கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, September 22, 2008

இலக்கிய மனமும், இளகிய மனமும்

புதுமைப்பித்தனின் நினைவில் நிற்கும் சிறுகதை ஒன்று. கணவனை இழந்துவிட்ட அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்ணொருத்தி மிகுந்த துயரத்தோடு நாட்களைக்கடத்திக்கொண்டிருக்கிறாள். அதைக்கண்டு மனம் வாடிய இளைஞன் ஒருவன் தன் காதலை அவளிடத்தில் சொல்கிறான். பரிதாபத்தில் பிறந்த உன் காதல் வேண்டாம் என மறுத்துவிடுகிறாள். இதுவரை கதை இயல்பாக இருக்கிறது. அதன்பின் அந்தப்பெண் அவனிடம் "உன் தியாகத்துக்கு என்னைப் பலியாடு ஆக்கிவிடாதே" என்று கூறுகிறாள். இப்படியும் ஒருபெண் சிந்திப்பாளா என்று எண்ணலானேன். இப்படி ஆழமாக சிந்திப்பதால் தான் புதுமைப்பித்தன் தமிழின் சி்றந்த இலக்கியவாதியாகப் போற்றப்படுகிறார்.

ஆனால் இவ்வாறில்லாமல்
"கண்ணுக்குள் பாவை போல் உருண்டிடும் உள்ளம்
கைம்பெண்ணுக்கும் உண்டென்று உணர்ந்திடுவாய்"
என்று எழுதினால் அது பிரச்சாரத்தன்மையுடையதாகி விடுகிறது , அதனால் இது இலக்கியம் இல்லை என்றாகி விடுகிறது. அதனால் இதை எழுதிய கலைஞர் இலக்கியவாதி இல்லை, என்ன கொடுமை?:-(.

இலக்கியச்சுவையும்,படித்து சிலாகிப்பதும் மட்டும் தானா படைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும்.சமூகத்திற்கு எந்த வகையிலாவது உதவ வேண்டாமா?.அந்த வகையில் புதுமைப்பித்தனை விட கலைஞரே மேலானவராக எனக்குத்தோன்றுகிறார். எனது எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே ஈழத்தைச்சேர்ந்த இலக்கியவாதி தளையசிங்கம் கலைஞரைப் பற்றி மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.
"அகிலனை விடத் திறமையான கலைஞன். புதுமைப்பித்தனையும் மெளனியையும்விட கலையின் நோக்கத்தைப் பரிபூர்ணமாக புரிந்து கொண்டவன். பாரதியைப் போலவே போர்க்கோலம் பூண்டவன். அவனே மு.கருணாநிதி"
(நன்றி-ராஜநாயஹம்)

மனித மனத்தினை ஆழ்ந்து ஆராய்ந்து பீராய்ந்து எழுதுவதை விட மனித மனத்திலே மாற்றத்தை ஏற்படுத்தும் எழுத்துக்களே பிடித்திருக்கிறது.

0 comments:

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்