கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, March 27, 2008

பேரைக்கேட்டாலே பேதியாகுதுல்ல

பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றோரின் பேரைக் கேட்டாலே அலறித் துடிப்பார்கள் சிலர்.இப்படிப்பட்ட சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.ஒருமுறை ரயிலில் பெங்களூர் சென்று கொண்டிருந்தோம்.எதிரில் அமர்ந்திருந்தவர் பேச்சை ஆரம்பித்தார்.இந்த கருணாநிதி சண்டாளனால் தான் தமிழ்நாடே குட்டிச்சுவரா போச்சு என்று எடுத்த எடுப்பிலேயே ஆரம்பித்தார்.இப்படி ஒரு முன்முடிவுடன் பேசுபவரிடம் வாதம் செய்வது தவறு என நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன்.கனமான புத்தகம் ஒன்றை கையில் வைத்திருந்தார்,வாங்கிப் பார்த்தேன்.முதல் பக்கத்திலேயே பிராமணரின் இயல்புகளில் ஒன்றாக பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்றிருந்தது.அதைப் பார்த்த நான் சிரித்துக்கொண்டேன்.அவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு பெங்களூரில் ஒரு அதிகாரியாக பணியாற்றுவதாக சொன்னார்.

நீங்கள் எல்லாம் மணியாட்டுவதோடு நிறுத்திக்கொண்டால் கருணாநிதி ஏன் உங்களை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார் என்று கேட்க நினைத்து வாய்வரை வார்த்தை வந்துவிட்டது.அவருடைய வயது கருதி பேசாமல் இருந்து விட்டேன்.

இவர் வயதானவர் என்றால் இன்னொருவர் இளவயதினர்.என் கடையின் வாடிக்கையாளர்.எப்போதாவது முரசொலி இதழ் வாங்குவதுண்டு.அதைக் கண்ணுற்ற அவர்,'ஆ,இதெல்லாம் கடைகளுக்கு ஓசியா போட ஆரம்பிச்சுட்டாய்ங்களா?' என்று கிண்டலாக கேட்டார்.வாடிக்கையாளர் என்பவர் நமக்கு ராஜா மாதிரி என்று படித்திருந்ததால் ராஜா சொன்ன ஜோக்குக்கு லேசாக சிரித்தேன்.உடனே அடுத்த மேட்டருக்கு தாவினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ராஜா , டில்லியில் பிரபலமாகிக்கொண்டிருந்த நேரம் .'இவனுக்கெல்லாம் நேரத்தைப் பாருங்க , டிவியில உட்கார்ந்து எந்த நேரமும் பேசிக்கிட்டே இருக்கிறானே.மத்திய அரசு பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்துகிறார்களே அதற்காக எதையாவது பேசுகிறானா பாருங்கள் என்றார்.எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

சாதித்திமிரை காட்டிவிட்டானே என்று அடக்க முடியாத கோபத்துடன் 'ஆமாங்க,ஜோசியம் பாக்குறதுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கணும்னு சொன்னானே ஜோஷி,அந்த வெண்ணை மாதிரி ஊருக்கு நாலு பேரு இருந்தா போதும்,இந்தியா வெளங்கிடும்' என்று சொன்னேன்.அந்த வாடிக்கையாளர் கோபித்துக்கொண்டு போனவர் தான் திரும்பி வரவேயில்லை.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் முற்போக்கு பேசுபவர்களைக் கண்டாலே பலர் ஆசனவாயில் மிளகாய்த்தூளை கொட்டியது போல் எரிகின்றனர்.இந்த எரிச்சல் நீங்க ஒரே வழி மணியாட்டுவதைத் தவிர்த்து பிற தொழிலில் ஈடுபட்டாலே தாங்கள் அணிந்திருக்கும் நூலைக் கழற்றி வைத்து விட வேண்டும்.

Monday, March 3, 2008

சுஜாதாவின் புரட்சி சிந்தனை

சிங்கங்கள் இரண்டிற்கிடையே சிக்கிக்கொண்ட மானைப்போல் தான் இருக்கிறது காஷ்மீர். காஷ்மீர் யாருக்கு சொந்தம்?, காஷ்மீரிகளுக்கு தான் சொந்தம்.இந்தியாவுக்கோ,பாகிஸ்தானுக்கோ ஒரு உரிமையும் கிடையாது.இந்தியப் பேரரசிடம் சிக்கிக்கொண்டு அவர்கள் படும் துயரம் மிகவும் பரிதாபகரமானது.காஷ்மீருக்காக இந்தியா செலவிடும் பணமோ மலைக்க வைக்கக் கூடியது,தேவையற்றதுமாகும்.
காஷ்மீர் இந்தியாவுக்கு தேவையில்லை,அதை தனி நாடாக உருவாக்கி அதற்கு நம் ஆதரவை தருவதே முறையானதாக இருக்கும்.இப்படிப் பேசுபவனை தேசத்துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள்.ஆனால் மிதவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சுஜாதா அவர்களே அங்கு நடக்கும் கொடுமை கண்டு மனம் வெறுத்து, காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்தியாவில் இருந்து அதை பிரித்து கொடுத்து விடலாம்,அதற்குத் தேவை POLITICAL WILL மட்டுமே என்று எழுதியிருந்தார்.(2006 கடைசி மாதங்களில் ஆ.வி யில்).சுஜாதா எழுத்தின் மேல் இருந்த மதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே போய்விட்டிருந்தாலும் காஷ்மீர் பிரச்சினையில் அவரது கருத்து ஒன்றுக்காகவே அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.
அவருடைய அறிவியல் எழுத்து தான் அவர்பால் என்னை மிகவும் ஈர்த்திருந்தது.அப்படிப்பட்டவர் ஒரு ஆன்மீகப் பத்திக்கையில் ஆன்மீக அன்பர்களை திருப்திப் படுத்தும் நோக்கில் எழுதிய ஒரு சிறு நூல் அவர் மேல் இருந்த ஆர்வத்தை பெரிதும் குறைத்து விட்டது.ஆனால் அவருடைய செயல் தந்திரம் சிறப்பானது தான்,பெரும்பாலானோருக்கு பிடிக்காத ஒன்றை சொல்வதற்கும் ஒரு WILL வேண்டும்.அது அவரிடம் இல்லை.
ஆனால் தமிழுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதன் மூலம் உணர முடிகிறது.
கார்ல் சாகன் எழுதிய காஸ்மாஸ் நூலை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு என் நன்றி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்