கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, July 28, 2007

ஸ்மூத் கிரிமினல்
சமீபத்தில் தலித் சிறுகதை ஒன்றை வாசித்தேன்.நெஞ்சில் ஒட்டிக்கொண்ட அக்கதையின் கருவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தலித் குடியானவர் பண்ணையில் வேலை செய்கிறார்.கடும் உழைப்பின் காரணமாக அவரது துணிமணிகள் விரைவிலேயே கிழிந்து விடுகிறன.இதை பண்ணையார் கண்டும் காணாதது போல்
இருக்கிறார்.அடுத்து அந்தக் குடியானவரிடம் இருக்கும் துண்டு நைந்து போய் கிழிந்து விடுகிறது. அதை தூக்கி எறிந்து விடுகிறார்.

குடியானவரிடம் ஏதோ ஒன்று குறைகிறதே என பண்ணையார் உணர்கிறார்.உடனே வீட்டினுள் சென்று புதிய துண்டு ஒன்றை எடுத்து வந்து கொடுக்கிறார்.

பண்ணையார் வழங்கிய பரிசின் நோக்கம் ,குடியானவர் தன்னைக் கண்டவுடன்
வழக்கம் போல் துண்டை எடுத்து சுருட்டி இடுப்பில் வைத்துக்கொண்டு வணக்கம் சொல்வது காணாமல் போய்விட்டதே
என்ற கவலை தான்.

இந்தக் கதையின் மூலம் இன்னொரு விஷயமும் புரிந்தது.மதமாற்றம் கூடாது என கூக்குரலிடுபவர்கள் அனைவருமே உயர்சாதியினர்.இவர்கள் இந்து என்னும் பட்டுத்துண்டை கொடுத்து என்றென்றும் அவர்களுக்கு கீழேயே இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதே நாம் அனைவரும் இந்துக்கள் என்று சொல்வதின் நோக்கம்.

வெள்ளையர்களும் ,மொகலாயர்களும் ஆயுதங்களால் நம்மை
அடிமைப்படுத்தினர்.வெறும் வாய்ஜாலத்திலேயே வண்டியை
ஓட்டிக் கொண்டிருக்கும் இவர்களை என்னவென்று சொல்ல!

2 comments:

kspp said...

////////////
சமீபத்தில் தலித் சிறுகதை ஒன்றை வாசித்தேன்.
///////////////

ஓ. சிறுகதையில் தலித் சிறுகதை என்று ஒன்றை சாயம் பூச ஆரம்பித்துவிட்டீர்களா. படித்தாலும் உங்கள் சிந்தனை ஏன் இப்படிப் போகிறது?

said...

//ஓ. சிறுகதையில் தலித் சிறுகதை என்று ஒன்றை சாயம் பூச ஆரம்பித்துவிட்டீர்களா. படித்தாலும் உங்கள் சிந்தனை ஏன் இப்படிப் போகிறது? //

kspp,உங்களுடைய வருத்தம் எனக்குப் புரிகிறது.
தினமும் செய்தித்தாள்களிலும்,இணையத்திலும் சாதிவாரியாக மணமக்கள் தேவை விளம்பரம் கொடுக்கும் ELITE மக்களும் படித்தவர்கள் தான்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்