அஞ்சாநெஞ்சனின் அன்புத்தம்பி அன்பிற்குரிய அண்ணன் அரவிந்த்(tbcd),மற்றும் பாசத்திற்குரிய பாஸ்டன் பாலா, இருவரது மதுரை வருகையையொட்டி தடாலடி சந்திப்பு நடைபெற்றது.அது பற்றிய சில குறிப்புகள்.6.30 மணியளவில் சந்திப்பு துவங்கியது. நான் பாபா, அரவிந்த் மூவரும் அறிமுகமாகி பேசிக்கொண்டிருந்தோம்.சீனா ஐயா சிறிது நேரத்தில் வந்து கலந்தார்.அதன்பின் தருமி ஐயா வந்து சேர்ந்தார்.பிரபு ராஜதுரை அவர்கள் நேரமின்மையால் கலந்துகொள்ள இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆளுக்கொரு குட்டி யானை பரிசளித்து தான் யானை போன்ற வல்லமையுடையவன் என்று குறிப்பால் உணர்த்தினார் டிபிசிடி. பாபாவின் தமிழ் வலையுலகம்,இணையத்தமிழ் மீதான ஆர்வம் அவரது கேள்விகளிலிருந்தே உணர முடிந்தது,சரமாரியாக போட்டு வாங்கிக்கொண்டிருந்தார். டிபிசிடி குற்றால அருவி போல் கொட்டிக்கொண்டிருந்தார்.குறைவாகப் பேசுவன் நான் தான் என்னும் குறையைத் தீர்த்து வைத்தார் சீனா ஐயா.தருமி ஐயா உற்சாகமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.எல்லோரிடத்தும் நண்பராக இருப்பது எப்படி என்பதை பாபாவிடம் டியூசன் வைத்து கற்றுக்கொள்ள வேண்டும்,திராவிட இயக்க அரசியலின் தேவையையும்,அதிலுள்ள நியாயத்தையும் உணர்ந்தவராகவே எனக்கு அவர் தோன்றினார்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒரேயிடத்தில் அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.
மதுரை நகரின் நல்ல ஒரு உணவு விடுதியான காலேஜ் ஹவுசில் சிற்றுண்டி முடித்துவிட்டு டிபிசிடி,மற்றும் சீனா ஐயா கிளம்பினர்.நான்,தருமி ஐயா,பாபா,அவரின் சகோதரர் அதற்குப்பிறகும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம்.மனதுக்கு நிறைவான ஓர் அனுபவமாக இருந்தது.நன்றி அனைவருக்கும்.
கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.
Friday, June 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- WHERE DO YOU WANT TO GO TODAY? (1)
- இந்திய தேசியம் (2)
- எய்ட்ஸ் (1)
- ஒலிம்பிக் (1)
Blog Archive
- November 2006 (2)
- December 2006 (1)
- March 2007 (2)
- April 2007 (1)
- June 2007 (10)
- July 2007 (10)
- August 2007 (4)
- September 2007 (9)
- October 2007 (5)
- November 2007 (6)
- December 2007 (4)
- January 2008 (1)
- March 2008 (2)
- April 2008 (2)
- May 2008 (2)
- June 2008 (1)
- August 2008 (2)
- September 2008 (3)
- October 2008 (2)
- November 2008 (4)
- January 2009 (1)
- February 2009 (1)
- May 2009 (2)
- June 2009 (1)
- July 2009 (1)
- October 2009 (1)
- January 2010 (1)
- June 2010 (1)
10 comments:
சந்திப்பு அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
சீக்கிரமா மதுரையில் பட்டறை ஒண்ணு நடத்துற வழியையும் கொஞ்சம் பாருங்க அய்யா...
ஹலோ ஆர்கனைசர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
(லக்கி , தல பம்முனவுடனே நாங்களும் கம்முனு இருந்துட்டோம்)
//சீக்கிரமா மதுரையில் பட்டறை ஒண்ணு நடத்துற வழியையும் கொஞ்சம் பாருங்க அய்யா...//
லக்கி,
அதுக்குண்டான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.... சீக்கிரத்திலே அறிவிப்பு வெளியிடனும்... :)
எனனைய விட்டுட்டு மீட்டிங் போட்டிங்களா??? நல்லாயிருங்க.... :)
வருத்தப்படாதீங்க தோஸ்து. நீங்க அடுத்த வாரம் தான் வரமுடியுமென சொன்னதாக பாபா சொன்னார்.
மதுரையில சந்திப்புன்ன
இந்த மதுரைகாரனுக்கும் தகவல் சொல்லுங்கள்
கலந்த கொள்ள முழு முயற்சி எடுப்பேன்
வால்பையன்
நிச்சயம் தெரிவிக்கிறோம் வால்.
சந்திப்பினைப் பற்றி அருமையாக பதிவு இட்டிருக்கும் நண்பர் ஜாலி ஜம்பருக்கு நன்றி.
நல்வாழ்த்துகள்
மதுரையில் பட்டறை பதிவர் சந்திப்பு எது நடந்தாலும் தெரிவித்தால் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் நண்பரே !
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சீனா அய்யா.
மதுரையில் பதிவர் பட்டறை நடத்த காலம் கனிந்துவிட்டது.இராம் வந்தவுடன் ஒரு சந்திப்பை போட்டு விடுவோம்.
Post a Comment