கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, March 3, 2008

சுஜாதாவின் புரட்சி சிந்தனை

சிங்கங்கள் இரண்டிற்கிடையே சிக்கிக்கொண்ட மானைப்போல் தான் இருக்கிறது காஷ்மீர். காஷ்மீர் யாருக்கு சொந்தம்?, காஷ்மீரிகளுக்கு தான் சொந்தம்.இந்தியாவுக்கோ,பாகிஸ்தானுக்கோ ஒரு உரிமையும் கிடையாது.இந்தியப் பேரரசிடம் சிக்கிக்கொண்டு அவர்கள் படும் துயரம் மிகவும் பரிதாபகரமானது.காஷ்மீருக்காக இந்தியா செலவிடும் பணமோ மலைக்க வைக்கக் கூடியது,தேவையற்றதுமாகும்.
காஷ்மீர் இந்தியாவுக்கு தேவையில்லை,அதை தனி நாடாக உருவாக்கி அதற்கு நம் ஆதரவை தருவதே முறையானதாக இருக்கும்.இப்படிப் பேசுபவனை தேசத்துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்கள்.ஆனால் மிதவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சுஜாதா அவர்களே அங்கு நடக்கும் கொடுமை கண்டு மனம் வெறுத்து, காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்தியாவில் இருந்து அதை பிரித்து கொடுத்து விடலாம்,அதற்குத் தேவை POLITICAL WILL மட்டுமே என்று எழுதியிருந்தார்.(2006 கடைசி மாதங்களில் ஆ.வி யில்).சுஜாதா எழுத்தின் மேல் இருந்த மதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே போய்விட்டிருந்தாலும் காஷ்மீர் பிரச்சினையில் அவரது கருத்து ஒன்றுக்காகவே அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.
அவருடைய அறிவியல் எழுத்து தான் அவர்பால் என்னை மிகவும் ஈர்த்திருந்தது.அப்படிப்பட்டவர் ஒரு ஆன்மீகப் பத்திக்கையில் ஆன்மீக அன்பர்களை திருப்திப் படுத்தும் நோக்கில் எழுதிய ஒரு சிறு நூல் அவர் மேல் இருந்த ஆர்வத்தை பெரிதும் குறைத்து விட்டது.ஆனால் அவருடைய செயல் தந்திரம் சிறப்பானது தான்,பெரும்பாலானோருக்கு பிடிக்காத ஒன்றை சொல்வதற்கும் ஒரு WILL வேண்டும்.அது அவரிடம் இல்லை.
ஆனால் தமிழுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதன் மூலம் உணர முடிகிறது.
கார்ல் சாகன் எழுதிய காஸ்மாஸ் நூலை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு என் நன்றி.

12 comments:

said...

//தமிழுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதன் மூலம் உணர முடிகிறது.//

கலைஞர் அஞ்சலி செலுத்தியிருப்பதின் மூலம் நீங்கள் உணர முடிந்ததை நீங்களாகவே உணர்ந்திருக்கலாம். ஒவ்வாதனவற்றை ஒதுக்கி உகந்தனவைகளை மட்டும் படித்திருக்கலாம். தமிழ் புனைவிலக்கியத்தின் சிற்பிகளின் ஒருவரை இனியும் நீங்கள் படிக்கத் தொடங்கலாம்..

Anonymous said...

உன்னை எவன் கேட்டான் ஓரங்கட்டே .உனக்கு சொந்த புத்தியே கிடையாதா கருணாநிதி சொன்னாதான் உன் புத்திக்கு உறைக்குதா.. கண்டபடி வருது

Anonymous said...

//அவருடைய செயல் தந்திரம் சிறப்பானது தான்,பெரும்பாலானோருக்கு பிடிக்காத ஒன்றை சொல்வதற்கும் ஒரு WILL வேண்டும்.அது அவரிடம் இல்லை.//


மிக்க சரி, அது ஞானியிடம் தான் உண்டு.

Anonymous said...

எல்லாத்தயும் பிரிச்சு குடுத்துருவம்.
அப்பிடியே உன்னையும் பிரிச்சு நாய், நரிக்கு குடுத்துருவம்.

said...

ஓகை அண்ணா,நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை.தவறுக்கு வருந்துகிறேன்.தமிழக முதல்வர் கலைஞர் என்று சொல்வதற்குப் பதில் தமிழக முதல்வர் என்று மட்டும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.சுஜாதா எழுத்துக்களை மிகவும் விரும்பி படிக்கிறேன்.ஏன்,எதற்கு,எப்படி?,சிலுக்கன் சில்லு புரட்சி,வீட்டுக்குள் வரும் உலகம் போன்றவை நான் மிகவும் ரசித்தவை.அவருடைய நகரம் கதையை படித்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.நீங்கள் சொல்வது போல் அவருடைய புனைவிலக்கியங்களை இனி தேடிப்பிடித்து படிக்க வேண்டும்.

said...

அனானி செல்வங்களே,இப்படி சாஃப்டா திட்டுனா எனக்கு உறைக்காது ராசா.இரண்டாம் அனானி,ஞானி இல்லை,ஞாநி என்று குறிப்பிடுங்கள்.

said...

http://vaaykozuppu.blogspot.com/2007/07/blog-post_10.html
இந்த சுட்டியில் 'நகரம்'சிறுகதை உள்ளது.

said...

//அவருடைய அறிவியல் எழுத்து தான் அவர்பால் என்னை மிகவும் ஈர்த்திருந்தது.அப்படிப்பட்டவர் ஒரு ஆன்மீகப் பத்திக்கையில் ஆன்மீக அன்பர்களை திருப்திப் படுத்தும் நோக்கில் எழுதிய ஒரு சிறு நூல் அவர் மேல் இருந்த ஆர்வத்தை பெரிதும் குறைத்து விட்டது.//

கடைசிவரை அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததா? இல்லையா? என்று தெளிவாக கூறாமல் கழுத்தறுத்து விட்டார் :-(

எனினும் நான் நாத்திகனாக வளர்ந்ததில் சுஜாதாவின் பங்கு கணிசமாக உண்டு! அவரது ”ஏன்? எதற்கு? எப்படி?” தொடரை படித்தவர்கள் நிச்சயம் கடவுளை நம்பமாட்டார்கள். தொடரை படிப்பதற்கு முன்னால் கடவுளை நம்பியவர்கள் அதன் பின்னர் கடவுள் நம்பிக்கை இருப்பதாக வேஷம் மட்டுமே போடுவார்கள்.

சுஜாதாவின் சில நுண்ணரசியல் எழுத்துக்கள் சில சமயங்களில் எரிச்சலை தந்தாலும் எனக்குள் சுஜாதாவின் பாதிப்பு நிச்சயமிருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.

Anonymous said...

//எல்லாத்தயும் பிரிச்சு குடுத்துருவம்.
அப்பிடியே உன்னையும் பிரிச்சு நாய், நரிக்கு குடுத்துருவம்.//

அனானிக்கு தேசபக்தி பொத்துக்கிட்டு வந்துருச்சு.

said...

//கடைசிவரை அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததா? இல்லையா? என்று தெளிவாக கூறாமல் கழுத்தறுத்து விட்டார் :-(//

லக்கி,வலையுலகின் பெருந்தலைகளாலேயே வாத்தியாரே என்று வாஞ்சையுடன் அழைக்கப்படுபவர் கடவுள் விசயத்தில் குழப்பிவிட்டது வருத்தத்திற்குரியது.

said...

வணக்கம் தோழர்

சிறுவனன் மோனிஸ் பற்றி என் பதிவைக் கண்டு சிறுவனுக்கு உதவியதாக தோழர் இளைய கவி சொன்னார். மிக்க நன்றி தோழர்.

தோழமையுடன்

said...

தோழர் தமிழச்சி,
உதவி செய்ய தூண்டுதலாயிருந்த உங்களுக்கும்,இளையகவி அவர்களுக்கும் மிக்க நன்றி.
(மிகவும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்)

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்