கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, July 7, 2007

ஒரு மினி வலைபதிவர் சந்திப்பு.

திடீரென ஒருநாள் தருமி அய்யாவிடமிருந்து அழைப்பு.இன்று மாலை (24-6-2007) ஓகை அவர்களை சந்திக்க உள்ளேன்.கலந்து கொள்ள இயலுமா? என்று கேட்டார்.கரும்பு தின்ன கூலியா என்ன?

ஓகை அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று காத்திருந்தேன்.தருமி அய்யா வந்து என்னையும்,ஓகை அவர்களையும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்ரார்.தருமி அம்மா முகம் மலர வரவேற்று எங்களை உள்ளே அனுப்பி வைத்தார்.

நொங்கும்,மாம்பழத் துண்டுகளும் வெட்டிப்போட்டு ஊறவைத்த குளுகுளு பால் தரப்பட்டது.அதை உள்ளே தள்ளி உடலையும்,மனதையும் குளிர்ச்சியாக்கி விட்டு உரையாடலை தொடங்கினோம்.

ஓகை அவர்கள் இறையுணர்வு எவ்வாறு மனிதனுக்கு இன்றியமையாதது என்று விளக்கினார்.பசி,தூக்கம்,உடலுறவு போன்றே இறையுணர்வும் ஒரு அடிப்படையான INSTINCT.அதை மனிதனால் தவிர்க்க இயலாது என்றார்.

தன் நம்பிக்கையை தானே கேள்விக்கு உள்ளாக்க விரும்பாதவரிடம் வாதிடுவதே தவறு என்று நீங்கள் எப்படி சொல்லலாம் என்று கேட்டார்.(இதை சொன்னது கல்வெட்டு.தருமி அவர்கள் அதை மேற்கோள் காட்டியிருந்தார்).நீங்கள் எவ்வாறு உங்கள் இறைநம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கினீர்கள் என்று தருமி அய்யாவிடம் கேட்டதற்கு அவர் அழகாக விளக்கினார்.தான் இறைநம்பிக்கையுடனிருந்த காலங்களில் தனக்கு எந்தவிதமான இறைமறுப்பு சந்தேகங்களும்,கேள்விகளும் வரக்கூடாது என்று வேண்டியதாகவும்,ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை என்றும் கூறினார்.இதைக்கேட்டு ஓகை அவர்கள் ஒருகணம் திகைத்தார்.பின் "இது நல்லாருக்கே" என்று நகைச்சுவையாகக் கூறினார்.

தஞ்சைப் பெரியகோயிலைப் பற்றிய பேச்சு வந்தது.அவ்வளவு பெரிய கல்லை கோபுரத்தின் உச்சியில் எப்படி வைத்தார்கள் என்பதற்கு ஓகை அருமையான விளக்கம் சொன்னார்.அது ஒரே கல் இல்லை,பல துண்டுகளாக செய்யப்பட்டு மேலே கொண்டு சென்று பொருத்தப்பட்டது என்றார்.மேலும் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்பதும் தவறான தகவல் என்றும் விளக்கினார்.

பேசிக்களைத்த பின் உணவருந்த சென்றோம்.சப்பாத்தியும்,கோழிக்குழம்பும் தன் கையாலேயே தருமி அய்யா பரிமாறினார்.பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன் என்று சொல்லி உற்சாக பானத்தை ஈடுகட்டும் விதமாக திராட்சை ஜுஸ் கொடுத்தார்.அருந்தி விட்டு பிரியாவிடை பெற்றுச் சென்றோம்.

13 comments:

said...

உற்சாக பானம் இல்லை என்று எப்படி சொல்லமுடியும்? அதுதான் திராட்சை, நொங்கு,மாம்பழம் என raw material
ஆக கொடுத்திருக்கிறாரே!

said...

//பெரிய கல்லை கோபுரத்தின் உச்சியில் எப்படி வைத்தார்கள் என்பதற்கு ஓகை அருமையான விளக்கம் சொன்னார்.அது ஒரே கல் இல்லை,பல துண்டுகளாக செய்யப்பட்டு மேலே கொண்டு சென்று பொருத்தப்பட்டது என்றார்.மேலும் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்பதும் தவறான தகவல் என்றும் விளக்கினார்.///

அப்படியா?
ஏதோ டாக்குமெண்டரீல, பெரிய கல்ல யான வச்சு மேல கொண்டு போணாங்கன்னு சொன்னாங்க சாரே.
நிழலும் வீழாதாம் தரைல.

ஓகை கிட்ட முழூ விவரம் கேட்டு பதீயுங்களேன்.

நன்றி!

said...

ஆமாம் பாபுமனோகர்,அன்று இரவு முழுவதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்.அது அந்த மூலப்பொருட்களின் வேலை தான் போல.

said...

இந்தப் பதிவுக்கு நன்றி ஜாலிஜம்பர்.

பாபு மனோகர் ஒரு வேதியியல் வல்லுனரோ?

சர்வேசன் மற்றும் ஜாலிஜம்பர்,
என பதிவில் கப்பிப்பயல் கதையைப் படித்துப் பாருங்கள். இக்கதையை பல ஆதாரங்களை அலசிய பின்னரே நான் எழுதினேன். இப்பதிவில் வந்திருக்கும் பின்னூட்டங்களையும் நான் கொடுத்திருக்கும் வேறு சுட்டிகளையும் கட்டாயம் படித்துப் பாருங்கள். மேலும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் நான் அறிந்ததைச் சொல்கிறேன்.

said...

தஞ்சை பெரிய கோயிலின் விமான கோபுரத்தில் இருப்பது ஒரே கல் தானென்றும்... சாரம் கட்டி யானை மூலமாக ஏற்றிச் சென்றதாகவும் கல்வெட்டுகள் இருப்பதாக படித்திருக்கிறேன். சாரம் கட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். அந்த இடத்தின் பெயரே சாரப்பள்ளம் என்பதாகவும் நினைவு!

said...

அன்று இரவு முழுவதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்.அது அந்த மூலப்பொருட்களின் வேலை தான் போல.//

:))

said...

சர்வேசன்,லக்கி வருகைக்கு நன்றி.ஓகை அவர்களின் பின்னூட்டத்தை பிடித்துச் செல்லுங்கள்.புதிய தகவல்கள் கிடைக்கும்.

said...

ஓகை அவர்களே தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.இணைப்புகள் நல்ல விளக்கத்தை கொடுத்தன.தங்களுடைய தமிழ் ஆளுமை பிரமிக்க வைக்கிறது.

said...

//அன்று இரவு முழுவதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன்.அது அந்த மூலப்பொருட்களின் வேலை தான் போல.//

:)) //

தருமி அய்யா,நீங்கள் சொன்னதின் அர்த்தம் தாமதமாகத்தான் புரிந்தது.:-))

said...

தான் இறைநம்பிக்கையுடனிருந்த காலங்களில் தனக்கு எந்தவிதமான இறைமறுப்பு சந்தேகங்களும், கேள்விகளும் வரக்கூடாது என்று வேண்டியதாகவும்,ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை என்றும் கூறினார்//
இந்த மாதிரி எல்லாம் கடவுளை குழப்பினால்....!!! பாவம் கடவுள் :-)

said...

வருகைக்கு நன்றி ராமச்சந்திரன் உஷா.கடவுளை எதிர்த்து கேள்வி கேட்டாலும் நம்மை மன்னித்து விடுவான் என்ற நம்பிக்கையிலேயே தருமி அய்யா இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார் என்று நினைக்கிறேன்.:-))

said...

//இந்த மாதிரி எல்லாம் கடவுளை குழப்பினால்....!!! பாவம் கடவுள் :-)//

கடவுளுக்காகக் கவலைப் படும் உஷாக்கா வாழ்க!

said...

வருகைக்கு நன்றி சிபி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்