கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, July 10, 2007

அனானிகளின் அக்கப்போர்

அனானி ஒருவர் என்னை தாறுமாறாக திட்டித்தீர்த்திருந்தார்.வசவாளர்கள் வாழ்க என்று பெருந்தன்மையுடன் சொன்ன கலைஞர் வழி வந்த எங்களால் அவரைப் போன்றே திருப்பி திட்டத் தெரியாது.

அக்கப்போர் என்ற வார்த்தையை மதுரையில் சிலபேர் டக்கப்போர் என்று சொல்வார்கள்.அக்கப்போர் என்ற அழகான வார்த்தையை இப்படி டக்கப்போர் என்று சொல்லி அக்கப்போர் செய்கிறார்களே என்று யோசிப்பதுண்டு.

அப்போது தான் TUG OF WAR என்ற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டேன்.இதற்கு "இழுபறி பந்தயம்" என்று அர்த்தம் கூறப்பட்டிருந்தது.

இதற்கும் அக்கப்போருக்கும் தொடர்பு இருக்குமோ என்று இணையத்தில் தேடினேன்.

அக்கப்போருக்கு இரண்டு முடிவுகள் கிடைத்தன.
1.அக்பார் என்ற உருதுச்சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை.அக்பார் என்றால் செய்தி என்று பொருள்.கற்பனையாகக் கூறப்படும் பொய்ச் செய்திகளை தான்
அக்கப்போர் என்று குறிப்பிடுகிறோம்.
2.அக்கப்போர் என்பது TUG OF WAR என்பதிலிருந்து தக்கப்போராகி பின் அக்கப்போரானது .

என்று இரண்டு விதமாக அறிந்து கொண்டேன்.

4 comments:

Anonymous said...

This is very nice;but you haven't answered the question.Will you provide the answer please?

தமிழன்பன் said...

வெள்ளைக்காரனுக்குப் பிறந்த வெள்ளைக்காரா , தமிழ்ல எழுதுடா

said...

என்னமோ சொல்லவாறிங்க..ஆனால் புரியலை..ஹிஹிஹ்ஹி

said...

வாங்க தூயா,அக்கப்போர் என்பது தமிழ்நாட்டு தமிழர்களிடையே பேச்சு வழக்கில் உள்ள ஒரு வார்த்தை.அதைப்பற்றிய சிறு விளக்கம் தான் இப்பதிவு.

இதில் ஏன் அனானியை இழுத்தேன் என்று குழம்பினால் இதற்கு முந்தைய பதிவை பார்க்கவும்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்