்காக குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பதவி கொடுப்பது, தி.மு.க பொது அரசியல் கட்சியல்ல குடும்ப வளர்ச்சி கட்சி என பொருள்படுகிறது.
மத்திய அரசுடன் கூட்டணி என்பது மாநில மக்களுக்கு கூடுதல் சலுகைகளை வாங்கி தருவதற்கே மக்களின் உயிர்களை வாங்குவத்ற்கல்ல!
இவையெல்லாம் கழக உறுப்பினர்களுக்கே தெரியும். என்னிடமும் கேட்பது ஏன்?
//MP பதவி விலகல் துவங்கி அவரது நிலைப்பாடும் அரசியல் முரண்களும் ஆழ்ந்து கவனிப்பவர்களுக்கு நன்றாகவே புலப்படுகிறது.//
வாங்க நடராஜன்,
கலைஞர் ஆதரவு இல்லாமலேயே மத்திய அரசு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் சூழ்நிலை இப்போது நிலவுகிறது.எனவே கலைஞரின் பதவிவிலகல் மத்திய அரசை உலுக்கிப்பார்க்காது.பதவி விலகி ஆட்சியைக்கவிழ்க்க முடியும் என்றாலும் அவ்வாறு செய்து இந்திய தேசிய அரசியலில் இருந்து தமிழகம் தன்னைத் துண்டித்துக்கொள்ளும் நிலை தமிழக நலனுக்கு உகந்தது அல்ல.
அதே சமயத்தில் ராமதாசு அவர்கள் பதவி விலகாமலேயே கூக்குரல் இடுவதும்,ராமதாசை விட கில்லாடி வைகோ அவர்கள் செயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டே ஒப்பாரி வைப்பதும் மாபெரும் முரண்கள்.இப்படிப்பட்டவர்கள் ஒன்றுகூடி ஒரு அமைப்பைத் தோற்றுவித்து. கலைஞரைத் தனிமைப்படுத்தி குற்றவாளிக்கூண்டிலே நிறுத்தப்பார்க்கிறார்கள்.
தேனியார்,
அபிஅப்பா பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.
வருகைக்கு நன்றி.
ஆமாம் சாலியார்! என பதிவிலே தேனியார் போட்ட இரண்டு பின்னூட்டமும் இரு நல்முத்துக்கள்! இருங்க அதை காபி பேஸ் செய்கிறேன் இங்கே!
//தேனியார் said...
ஒரு நல்ல பதிவுக்கான அறிகுறி.
இந்த விசயத்தை பொருத்து நான் பாமரன் பார்வையில் இருக்கிறேன்.
ஈழ விசயம் என்பது ஒரு அயல் நாட்டு பிரச்சினை.
இதில் கலைஞரோ, இந்தியாவோ எந்த அளவில் தலையிடலாம்?
கண்மூடித் தனமாக தலையிடலாம் என்றால், காஷ்மீர் விசயத்தில் பாகிஸ்தான் தலையிடுதல் தவறா?
ஆதரிக்கிறமோ இல்லையோ ஆனால் ஜெயலலிதா போல் கண்மூடித்தனமாக எதிர்ப்பது எந்த விதத்தில் ஞாயம்?
ஒரு தலைவராக இருந்து கொண்டு வெளிப்படையான ஆதரவு என்பது நாட்டுக்கு நலனா? உமக்கும் எமக்கும் தெரிந்த பல சின்ன விசயங்கள் விஷயங்களில் ஊறித்திளைத்த கலைஞருக்கு தெரியாமல் இருக்குமா?
இருக்கும். அவர் பட்டும் படாமல் ஈழ மக்களை காக்கும் செயலில் ஈடுபடுவார் என்றே நம்புகிறேன். நம் பதிவர்களுக்காக ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு செய்ய இது சமைல் குறிப்பு அல்ல என்பது என் வாதம்.
ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா நல்லவர் என்று யாரும் எண்ணினால் அது "கட்டுச் சோற்று பெருச்சாளியே"
பக்கத்து மாநில விசயத்திலேயே அடக்கி வாசிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும் பொழுது, அயல் நாட்டு விவகாரத்தில் எந்தளவு செல்லலாம் என்று யாராவது விளக்கினால் நல்லது.
பாலஸ்தீன் விசயத்தில் யாசர் அராபத் அமைதி பேச்சு வார்த்தை என்று அறிக்கையில் மட்டு சொல்லிக் கொண்டு போராளிகளுக்க உதவி செய்து கொண்டு இருந்தார்.போராளிகளுக்குத் தெரியும், அராபத் நல்லவரென்று.ஆனால் நம் பதிவர்கள் போன்ற ஊடகம் வழி சென்ற மக்கள் அவரை துரோகி என்றார்கள்.இஸ்ரேலிடம் விலை போயவிட்டார் என்றார்கள். ஆனால் அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, அவர் எந்தளவுக்கு போராளிகளுக்கு உதவினார் என்று.
சில பதிவர்களைப் போன்று கலைஞரும் எடுத்தோம் கவுத்தோம் என்று செயல்பட்டால், பெரிதாக என்ன நடக்கும். கலைஞர் ஆட்சி கவிலும். ஜெயா வருவார். ஈழத் தமிழனுக்கு கிடைக்கும் மறைமுக உதவிகூட கிடைக்காமல் போகும்.
அப்போ குத்துதே குடையுதே என்றால் யாருக்கு லாபம்.
சிந்திப்பீர்.பதிவிடுவீர்.
என்னைப் பொருத்து கலைஞர், மூளையுள்ள தமிழ் போராளி.
February 10, 2009 1:56 PM
//தேனியார் said...
இதே ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால், நினைக்கவே பதறுகிறது.
உடன் பிறாவாத் தம்பி வைகோவுக்கு ஜெயிலில் களி தின்று கொண்டு இருப்பார்.
உண்ணாவிரதம் இருந்த திருமா காணாமலே போய் இருப்பார்.
வீரன் இராமதாஸ் ஏதாவது கிளினிக்கில் ஊசி போட்டுக் கொண்டு இருப்பார்.
நெடுமாறன் நெஞ்சடைத்து புலம்பிக் கொண்டு இருப்பார்.
சோவும், சுப்பிரமணிய சுவாமியும் கெக்கரித்து சிரித்துக் கொண்டு இருப்பார்.
ஹிட் கொடுக்கும் பதிவர்கள் தேள் கொட்டி விழித்துக் கொண்டு இருப்பர்.
வெளிநாட்டில் வாழும் ஈழப்பதிவர்கள் அடடா தப்பு பண்ணிட்டமே,
"கலைஞர் ரொம்ப நல்லவரில்ல" என்று உச்சுகொட்டிக் கொண்டு இருப்பர்.
வேற என்ன பெரிசா நடக்கப் போகுது.
இப்ப பேசுகிறோமே அந்த பேச்சு சுதந்திரம்கூட இல்லாமல் நொந்து நூலாயி நாமெல்லாம் சட்டையக் கிழிச்சுகிட்டு தெரு தெருவா அலைஞ்சிகிட்டு இருப்போம்.
லக்கிலுக் "கலைஞர் வாழ்க" என்று பதிவு போட்டு இருப்பார்.
நாமளும் "அட ஆமால்ல" என்று ஆதங்கப்பட்டிருப்போம்.
அபி அப்பா...
எங்களுக்கு எங்களைப் பத்தி தெரியாதா?
நாங்க எப்பிடி வேணாலும் பேசுவோம். பாராட்டி கமெண்ட் மட்டும் போடுங்க, யார வேணாலும் தாக்குவோம்ல.
லூஸ்ல விடுங்க தல.
February 10, 2009 2:34 PM
அபிஅப்பா,
வருகைக்கும்,தேனியார் கருத்துகளை பதிவு செய்தமைக்கும் மிகவும் நன்றி.
sir....neenga saali sampara illai "vaali" sampara?
Post a Comment