கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, August 20, 2008

ஜோதிடத்தின் மகிமை

ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் இந்த செய்தியை படியுங்கள்.
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?news_id=4118&ncat=DI&archive=1&showfrom=8/18/2008
தன் மகனை தானே கொன்றுவிட்டு வாழ்க்கை முழுக்க நரகவேதனையை சுமந்துதிரியும் எண்ணற்ற அப்பாவிகள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.மகனையே கொலை செய்யும் அளவுக்கு மனதில் நஞ்சை விதைத்த ஜோசியக்காரருக்கும் இந்தக்கொலையில் பங்குண்டு, ஆனால் இப்படிப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை ஏதும் எடுத்தது போல் தெரியவில்லை.

சீனாவில் ஒலிம்பிக் தொடங்கும் முன் பிச்சைக்காரர்களுடன் சேர்த்து ஜோசியக்காரர்களையும் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். சீனா தங்கமாக குவித்துக்கொண்டிருக்கிறது. இதை நாமும் பின்பற்றினால் அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கலாம்.

10 comments:

Anonymous said...

அந்த ஜோசியன் சொன்னது பலித்து விட்டதே!

Anonymous said...

jothidam unmai.jothidan poi.

said...

//அந்த ஜோசியன் சொன்னது பலித்து விட்டதே!//

ஜோசியர் என்ன சொன்னார் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

said...

//omsathish said...

jothidam unmai.jothidan poi.//

உண்மையான ஜோதிடத்தை கணித்துக்கூறும் அளவுக்கு வல்லமையும்,அறிவும் உடைய ஜோதிடர்கள் இப்போது இல்லை என்பது தான் உங்கள் கருத்து.IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இதை பாடமாக வைக்கவேண்டும்,பிற நாடுகள் செய்வதற்கு முன் நாம் முந்திக்கொள்ளவேண்டும்.இல்லாவிட்டால் இதற்கும் காப்புரிமை வாங்கிவிடுவார்கள்.

Anonymous said...

padamaaga vaithu enna payan. arivu jeevukal ,jothidam poi endruthaney vaathidukirarkal.mannai kavviya pin jothidam parkka mukkadu pottu selkirarkal

Anonymous said...

ஓம் சதீசு முடியல, அழுதுருவேன்.

Anonymous said...

Any original astrologers won't tell like that. Astrology is not a history. It's science.


Shiva - pondicherry

said...

வருகைக்கு நன்றி சிவா.
ஜோதிடம் அறிவியல் என்றால் ஏன் பள்ளியிலே பாடமாக வைக்கவில்லை?
பிற அறிவியல் துறைகளுக்கு கொடுப்பது போல் இதற்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை?

Anonymous said...

Hi,
nowadays most of the universities in India, having the study of astrology. your own m.k university also.


Shiva - Pondicherry

said...

சிவா,
பிஜேபி ஆட்சியின் முயற்சியால் காமராஜர் பல்கலைக்கழகம் போன்ற சில நிறுவனங்களில் ஜோதிடம் பாடமாக வைக்கப்பட்டது.மக்களை மடமையில் வைத்திருக்க பார்ப்பனிய சக்திகளால் அரங்கேற்றப்படும் பல விசயங்களில் இதுவும் ஒன்று.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்