கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, November 7, 2008

கறுப்பரசன் ஒபாமா

அமெரிக்கா என்றாலே பிரம்மாண்டம் தான்.நாட்டின் பரப்பிலும்,அறிவின் ஆழத்திலும் பிரம்மாண்டம் தான், இப்போது எங்களுடைய மனசும் பிரம்மாண்டம் தான் என்று உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறார்கள்.கறுப்பு,வெள்ளை பெற்றோருக்கு பிறந்த கலப்பின ஒபாமாவை அமெரிக்க அதிபர் ஆக்கியிருப்பதன் மூலம் புதியதோர் செய்தியை உலகிற்கு தெரிவித்துள்ளனர். இனமோ,நிறமோ ஒரு பொருட்டல்ல என்பதே அந்தச்செய்தி.இந்த நிகழ்வானது உலக சமுதாயத்திலே கறுப்பின மக்களுக்கு தன்னம்பிக்கையையும்,வெள்ளையின மக்களுக்கு புதிய பார்வையையும் அளிக்கும்.

இந்தியா , அமெரிக்காவை விட மாபெரும் ஜனநாயக நாடு,அதிலும் மதச்சார்பற்ற நாடு என்பதில் நமக்கெல்லாம் பெருமை தான்.மதச்சார்பற்ற நாடு என்பது அதிகாரபூர்வமாக இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை. நம் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் வாய்ந்த பிரதமர் பதவிக்கு ஒரு முஸ்லிமையோ, அல்லது தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து ஒருவரையோ வேட்பாளராக அறிவிக்கும் அளவுக்கு மனவளர்ச்சி எந்தக்கட்சிக்கும் இல்லை.அமெரிக்காவிலே நடந்துள்ள மாற்றமானது இந்தியாவிலும் எதிரொலிக்க வேண்டும்.அப்படிப்பட்ட ஒரு பொன்னாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

0 comments:

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்