கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, March 21, 2007

வேத அறிவு vs பகுத்தறிவு

மனிதனை மற,கடவுளை நினை-வேதஅறிவு
கடவுளை மற,மனிதனை நினை-பகுத்தறிவு

கருங்கல்லிலே கடவுளைக் காண்பது-வேதஅறிவு
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது-பகுத்தறிவு

உலகம் பஞ்சபூதங்களால் ஆனது-வேத அறிவு
உலகம் அணுக்களால் ஆனது-பகுத்தறிவு

கிச்சாவின் வாய்க்குள் உலகத்தைக் கண்டுபிடித்தது-வேதஅறிவு
உலகம் உருண்டை என கண்டுபிடித்தது -பகுத்தறிவு

ராகு கேது கண்டுபிடித்தது-வேத அறிவு
நெப்டியூன்,ப்ளுட்டோ கண்டுபிடித்தது-பகுத்தறிவு

ஜாதகப்பொருத்தம் பார்ப்பது-வேத அறிவு
HIV சோதனை செய்வது-பகுத்தறிவு

2000 வருடங்களாக ஒருவர் இமயமலையில் வாழ்கிறார்-வேத அறிவு
150 வருடங்களைத் தாண்ட வாய்ப்பேயில்லை-பகுத்தறிவு

எதை இழந்தாயோ அதை இங்கேயே இழந்தாய் .வறட்டு வேதாந்தம் பேசுவது-வேத அறிவு
இழப்பதற்கு ஒன்றுமில்லை.வெல்வதற்கு உலகமே இருக்கிறது,நம்பிக்கையூட்டுவது பகுத்தறிவு.

சத்துரு சம்ஹார யாகம் செய்வது வேத அறிவு
95 வயது வரை வாழ்ந்து காட்டுவது பகுத்தறிவு.

தீண்டாமையை வலியுறுத்துவது வேத அறிவு
அரசியல் அனாதைகளாக்குவது பகுத்தறிவு.

பின் குறிப்பு:
நண்பர் ஒருவர் என்னிடம் நான் "வேதிக் மேத்ஸ்"என்ற பயிற்சி வகுப்புகளை பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கிறேன் என்று சொன்னார்.நான் வேதிக் மேத்ஸ் என்றால் என்ன? என்று கேட்டதற்கு பத்து ரூபாய்க்கு புத்தகக்கடைகளில் விற்கும் "எளிய முறையில் கணிதம் பழகலாம் " புத்தகத்தில் இருந்து சில குறுக்கு வழிகளை எடுத்து விடுகிறார்.நான் அசந்து போனேன்.உங்க அட்டகாசங்களுக்கு ஒரு அளவே இல்லையா என்று நொந்து கொண்டே போட்டது தான் இந்தப்பதிவு.

6 comments:

said...

நல்ல பகுத்தறிவு விளக்கம் !

said...

உங்கள் நண்பர் உண்மையான வேதக் கணிதம் அறிந்திருக்க மாட்டார். "பொதிகை"த் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் சில சமயம் வரும். இந்தியாவில் இருந்தால் தேடிப் பிடித்துப் பாருங்கள். புரியும்.

said...

நன்றி கோவியார் அவர்களே.

said...

வருகைக்கு நன்றி கீதா அவர்களே.

said...

வேதக்கணிதத்தின் மோசடி பற்றி சென்னை அய்.அய்.டி பேராசிரியை டாக்டர்.வசந்தாகந்தசாமி ஒரு நூல் எழுதியுள்ளார். (இவர் அய்.அய்.டியில் நிலவிவந்த பார்ப்பன ஆதிக்கம் மற்றும் சமூகநீதிமறுப்பிற்கு எதிராகப் போராடியதற்காக தமிழக அரசால் 'கல்பனாசாவ்லா' விருது அளித்துக் கவுரவிக்கப்பட்டவர்)

said...

வலையுலக டைம்பாம் அண்ணன் மிதக்கும்வெளி அவர்களே,வருக வருக.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்