கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, July 28, 2007

மெக்மேன் மரணம்:ஒரு கட்டுடைப்பு

WWE சண்டை நிகழ்ச்சிக்கு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.நானும் தான்.அது ஒரு டுபாக்கூர் சண்டை என்று என்னுடைய சிற்றறிவுக்கு தெரிந்தாலும் அது ஒரு நிஜ சண்டை என்று நம்புபவர்கள் ஏராளம்.

என்னுடைய நண்பன் ஒருவனிடம் இதைப் பற்றிப் பேசி சண்டையே வந்து விட்டது.அது ஒரு பொய்ச்சண்டை என்று நான் சொல்ல , பொய்சண்டையையா இத்தனை பேர் பார்க்கிறார்கள் என்றும்,ரத்தம் சிந்தி,உயிரைக் கொடுத்து போடும் சண்டையை பொய் என்று சொல்கிறாயே நீ என்ன லூஸா என்றும் கேட்கிறான்.எல்லா வகையான விளையாட்டுகளிலுமே எதிர்பாராத விபத்துகளினால் ரத்தம் சிந்தத்தான் செய்யும் என்றும் நிஜமான குத்துச் சண்டைகளை பார்த்ததில்லையா என்றும் கேட்டேன்.

என்ன சொல்லியும் அவனை ஏற்க வைக்க முடியவில்லை.இந்த சூழ்நிலையில் தான் மெக்மேன்(McMahon) என்னும் பழைய வீரரும்,தற்போது ஒரு நிர்வாகியாகவும் இருக்கிற ஒருவரை தீ வைத்து மற்ற வீரர்கள் கொன்று விட்டதாக பரபரப்பு எழுந்தது.

அடப்பாவிகளா இந்த டுபாக்கூர் விளையாட்டுக்காக ஒருவனை கொல்லவா செய்வார்கள் என்று மிரண்டு போய்விட்டேன்.இந்த சண்டை பற்றி நன்கு தெரிந்த ஒரு சிறுவனிடம் வாயைக் கிண்டிய போது,"ஆமாண்ணே,ஆளை வச்சு அடிக்கிறது,கள்ளாட்டை ஆடுறதுன்னு ரொம்ப சேட்டை பண்ணான்.அதான் சீனை முடிச்சுட்டாய்ங்க"என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு போய்விட்டான்.

உயிரை எடுக்கும் ஒரு விளையாட்டை அரசு எப்படி அனுமதிக்க முடியும் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு இணையத்தில் தேடினேன்.அப்போது தான் உண்மை தெரிந்தது.

அந்த சண்டை முழுவதுமே ஒரு தொடர்நிகழ்ச்சி,அதில் மெக்மேனின் மரணம் என்பது ஒரு பகுதி.ஆனால் அவர் நிஜமாகவே செத்துவிட்டார் என்று நிறைய குழந்தை உள்ளத்துக்கு சொந்தக்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் நம் மக்களை திருத்தவே முடியாது.

பி.கு:கடைசி வரி ஜூ.வி பாதிப்பால் வந்தது.

1 comments:

Anonymous said...

கம்ப்யூட்டரும்,டைப்பிங்கும் தெரிந்தால் என்ன வேணாலும் எழுதுவீங்களாடா.:(

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்