கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, November 27, 2008

இலங்கைக்கு ஒரு பண்டாரநாயகே,இந்தியாவுக்கு ஒரு அத்வானி.

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தந்தை சாலமன் பண்டாரநாயகே தான் இன்று இலங்கை பற்றி எரியக்கொள்ளி வைத்தவர்.ஆட்சியைப்பிடிக்கும் அதிகாரவெறியில் 'சிங்களா ஒன்லி' என்ற முழக்கத்தோடு சிங்கள மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தினார்.ஆட்சியையும் பிடித்தார்,சிங்களம் தான் ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த உடனேயே தமிழர்களின் எதிர்ப்பும் ஆரம்பித்தது.தங்களுடைய உரிமைகளும்,சுயமரியாதையும் பறிபோக ஆரம்பித்தவுடன் ஜனநாயக ரீதியில் போராட ஆரம்பித்தனர் தமிழர்கள். இராணுவ பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்க முனைந்த ஆரம்பித்த அதேகணத்தில் கொழும்பில் குண்டுவெடிக்க ஆரம்பித்தது.இன்றுவரை தொடர்கிறது. உலகின் உல்லாசபுரியாக இருந்திருக்க வேண்டிய நாடு , இன்று உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் ஓட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்தியாவிலும் ஒரு பண்டாரநாயகா இருக்கிறார்.அவர் பெயர் அத்வானி.இந்த நடமாடும் பிணத்தின் நாசகார சிந்தனைகளால் இந்தியா இன்று தாங்கொணா இன்னல்களை அனுபவித்து வருகிறது.சாதியால் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் வாழவகை செய்யும் மண்டல் கமிசனை அமுல்படுத்த வி.பி.சிங் அரசு முயன்ற போது அத்வானியின் உள்ளிருக்கும் சாத்தான் விழித்தது. பிராமணர்களுக்கு சமமாக மற்றவர்களும் வருவதா? அது இந்து மத தர்மத்திற்கு விரோமானதாயிற்றே? என்றெல்லாம் சிந்தித்து அந்த மண்டல் கமிசனை இல்லாது ஒழிக்க திட்டம் தீட்டினார்.அந்த திட்டத்திற்கு கிடைத்த பலியாடு, முஸ்லிம் மக்கள். பத்துபைசா பிரயோஜனம் இல்லாத பாபர் மசூதியை உடைத்த பொழுது இந்தியா என்னும் நாட்டை தான் நாம் உடைக்கப்போகிறோம் என்பதை அவர் உணரவில்லை.

பேரினவாதம்,மதவாதம் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவன் விரலைச்சூப்பிக்கொண்டா உட்கார்ந்திருப்பான்.காயம்பட்ட அவனது மனது எந்த ஒருகொடூர செயலையும் செய்ய துணிந்து விடுகிறது.எந்த ஒரு குற்றத்திற்கும் மோட்டிவ் (motive) ஒன்று உண்டு.இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு மோட்டிவ், அத்வானி அன்கோ தான் என்று கண்ணை மூடிக்கொண்டு கை காட்டலாம்.

அத்வானி மட்டுமல்ல அவர்தம் கொள்கைகளும் நடமாடும் பிணம் தான்.அந்தப்பிணங்களுக்கு மக்கள் என்றைக்கு சமாதி கட்டுகிறார்களோ அன்றைக்கு தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.

பி.கு:
இன உணர்வு,மொழியுணர்வை தூண்டி தான் திமுக முன்னோடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.ஆனால் எக்காலத்திலும் அவர்கள் பார்ப்பனர்கள் மேல் வன்முறையை ஏவிவிடவில்லை.அதற்குக்காரணம் இயல்பிலேயே அமைந்த தமிழனின் பரந்த மனப்பான்மையும், திராவிட இயக்கத்தலைவர்களின் எண்ணங்களை ஆளுமை செய்த காந்தியடிகளும் தான்.

3 comments:

Anonymous said...

சூப்பரா பிக்கப் பண்ணிக்கிட்டு போயிட்டே இருந்தீங்க அப்ப மனசாட்சி குத்திரிச்சாக்கும் :)
ஒரு பின்குறிப்பு போட்டு விட்டுடீங்க. ஆன்ம பலம் என்பது இது தான் .எப்படிப் பட்ட கேடு கெட்டவனுக்கும் ஒரு நாள் தான் செய்யும் தவறுகள் உறுத்தும்.

//பி.கு:
இன உணர்வு,மொழியுணர்வை தூண்டி தான் திமுக முன்னோடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.ஆனால் எக்காலத்திலும் அவர்கள் பார்ப்பனர்கள் மேல் வன்முறையை ஏவிவிடவில்லை.அதற்குக்காரணம் இயல்பிலேயே அமைந்த தமிழனின் பரந்த மனப்பான்மையும், திராவிட இயக்கத்தலைவர்களின் எண்ணங்களை ஆளுமை செய்த காந்தியடிகளும் தான்.//

Anonymous said...

கேடுகெட்ட அத்வானிகளும்,அவனை பின்பற்றும் கேடுகெட்டவர்களும் உண்மையை உணரவேண்டும்.

said...

வீடிட்கொரு வாசப்படி என்னாங்க ... இப்ப நாடுக்கொரு பண்டா-அத்வன்னி வந்தாயிற்று ... உங்களது கண்ணிப்பு மிகவும் சரியானதே ...

Sinhala Only பிரச்சினையை ... ஐயிந்தில் நான்கு பங்கு பெரும்பான்மை கொண்ட ஆட்சி J.R.Jayawardane மூலம் வந்த போது வெகு இலகுவாக தீர்த்திருக்கலாம் ...

அதையும் கோட்டை விட்டானையா அந்த துவெஷம் பிடிச்ச J R மூதேவி

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்