கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Sunday, July 22, 2007

ரஜினி பரபரப்பு அறிக்கை

ரஜினிக்காக கலைஞர் கவிதை எழுதி உள்ளதை தமிழ்மணத்தில் பலரும் படித்திருப்பார்கள்.கவிதை எழுதும் அளவுக்கு ரஜினி என்ன சொன்னார் என்பதை பலர் தவற விட்டிருப்பார்கள்.அவர்களுக்காக இந்தப் பதிவு.ரஜினி எழுதிய கடிதம் வருமாறு:

பெரியார் படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன்.நான் மதிப்பிற்குரிய பெரியார் அவர்களின் கொள்கைகளைத்தான் அறிந்திருக்கிறேன்.அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாக தெரியாது.அவருடைய வரலாறை அறிந்து அவர்களின் மேல் எனக்கு இருந்த மதிப்பும்,மரியாதையும் இன்னும் ஆயிரம் மடங்கு உயர்ந்து விட்டது.அவர் சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாமும் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும் பொழுது ஏற்பட்டாலும்,அவருடன் நெருங்கிப் பழகிய மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களோடும்,மதிப்பிற்குரிய கி.வீரமணி அவர்களோடும் எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சிப்பட்டு இந்த திரைக்காவியத்தை,அருமையாக படைத்த ஞானசேகரன் அவர்களுக்கும் இந்த திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டு பெரியாராக நடிக்காமல்,பெரியாராக வாழ்ந்து காட்டிய என் அருமை நண்பர் சத்யராஜ் அவர்களை கட்டித்தழுவி என் இதயம் கனிந்த வாழ்த்துகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்க தந்தை பெரியார் புகழ்.

19 comments:

குணா ரமேஷ் said...

தெனாலி படம் பார்த்து ஈழப்பிரச்சினையையும்,பெரியார் படம் பார்த்து பெரியாரையும் தெரிந்து கொண்ட ரசினியின் அரசியல் அறிவு பிரமிக்க வைக்கிறது.

said...

intha irandu vidayangalum thamil makkalidaiye evalavu mukkiyamaana vidayamaka irukirathu enpathu ithilirunthee therikirathu.....

said...

யாராவது, நேருவைப் பற்றியும் படம் எடுங்கப்பா!!!
பாவம் ரஜனி...அவர் பற்றியும் அறிந்து தொலைக்கட்டும்...

said...

// தெனாலி படம் பார்த்து ஈழப்பிரச்சினையையும்,பெரியார் படம் பார்த்து பெரியாரையும் தெரிந்து கொண்ட ரசினியின் அரசியல் அறிவு பிரமிக்க வைக்கிறது. //

சிவாஜி பட கதை விவாதத்தின்போதுதான் அவருக்கு கருப்புப் பணம் மேட்டரே தெரிய வந்ததாம். :-)))

என்னமோ இரஜினியும் கலைஞரும் தமாஸ் செய்கிறார்கள்.

said...

அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?

said...

வாங்க சோம்பேறி,இந்த இரண்டு உணர்வுகளும் இல்லாதவன் தமிழனாக இருக்கமாட்டான்.

said...

//யாராவது, நேருவைப் பற்றியும் படம் எடுங்கப்பா!!!
பாவம் ரஜனி...அவர் பற்றியும் அறிந்து தொலைக்கட்டும்... //

யோகன்,
தலைவர்களைப் பற்றியும்,சமூகத்தைப் பற்றியும் அவருக்கு எந்த அளவுக்கு புரிதல் இருக்கிறதோ அதே அளவுக்கு தான் அரசியலைப் பற்றியும் இருக்கிறது.

உசுப்பேத்தி விடும் கூட்டத்துக்கு அவ்வப்போது இரையாவது அவருக்கு ஒரு பழக்கமாகிப் போய் விட்டது.

said...

//சிவாஜி பட கதை விவாதத்தின்போதுதான் அவருக்கு கருப்புப் பணம் மேட்டரே தெரிய வந்ததாம். :-)))//

கல்வெட்டு,
இந்தக் காமெடிக்கு சற்றும் குறையா வண்ணம் ஜெ பேட்டி அளித்திருக்கிறார்.அதாவது அவர் இதுவரையிலும் பணம் வாங்கிக் கொண்டு எதையுமே செய்ததில்லையாம்.

//என்னமோ இரஜினியும் கலைஞரும் தமாஸ் செய்கிறார்கள். //
சரியா சொன்னீங்க.

said...

சொல்ல வந்ததை நறுக்கென்றும், நகைச்சுவையாகவும் சொல்வதில் நம் தோழர் உடன்பிறப்பு வல்லவர். உங்களிடமும் அதே இயல்பு இருக்கிறது. அசத்துங்க!

said...

//அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா? //

அந்தப்பக்கம் போனாலே குத்துயிரும்,கொலை உயிருமா ஆக்கிடுராங்களேய்யா.

இருந்தாலும் உயிரை கையில பிடிச்சுக்கிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

/இருந்தாலும் உயிரை கையில பிடிச்சுக்கிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்/

;) நன்றி தல

said...

மிக்க நன்றி லக்கி.

said...

வருகைக்கு நன்றி அய்யனார்.

said...

oru manithan unmai sonna athukku iththanai comment koodathu.

inth kalathil yaar ippadi unmaiyai oppukolkirarkal.

said...

//inth kalathil yaar ippadi unmaiyai oppukolkirarkal. //

அதானே,அவரு ரொம்ப நல்லவரு.
வருகைக்கு நன்றி rmslv

said...

நேருவைப் பற்றியும் படம் எடுங்கப்பா!!!
பாவம் ரஜனி...அவர் பற்றியும் அறிந்து தொலைக்கட்டும்...//

ரிப்பீட்டே..!

said...

தருமி அய்யா,
அகத்தேடலில் ரஜினி பயங்கரமானவர்.அதனாலேயே புற விடயங்களில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.

said...

இன்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கு...இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல..குதிங்க கோதாவில ...அப்படின்னு..யாரவது..ரஜினிக்கு ஒரு மெயில் தட்டுங்க..இல்லை..அத வச்சு ஒரு பதிவு..போட்டுறுவேன்.... ஜாக்கிரதை...

said...

//இன்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கு...//

என்ன பிரச்சினை அப்படியே இருக்கிறது என்று புரியவில்லை டிபிசிடி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்