கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, July 31, 2007

மதுரை சிங்கங்களின் சங்கமம்

முத்துக்குமரனின் வருகையையொட்டி மதுரையில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.தருமி அய்யா,நான்,முத்துக்குமரன்,இராம்,லிவிங்ஸ்மைல்,மதுரை புல்லட் பாண்டி ஆகியோர் கலந்து கொண்ட இச்சந்திப்பில் இருந்து சில துளிகள்:-

லிவிங்ஸ்மைல் தன் ஜாகையை இன்னும் சில மாதங்களில் சென்னைக்கு மாற்றுகிறார்.மதுரை மக்கள் சரியில்லை என்று அதற்கான காரணங்களில் ஒன்றாக சொன்னார்.உடனே நான் ஆமாம்,அறிமுகமான கொஞ்ச நேரத்திலேயே நீங்க என்ன ஆளுங்க?என்று கேட்கும் மக்கள் இங்கு நிறையவே உண்டு.சென்னையில் இந்த அளவிற்கு இருக்காது என்று கூறினேன்.உடனே புல்லட் பாண்டி சாதியை அறிந்து கொள்வதில் இருக்கும் சில சாதகமான விஷயங்களைக் கூறினார்.என்னைப் பொறுத்தமட்டில் அது ஏற்கத்தக்கதாக இல்லை.

இராம் தான் இன்னமும் தினமலர் சிறுவர்மலர் படிக்கிறேன்,அதனால் தான் ஒரு பார்ப்பன அடிவருடியா என்று கேட்டு குத்து விட்டுக் கொண்டிருந்தார்.

தருமி அய்யா,இட ஒதுக்கீட்டில் நடக்கும் தில்லுமுல்லுகளையும்,அரசியல்வாதிகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையையும் சொல்லி,இதைப்பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடம் பரவ வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

நான் என் பங்குக்கு தினமலர் நாளிதழ் BC,SC பிரிவினரிடையே பகையுணர்வை வளர்க்கும் நோக்கத்தோடு செய்திகளை வெளியிடுவதை அம்பலப்படுத்தினேன்.அதாவது SCஇட ஒதுக்கீட்டால் BC பிரிவினர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது போன்ற செய்திகள்.ஓ!அப்படியெல்லாம் நடக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனார் இராம்.

முத்துக்குமரன் தன் எழுத்தைப் போலவே பேச்சிலும் தெளிவாக தன் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.குமரனின் பதிவகளைப் படித்து அவர் ஒரு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என நினைத்த எனக்கு அவர் ஒரு பையனைப் போன்ற தோற்றத்துடன் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமாகப் போய்விட்டது.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது இரண்டு ஃபுல் ரம் காலி.சைட் டிஷ் மிக்சர்,மில்க்ஸ்வீட்.

மதுரையை மையப்படுத்தி ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை இராம் வெளிப்படுத்தினார்.அதனால் மதுரை பதிவர்கள் அவரை தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்த சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.

புல்லட்பாண்டி தன்னுடைய புல்லட்டில் ஏறி பறந்து விட்டார்.மீதி அனைவரையும் தருமி அய்யா தன்னுடைய சொந்தக்காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு அவரவர் இடத்தில் இறக்கி விட்டு வீடு நோக்கிப் பறந்தார்.

பின்குறிப்பு:
வீடு திரும்பியதும் மனது கனத்துப் போயிருந்தது.ஒரு அழகு நங்கையாக திகழ வேண்டிய லிவிங்ஸ்மைல் வித்யா,
இயற்கையின் சிறு எழுத்துப்பிழையால் தன் வாழ்நாள் முழுதும் சொல்லொணா துயரத்தை
சுமக்க வேண்டிய அவலத்தை நினைத்து.

ஆனாலும் அவருடைய தன்னம்பிக்கை அவரை புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்லும்.

14 comments:

said...

சந்திப்பு இனிதே போண்டா இல்லாமல் சைட் டிஷ் சகிதம் நடந்ததற்கு வாழ்த்துக்கள்!!!

வளா வளா, கொழ கொழாவென்று சொல்லாமல் நறுக்கென்று சந்திப்பை விவரித்ததற்கு பாராட்டுக்கள்!!!

said...

மதுரை பதிவரா...? எங்கங்கோ. நடந்துச்சு இந்த சந்திப்பு...
மதுரை விட்டு வெளியூரில் இருப்பவர்களும் சேரலாமா..?
மதுரையில் நீங்க எங்க ...?

said...

நன்றி லக்கி,போண்டா இல்லையென்றாலும் போண்டா,போளி பற்றிய பேச்சுக்கு குறைவில்லை.

said...

//மதுரை பதிவரா...? எங்கங்கோ. நடந்துச்சு இந்த சந்திப்பு...//

வாங்க tbcd,மதுரையில் தான் இருக்கிறேன்.அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.நிச்சயமாக சேரலாம்.பைபாஸ் ரோட்டில் இருக்கிறேன்.நீங்க எங்க இருக்கீங்க?

உங்க அனானி பதிவு படித்தேன்.பயங்கரமா இருந்துச்சு.அதனால நீங்க ஒரு பயங்கரமான ஆளுன்னு நினைக்கிறேன்.

said...

/*அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது*/
அப்படியா...நம்ம வீடு பக்கம் தான்.. அருமையான இடம்...
/*நீங்க எங்க இருக்கீங்க?*/
எனக்கு.. அன்னா நகர்..இப்போ வெளியூரில்..
/*பயங்கரமா இருந்துச்சு.அதனால நீங்க ஒரு பயங்கரமான ஆளுன்னு நினைக்கிறேன்*/
விட்டா..தினசரில சொல்லுற மாதிரி...பயங்கரவாதி அப்படின்னு சொல்லுருவீங்க போலிருக்கே....அது சும்மா..அனானி அன்பர்கள்...சூடாக்கிட்டாங்க... மத்த பதிவு எல்லாம்..காத்து வாங்குது...

said...

//பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது இரண்டு ஃபுல் ரம் காலி.சைட் டிஷ் மிக்சர்,மில்க்ஸ்வீட்.//

அய்யா ஜாஜா,
நாளப் பின்ன நான் காலேஜ் பக்கம் போகவேணாமா ..?

நீங்க சொன்னமாதிரி இரண்டு புல் ரம் இல்லை; ஆறு பேத்துக்கு சரியா ஒன்றரைதான் ஆச்சு. மீதிய வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் குடிச்சிட்டேன்.

எதுக்கும் நீங்க சொன்ன ரம் அப்டின்றது நம்ம ஊரு Bovonto தான் அப்டின்னு சொல்லியிருக்கலாம்ல...

அப்படியே அந்த tbcd யாருன்னு பிடிங்க...நம்ம ஊரு ஆளுங்களையெல்லாம் திரட்டிர வேண்டியதுதான்.

said...

//வீடு திரும்பியதும் மனது கனத்துப் போயிருந்தது.ஒரு அழகு நங்கையாக திகழ வேண்டிய லிவிங்ஸ்மைல் வித்யா,
இயற்கையின் சிறு எழுத்துப்பிழையால் தன் வாழ்நாள் முழுதும்//

ஜாலி ஜம்பர் அய்யா,

அடேங்கப்பா,இந்த மாதிரி ஜல்லியா.இயற்கையின் சிறு எழுத்துப் பிழை,சரி.அழகு நங்கை,ஓவர்.
அது சரி.இயற்கை செய்த சிறு எழுத்து சதியால தானே நீங்க கூட மனுஷனா இல்லாம ஜம்ப் அடிக்கும் ஓசி பிரியாணி குஞ்சா பிறந்தீங்க.என்ன செய்வது?

said...

தருமி அய்யா,மன்னிக்க வேண்டுகிறேன்.இதையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்று எண்ணியே எழுதிவிட்டேன்.

மக்களே ,நாங்கள் அருந்தியது பவண்டோ என்ற மென்பானம்.

said...

பாலா,
என்னை என்ன வேணும்னானும் திட்டுங்க.லிவிங்ஸ்மைலை ஏன் வம்பிழுக்குறீங்க.

said...

தேடவே வேன்டாம்...நான் முக்கு சந்துக் கிட்ட தான் நின்னுட்டு இருந்தேன்.. ஹி!ஹி!
தொடர்பு கொல்ல..சீ...கொள்ள..
velaiilley@gmail.com
//*அப்படியே அந்த tbcd யாருன்னு பிடிங்க...நம்ம ஊரு ஆளுங்களையெல்லாம் திரட்டிர வேண்டியதுதான்.*//


//*ஜம்ப் அடிக்கும் ஓசி பிரியாணி குஞ்சா பிறந்தீங்க.என்ன செய்வது?
*//
அங்கு இங்கு என்று இல்லாமல் எங்கும் இருக்கும் பாலா.. மருத்துவர பாத்தீங்களா..??

said...

தொடர்பு கொல்ல..சீ...கொள்ள..
velaiilley@gmail.com

தருமி அய்யா,நம்ம டிபிசிடிக்கு நீங்களே ஒரு அழைப்பு அனுப்பி விடுங்களேன்.எனக்கு சரியான வழிகள் தெரியவில்லை.

said...

நீங்க சொன்னமாதிரி இரண்டு புல் ரம் இல்லை; ஆறு பேத்துக்கு சரியா ஒன்றரைதான் ஆச்சு. மீதிய வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் குடிச்சிட்டேன். //

இது, இது தருமி :-)) சரி, நான் மதுரை இல்லப்பா ஆனா, பக்கத்தூருதான். மதுரை ஆளுன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். நானும் ஆட்டையில கலந்துக்கலாமா?

said...

வாங்க தெகா,மண் மணக்கும் உங்கள் பதிவுகளைப் பார்த்து ஆஹா!கலக்குகிறாரே என்று நினைப்பேன்.நம்மூரு எஃபெக்ட் தானா அது!.
இப்பவே தருமி அய்யாவுக்கு ஒரு கடுதாசி போட்டு விடுகிறேன்.

said...

/இது, இது தருமி :-)) சரி, நான் மதுரை இல்லப்பா ஆனா, பக்கத்தூருதான். மதுரை ஆளுன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். நானும் ஆட்டையில கலந்துக்கலாமா?//


தெ.கா,

ஒங்க மெயில் ஐடி சொல்லுங்க....

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்