கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, November 26, 2008

சீனு அவர்களுக்கு பகிரங்க தந்தி

//சீனு said...
ம்ம்...அந்த நானூறு கோடிய உங்க கிட்ட கொடுத்திருந்தா என்ன புடுங்கியிருப்பீங்க? 350 கோடிய சுருட்டிட்டு 5 கோடியில பேருக்கு நலத்திட்ட உதவிங்கிற பேருல அதுலயும் கொள்ளை அடிச்சிருப்பீங்க.//

இந்தியா என்னும் மாட்டுக்கொட்டடியில் இருந்து எதையும் பிடுங்க முடியாது.தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் மதிப்புக்குறையாத வண்ணம் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.இப்போதும் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.முற்போக்கு எண்ணங்கொண்ட திராவிட இயக்கத்தலைவர்களே அதற்குக் காரணம்.

//காயடித்தால் மட்டும் போதாது. வீதியில் கட்டி வைத்து சாகும் வரை சவுக்கால் அடிக்க வேண்டும்.//

அனானி, மனிதநேயம் என்பதற்கு முன்னால் தேசியம்,தேசபக்தி என்பது எல்லாம் அவற்றின் மீது ஒன்னுக்கடிக்க கூட தகுதியில்லாதவை . உங்களைப் போன்ற ஆசாமிகளை கழுவில் ஏற்றினால் தான் நாடு விளங்கும்.

முற்போக்காளரையும் விஞ்சிய அதிமுற்போக்காளர்களுக்கு இந்தச்சுட்டி .
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=532

6 comments:

Anonymous said...

dei desavirodha naaye unnaiyellam pota pondra sattathi aayul pooravum ulle thalla vendum panniye.

Anonymous said...

தம்பி மதுரைலதான இருக்க... கூடிய சீக்கிரம் கம்பி என்ன தயாரா இரு.

cyber crime police watching 6 guys on net including you.

said...

//இப்போதும் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.முற்போக்கு எண்ணங்கொண்ட திராவிட இயக்கத்தலைவர்களே அதற்குக் காரணம்.//

முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. நீங்கள் சொல்வது உண்மை. ஆனா பாருங்க, அதுக்கு காரணம் இந்த திராவிட இயக்கங்கள்னு சொல்லாதீங்க. அவங்க இல்லாம போனா தமிழ் நாடு இன்னும் முன்னேறியிருக்கும். 40 ஆண்டுகால திராவிட ஆட்சியில நிகழ்ந்த ஒரே நல்ல விஷயம்னு பாத்தா, ஜாதி பற்றின விழிப்புனர்வு மற்ற மாநிலங்களை விட மிக அதிகம்.

ஆனா, இந்த 40 ஆண்டுகாலத்தில் இன்றைய சூழ்நிலையில் தான் தமிழ்நாடு அதிகபட்ச போதையில் மிதந்து கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கின் 10,000 கோடி வருமானத்தில் தான் கிலோ 1 ரூபாய் அரிசியே கொடுக்கிறார்கள். கலர் டி.வி.க்கும் இது தான் ஆதாரமே. இந்த போதை தள்ளாட்டத்தை ஆரம்பித்துவைத்ததே உலக தமிழின தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் தான், 1950+ல். அதை முன்னெடுத்து சென்றது மற்றொரு திராவிட (இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும்) அம்மா.தி.மு.க. இப்பொழுது தமிழின தலைவர் அதை மறுபடியும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றார்.

இதை தவிற மேலும், இந்தியாவிலேயே மீடியாவை அரசியலுக்கு பயன்படுத்துவது, கேவலமான அரசியல் கலாச்சாரம், அரசியல் + ரவுடியிஸம் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது, காமராசருக்கு பின் வந்த so called திராவிட அரசியல்வாதிகள்.

இதையெல்லாம் மீறி த.நா. முன்னேறி வந்திருக்கிறதென்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் தான் என்று பகடி பன்னாதீற்கள். வேண்டுமானால் இந்த வளர்ச்சிக்கு உபத்திரவம் பன்னவில்லையே என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

said...

அப்புறம்,

//ம்ம்...அந்த நானூறு கோடிய உங்க கிட்ட கொடுத்திருந்தா என்ன புடுங்கியிருப்பீங்க?//

இங்க 'உங்ககிட்ட' என்பது திராவிட அரசியல்வாதிகள். உங்களிடம் அல்ல...

said...

வருகைக்கு நன்றி சீனு.
//ஆனா பாருங்க, அதுக்கு காரணம் இந்த திராவிட இயக்கங்கள்னு சொல்லாதீங்க.//

பிராமணர்கள் தான் காரணம் என்று சொன்னால் உங்களுக்கு சந்தோசமாயிருக்கும்.:-))

//அவங்க இல்லாம போனா தமிழ் நாடு இன்னும் முன்னேறியிருக்கும்.//

கோயிலில் மணியாட்டுவதிலிருந்து , கோட்டையில் உயர் பொறுப்பு வரை பிராமணர்கள் நிறைந்திருப்பார்கள் என்பது தானே இதற்கு அர்த்தம்.

//திராவிட ஆட்சியில நிகழ்ந்த ஒரே நல்ல விஷயம்னு பாத்தா, ஜாதி பற்றின விழிப்புனர்வு மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். //

இந்த ஒன்றுக்காகவே அவர்களை வாழ்நாள் முழுக்க ஆதரிக்கலாமே.மனுசனுக்கு காசு,பணத்தை விட மானமும்,சுயமரியாதையும் தானே முக்கியம்.

சாராய விற்பனைக்கு கலைஞர் தான் காரணம் என்பது மிக மேம்போக்கான குற்றச்சாட்டு.அண்டை மாநிலங்களில் சாராய விற்பனை ஜோராக நடக்கும் போது தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

//இதை தவிற மேலும், இந்தியாவிலேயே மீடியாவை அரசியலுக்கு பயன்படுத்துவது,//

மீடியா ஆதிக்கம் இன்றும் உயர்சாதியினரின் கையில் தான் இருக்கிறது என்பது சிறுபிள்ளைக்கு கூடத்தெரியும்.

//கேவலமான அரசியல் கலாச்சாரம், //

உண்மை தான் , கோயில் கருவறைக்குள் எல்லோரும் போகலாம் என்பது எப்பேர்ப்பட்ட கேவலம், இதுவும் ஒரு கலாச்சாரமா?

//அரசியல் + ரவுடியிஸம் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது, காமராசருக்கு பின் வந்த so called திராவிட அரசியல்வாதிகள்.//

மிட்டா,மிராசுகளின் கட்சியான காங்கிரஸ் ஆள்பலம் கொண்டு ஒடுக்க முனைந்த போது மதுரை முத்து போன்ற அடாவடி ஆசாமிகள் உருவானார்கள்.சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் வீரவிளையாட்டுகள் நீங்கள் அறிந்ததே.

said...

சீனு ,
சமூகநீதிக்காக இந்திய அளவிலே போராடும் இயக்கம் திராவிட இயக்கங்கள் மட்டுமே.அண்ணா பதவியேற்கும் முன்வரை அரசு அலுவலகங்களில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை பிராமணர்களே நிறைந்திருந்தனர்.சமூக அநீதி என்பது இதுதான்.

இன்றும் கூட இத்தகைய போக்கு தனியார் நிறுவனங்களில் நிலவுகிறதாம்.இதையெல்லாம் மாற்றி அமைக்க முயலும் போது உங்களைப்போன்றவர்களுக்கு கசக்கிறது.

வாய்ப்பும்,வசதியும் கிடைக்கும் போது யாரும்,யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது கண்முன் காணும் உண்மை.பிற்பட்ட மக்களின் வளர்ச்சி பிராமண சமூகத்தை உறுத்துவது போல் , தலித் மக்களின் வளர்ச்சி பிறபட்ட மக்களை உறுத்துகிறது.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்