கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, November 1, 2008

இந்திய தேசியம்

இப்போது இருக்கும் இந்தியா ராமரும்,பரதனும் சேர்ந்து உருவாக்கியதா?இல்லை. வெள்ளையர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக எல்லை வகுத்து வைத்திருந்த மாபெரும் நிலப்பரப்பு தான் இன்றைய இந்தியா.இந்துமத நாடாக இருந்தாலும் நேபாளம் இன்று தனி நாடு , ஏனென்றால் அது வெள்ளையர்களால் கைப்பற்றப்படவில்லை .எனவே அது சுதந்திர நாடாக இருக்கிறது. 1934லேயே பர்மா தனி காலனி நிர்வாகத்தில் சென்றதால் அது தனி நாடாக இன்று இருக்கிறது, அதே போன்று தான் இலங்கையும். பர்மா,இலங்கை,மற்றும் இந்தியா மூன்றும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்திருந்தால் இன்று இந்தியா அகண்ண்ண்ட தேசமாக இருந்திருக்கக்கூடும்.ஆக இன்றைய இந்தியா என்பது வெள்ளையன் மென்று துப்பிய சக்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பாரத்மாத்தாக்கிஜே போடுவது சுத்த பத்தாம்பசலித்தனம்.

நேபாளம் இந்துநாடு தானே என்று அதை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடியுமா? முடியாது.இலங்கையில் இருக்கும் தமிழர்கள், இந்துக்கள் தானே மற்றும் ஸ்ரீலங்கா என்னும் பெயரே சமஸ்கிருதம் தானே , அதனால் அது இந்து தேசியத்தில் இருப்பது தானே முறை என்று சொல்லி இலங்கையை இணைத்துக்கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது . இதிலிருந்து இந்தியாவை இணைத்து வைத்திருப்பது அரசியலமைப்புச்சட்டம் தானே,தவிர இந்துமத உணர்வோ,கலாச்சார ஒற்றுமையோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வெள்ளைக்காரன் போட்ட பெவிகால் 50,60 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்து உள்ளது.அந்த பெவிகால் ஒட்டு உதிர்ந்துவிடும் சூழலை நோக்கி தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இந்துதேசியம் பேசிக்கொண்டு பிஜேபி போன்ற கட்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இந்துதேசியமானது இந்தியா சிதறுண்டு போவதிலிருந்து எத்தனை ஆண்டுகள் காப்பாற்றும் என்பது நம்முள் எழும் மிகப்பெரிய கேள்வி.

இந்தியாவில் வாழும் பலநூற்றுக்கணக்கான இனமக்களில் தமக்கான உரிமைகளையும்,மரியாதையையும் போராடிப்பெற்ற இனங்கள் பலவுண்டு(தமிழ்நாடு),போராடாமலே பெற்ற இனங்கள் சிலவுண்டு. என்னதான் போராடினாலும் அதையெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத இனங்கள் நிறையவே உண்டு.அப்படிப்பட்டவர்களை தனியாகப்பிரிந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.அதனால் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடாது. வெறும் 12,000 மக்கள்தொகை கொண்ட டுவாலு என்ற நாட்டுக்கு பிரிட்டன் விடுதலை அளித்துள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பேரினவாதம்,பெரும்பான்மை வாதம் போன்றவை நமக்கு நாமே குண்டு வைத்துக்கொள்ளும் திட்டம் தாம்.

தொடர்புடைய இடுகைகள்:
http://baluindo.blogspot.com/2008/10/blog-post_5013.html
http://www.maraneri.com/2008/10/blog-post_23.html

4 comments:

Anonymous said...

ஏண்ணே இப்படியெல்லாம் பயமுறுத்துறீங்க. தனியா தமிழ்நாடு வாங்கி அடுத்த எலெக்சனுல ஜெயலலிதா பிரதமரான நினைக்க கொலை நடுங்குதே!

Anonymous said...

ம்ம்ம்ம்ம்......... ஒரு சாமானியன் குண்டுச்சட்டிக்குள் ஓடும் குதிரையாக

ஜம்பர்ஜாலி
Vivekanada Street
Dubai Busstand
Duabi.

said...

வருகை தந்துள்ள அனானி அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

Anonymous said...

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி ஜாலி ஜம்பர்,
அப்படி பாத்தாக்கா தமிழ் நாடு என்ற நாடு இருந்ததா?இந்தியா கடித்து துப்பிட எச்சை தானே தமிழ் நாடு.சேர,சோழ,பாண்டிய நாடு,பல்லவ நாடு,கொங்கு நாடு,கொற நாடு,சொறி நாடு என்றல்லவா ராஜ்ஜியங்கள் தமிழ் நாட்டில் இருந்தன.முண்டம்,முண்டம்.ஜாலியா ஜம்ப் அடிக்காதே நாயே.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்