கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, August 7, 2007

குறி கேட்கப்போன விவசாயி.

பட்டிக்காட்டு விவசாயி ஒருவன் பூசாரியிடம் போய் மழை எப்போது பெய்யுமென்று குறி சொல்லும்படி கேட்டான்.

அந்தப்பூசாரி தடதடவென்று மும்முரமாக உடுக்கை தட்டிக்கொண்டு பின்வருமாறு பாடத்தொடங்கினான்,

கேளப்பா தம்பி,தொண்டி மாடனும் வீரனும் துணையாகக் கேளப்பா,தம்பி,மழைக்குறி சொல்லக்கேள்.

அட இன்னைக்கானாலும்

நாளைக்கானாலும்

ஒரு மாஸஞ் சென்றேனும்

ஒரு வருஷஞ் சென்றேனும்
என்றைக்கானாலும் மழை பெய்தே தீருமடா!

பூசாரி உடல் வியர்க்க இங்ஙனம் பாடி முடித்தவுடன் அவன் இத்தனை சிரமப்பட்டுக் குறி சொல்லியதற்கு மிகவும் நன்றியுடையவனாய்,அந்த மூட விவசாயி பூசாரிக்கு இரண்டு தேங்காய்களும்,வெற்றிலை பாக்கும்,கால்ரூபாயும் காணிக்கை செலுத்திவிட்டு மிகவும் பூரிப்புடன் வீடு போய்ச் சேர்ந்தான்.வீட்டுக்குப் போனவுடன் அவன் மனைவி அவனை நோக்கி,மழை விஷயமாய் குறி கேட்கப் போனீரே?என்ன தெரிந்துகொண்டு வந்தீர் என்று கேட்டாள்.

விவசாயி பித்தனைப்போல் விழிக்கலானான்.நெடுநேரம் யோசித்துப் பார்த்தான்.கடைசியாக,தன் புத்தி ஹீனத்தால் பூசாரியுடைய பாட்டிலும் குடுகுடுப்பைச் சத்தத்திலும் மயங்கிப்போய் விஷயமொன்றும் தெரிந்துகொள்ளாமலே மீண்டு வந்த செய்தி அவன் புத்திக்கு எட்டியது.

மனைவியிடம் ஒன்றும் மறுமொழி சொல்லாமல்,உடனே எழுந்து போய் பூசாரியிடம் கால்ரூபாயையும்,தேங்காய்களையும் திருப்பிக் கொடுத்துவிடும்படிக் கேட்டான்.

பூசாரி குறி சொன்ன கூலியைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும், அது சாஸ்திரத்துக்கும்,நெடுங்கால வழக்கத்துக்கும் விரோதமென்றும் இன்னும் தெளிவாகக் கேட்க இஷ்டமுண்டானால் மறுபடி கால்ரூபாயும்,இரண்டு தேங்காய்களும் கொண்டு கொடுக்கும் பட்சத்தில் தான் நொண்டி ராமசாமியையும்,வீரனையுங் கலந்துகொண்டு தெளிவாகக் குறிசொல்லக் கூடுமென்றும் தெரிவித்தான்.

அவன் வீட்டு வாசலிலே நின்று விவசாயி மண்ணை வாரி தூற்றி விட்டுத் தனது இல்லம் போய்ச் சேர்ந்தான்.அது முதல் அந்த விவசாயி எந்த விஷயத்தைக் குறித்தும் யாரிடத்திலும் குறி கேட்பதாகிய பழக்கத்தை அறவே விட்டு விட்டான்.

நன்றி மீசைக்காரக் கவிஞருக்கு.

4 comments:

said...

//தான் நொண்டி ராமசாமியையும்,வீரனையுங் கலந்துகொண்டு தெளிவாகக் குறிசொல்லக் கூடுமென்றும் தெரிவித்தான்//

ஜாலிஜம்பர் அய்யா,
அந்த பூசாரி மஞ்ச துண்டு போட்டு முரசொலியில பாட்டு எழுதுவாரே அவர் தானே?அது சரி,நம்ம தமிழர் தந்தையை எதுக்கு "நொண்டி ராமசாமி"ன்னு சொல்றாரு?வயசான காலத்துல கைத்தடி வச்சு நடந்ததாலயா?ரொம்ப குறும்பு தான் தலைவருக்கு?அப்புறம் வீரன் யாரு?ரெட்டை குழலில் ஒரு குழலான மானமிகு அய்யாவா?

பாலா

said...

பாலா அய்யா,அவரு மஞ்சள் துண்டு போட்டா உங்களுக்கு ஏன் வலிக்குது?.நீங்களும் ஒரு மஞ்சள் துண்டு வாங்கிப் போட்டீங்கன்னா நொண்டி ராமசாமி உங்களையும் முதலமைச்சராக்கி விட்டுருவாரு.

said...

ஜாலி ஜம்பர் அய்யா,

நான் ஒரு மூடன், பைத்தியக்காரன். அறிவுதெளிவில்லாமல் ஏதோ உளறிகொட்டிவிட்டேன். உங்கள் காலை பிடித்து மன்னிப்பு கேட்கிறேன். மன்னியுங்கள் அய்யா.

பின்னூட்ட வெறியன் பீலா ரசிகன் said...

நீ ஒரு மூடன்னு உலகத்துக்கே தெரியுமே.ஜாலி காலை விடு ,உதைச்சா தாங்க மாட்டாய்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்