கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Sunday, July 8, 2007

இந்தியாவின் நம்பர் 1 பிரதமர் மரணம்.

50 எம்பிக்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் பிரதமராகலாம் என்று நிரூபித்த 5 மாதங்கள் இந்தியாவை ஆண்ட முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மரணமடைந்தார்.இந்தியாவின் சிறந்த பிரதமர்களை வரிசைப்படுத்திய சோ அவர்கள் சந்திரசேகரையே அனைவரிலும் சிறந்தவர் என தேர்ந்தெடுத்தார்.இவருக்கு அடுத்து தான் நரசிம்மராவ்,இந்திராகாந்தி,ராஜிவ்காந்தி,வி.பி.சிங் முதலியோர் இருந்தனர்.

11 comments:

said...

சந்திரசேகரையே அனைவரிலும் சிறந்தவர்//

அப்டியா?

Anonymous said...

cho is a useless man. Dont say about his selection

said...

ஆமாம் தருமி அய்யா,50 எம்பிக்களை வைத்து ஆண்டாலும் அதிகாரத்தை நிலைநாட்ட அவர் தவறியதேயில்லை.

அனானி,சோவின் மேல் ஏன் இத்தனை கோபம்?.நீங்கள் அணிந்திருக்கும் கலர் கண்ணாடியை கழற்றி விட்டுப் பாருங்கள்.

Anonymous said...

ஆட்சியில் இருக்கும் வரை ராஜீவின் கை பொம்மையாகதானே இருந்தார், இதில் எங்கிருக்கு அவர்கையில் ஆட்சி அதிகாரம், கலைஞர் ஆட்சியை கலைத்தபடியால் சோ அவரை ஆதரிக்கலாம்,
தமிழக ஆட்சியை கலைத்து ராஜீவின் உயிருக்கு உலைவைத்தவர், தமிழக ஆட்டிசியை கலைத்த படியால்தான் தமிழகம் அவருக்கு தகுந்த பாதுகாப்பை கொடுக்கதவறியது.

Anonymous said...

அன்னாரைபிரிந்து வாடும் இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

இந்திராவைவிட ஒரு நம்பர் வன் பிரதமர் இந்தியாவுக்கு கிடைப்பாரா? சோ ஒரு யூஸ்லஸ் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

said...

எனக்கு தெரிந்த ஒரு பையனுக்கு இருதைய அறுவை சிகிச்சைக்காக அப்போதைய பிரதமர் சந்திரசேகர் அவர்களை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு நிதி உதவி கோரினோம். கடிதம் அனுப்பிய சில தினங்களிலேயே
நிதி உதவி அந்த பையனை அடைந்தது.
அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்தவுடன் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

ஜாலி...நீங்கள் சொன்னபடி comment moderation enable செய்தாகிவிட்டது. தகவலுக்கு நன்றி.

said...

தங்கள் அனுபவத்தை பகிந்து கொண்டதற்கு நன்றி பாபு.

said...

//இந்திராவைவிட ஒரு நம்பர் வன் பிரதமர் இந்தியாவுக்கு கிடைப்பாரா? //

சந்திரசேகருக்குக் கொடுத்த அதே reaction-யைத்தான் இவருக்கும் கொடுக்க வேண்டியதுள்ளது!

"அப்டியா?"

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருத்தர் பிடிக்கும் போலும்...

said...

தருமி அய்யா,எனக்குப் பிடித்த பிரதமர் நரசிம்மராவ்.ஒரே குறை சிரிக்கத் தெரியாதது ஒன்று தான்.

Anonymous said...

சினிமா கோமாளித்தன அறிமுகத்தால் பத்திரிகை நடத்தும் நபர் சோ.
லூஸ் மோகன், செந்தில் கூட இதைச் செய்யலாம். கலைஞருக்கு ஆப்பு வைத்தார் என்பதால் சோ சந்திரசேகரை தூக்கிப் பிடித்தால் ... உனக்கு சொந்தப்புத்தி கிடையாதா?

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்