கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, July 12, 2007

விகடனுக்கு வந்த வேதனை

சென்னையில் பிரதிபா பாட்டீல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பேரணி குறித்து ஆனந்தவிகடனின் பதிப்பாளர் ஒரு பக்க கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.அதன் இறுதிப் பகுதியில்-

"கட்சி பலத்தை ஊரறியக்காட்டி முண்டா தட்டுவதற்காக,ஊர்வலம்,பேரணி என்று நடத்தி போக்குவரத்தை மூச்சு திணற வைத்து, கட்சித்தொண்டர்களையும்,கட்சிக்கே சம்பந்தமில்லாத பொதுஜனங்களையும் ஒருசேர மண்டை காய வைக்கிற தலைவர்கள் இனியாவது யோசிக்கலாமே"

-என்று எழுதியிருக்கிறார் பதிப்பாளர்.

திருவாரூர் தேரோட்டம்,திருச்செந்தூர் தேரோட்டம்,கபாலி கோயில் தேரோட்டம் போன்றவைகள் எல்லாம் நடத்தப்படும் போது போக்குவரத்து திணறுவதில்லையா?

மயிலை அறுபத்துமூவர் உற்சவம் என்றால் ஒருநாள்-இரண்டு நாளல்ல;10 நாட்களுக்கு மேல் அந்தப் பகுதியிலேயே பஸ்கள் செல்லாமல் திருப்பி விடப்படுகிறதே;

அப்போதெல்லாம்-போக்குவரத்து திணறுகிறது;பொதுஜனங்களின் மண்டை காய்கிறது என்று எழுதத்தோன்றியதில்லையே விகடனாருக்கு ஏன்?

அப்போது தேர்மேல் அமர்ந்து வெயில் படாமல் வருபவர்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவர்கள்;வெயிலில் வியர்க்க வியர்க்கவடம் பிடித்து தேரை இழுப்பவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் என்று கூறப்பட்டிருப்பதாலா?

நன்றி-முரசொலி

28 comments:

said...

சாட்டையடி கேள்வி.

பொதுமக்களுக்கு இடையூறு என்று ஈனக்குரலில் பேசுவது எல்லாம் தமது ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொள்ளும் செயலே. விகடன் வெளிப்படையாக தன் இயல்புக்கு இப்போதுதான் வந்திருக்கிறது என்று மகிழுங்கள் :-)

***************************
**மதுரையா நீங்க**

Anonymous said...

இந்த மாதிரி மேட்டரை எல்லாம் டாக்டர் கலைஞர் வலைப்பூவில் போடலாமே?

said...

நடுநிலையாக இருந்து இடிக்கிறார்களாம்.

ஆமாம் முத்துக்குமரன் மதுரையில் தான் இருக்கிறேன்.நீங்களும் மதுரை தானா?

said...

விகடன் சொன்னதில் என்ன தவறு? அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லி வாக்கு வாங்கி வருகிறார்கள் அப்படி இருக்க ,இடையூரு செய்வது ஏன்? கடவுள் அப்படி கமிட்டெட் கிடையாதே! (கடவுள் இல்லை என்பது எனது வாதம் அது வேறு) மேலும் சென்னை அண்ணா சாலையில் ஊர்வலம் , பேரணி நடத்த உச்சனீதிமன்ற தடையே உள்ளது!

அரசியல்கட்சிகளின் சுயலாபத்திற்க்காக நடத்தபடும் மாநாடு , பேரணி எல்லம் சகித்துகொள்ள வேண்டுமா?

said...

வாங்க வவ்வால்,
இல்லாத கடவுளுக்கே ஊர்வலம் போகும் போது , உயிருடன் இருக்கும் மக்களுக்காக,அவர்களின் உரிமைகளுக்காக ஊர்வலம் போவதில் என்ன தவறு இருக்கிறது?

1972லேயே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை தடை செய்த மேதாவிகள் இருக்கும் இருக்கும் இடம் தான் சுப்ரீம் கோர்ட்.

said...

//இந்த மாதிரி மேட்டரை எல்லாம் டாக்டர் கலைஞர் வலைப்பூவில் போடலாமே? //
ஆகட்டும் அனானி.

முத்துக்குமரன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

said...

அவர்கள் போகிறார்கள் என்பதற்காக நாங்களும் போவோம் என்று சொல்வது சரியில்லை... அவர்கள் கடவுள் பெயர் சொல்லி மக்களை திணறடிக்கிறார்கள்.. அரசியல்வாதிகள் தலைவர் பெயரை சொல்லி மக்களை திணறடிக்கிறார்கள்.. எல்லாம் ஒன்று தான்... எதிர்ப்பை, ஆதரவை காட்ட ஆயிரம் வழிகள் இருக்கிறது... மக்களை தொல்லைப்படுத்தி எவ்வளவு தொல்லை அதிகமாக கொடுக்கிறோமோ அவ்வளவு வெற்றி என்று நினைக்கும் ம்னப்பாங்கை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்..

மக்களுக்கு பிரச்சினை ஆகிறது என்றால் அது என்ன ஊர்வலம் என்றாலும் அதை நிறுத்த வேண்டியது தான்..

அங்கே மதத்தில் அரசியலை கலக்க பார்க்கிறார்கள்.. இங்கே கட்சி அரசியலை மதமாக்க பார்க்கிறார்கள்...

said...

மாயன் உங்கள் கருத்து ஏற்புடையதே.
வருகைக்கு நன்றி.

விசாலாட்சி மூர்த்தி said...

நன்னா கேட்டேள் போங்கோ என் ஆத்துகாரருக்கும் இதை போல செய்திகள் தான் பிடிக்கும்

said...

ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

:((

said...

உண்மையைச் சொன்னால் விடமாட்டீங்களே

said...

//அவர்களின் உரிமைகளுக்காக ஊர்வலம் போவதில் என்ன தவறு இருக்கிறது?//

பிரதிபா பாட்டில் பதவிக்கு வருவது மக்கள் உரிமையா , உங்கள் நகைச்சுவைக்கு ஒரு அளவில்லையா?

இடையூரு செய்வது போன்று செயல்படுவது அரசியல் கட்சிகளின் வாடிக்கை, அதை குறை சொல்லாமல் இருக்க வேண்டுமா?

கோயில் திருவிழாக்கள் என்பது பெரும்பாலான மக்கல் விரும்பி ஏற்பது அதற்கும் அரசியல் ஊர்வலத்திற்கும் வித்தியாசம் உண்டு. என்னை பொருத்தவரை இரண்டும் தேவை அற்றது. ஆனால் அரசியல்வாதிகள் செய்வது அதிகார துஷ்பிரயோகம்.

சுப்ரீம் கோர்ட் அப்படி இப்படி என்று சில சமயங்களில் தீர்ப்பு வழங்க வேண்டியது இருக்கும் காரணம் , எதிர்த்து வாதிடுவோர் உரிய காரணங்களை விளக்காமல் வேண்டும் என்றே விடுவது தான்.

உதாரணம் வேண்டுமா... சென்னையில் உள்ள விளம்பர பலகைகளை எடுக்க சொல்லி அரசு உத்தரவிட்டது, அதற்கு தடை ஆணை பெற்றார்கள். அந்த தடை ஆணை என்பது ஒர் குறிப்பிட்ட காலத்திற்கு தான் அதன் பின்னர் செல்ல்லதது ஆகிவிடும் , ஆனால் அதையே அரசும் காரணம் காட்டி விளம்ப்பரப்பலகை பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளது. காரணம் கட்டிங் வாங்கி கொள்வது தான். இதற்கு உச்சா நீதிமன்ற தடை உள்ளது நாங்கள் எதுவும் செய்ய முடியது என்பார்கள்.

எனவே எதிலும் சட்டப்படி செயல்படத்தான் நீதிமன்றங்கள் பார்க்கும் வாதங்களை எடுத்து வைப்பதில் தான் நீதி நிலைனாட்டப்படும்.

அக்ணிஹோத்ரம் said...

முன்னேல்லாம் சோ அம்பி,நரசிம்மன் ராம் அம்பி,தின மலர் அம்பிகள்தான் இப்படி எழுதிண்டிருந்தா.இப்போ இந்தக் குருமூர்த்தி அம்பியும்,வாசனின் சின்ன அம்பி சீனுவும் சேந்துட்டா.
அட அம்பிகளா அவாப் பணத்திலே பொளப்ப நடத்தீண்டு அவாளையே முட்டாளாக்க்கப் பாக்களாமோ?நேக்கு நல்லதாப் படலே.அவாள்ளாம் முழிச்சுண்டு ஏதோ பண்ணப் போறா,அப்போ குய்யோ முறையோன்னுக் கத்தி என்ன ஆவப் போறது?

said...

//ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

:(( //

சிறில்,மக்களுக்கு சிரமம் ஏற்படுவதை மட்டும் தான் பார்க்கிறோம்.ஆனால் இந்த ஊர்வலம்,பேரணி எல்லாம் மக்களுக்கு அல்லாமல் வேறு யாருக்காக.
வருகைக்கு நன்றி.

said...

விசாலாட்சி மாமி,மூர்த்தி சார் மாதிரி அனைவரும் இருந்து விட்டால் இந்தியா எங்கேயோ போய்விடும்.

said...

//உண்மையைச் சொன்னால் விடமாட்டீங்களே //

அருள்,மக்கள் இருக்கும் இடத்தில் ஊர்வலம் போகாமல் அடர்ந்த காட்டுக்குள்ளேயா போகமுடியும்?

said...

//பிரதிபா பாட்டில் பதவிக்கு வருவது மக்கள் உரிமையா , உங்கள் நகைச்சுவைக்கு ஒரு அளவில்லையா?//

வவ்வால்,பிள்ளையார் கையில் ஏகே47,கிரிக்கெட் மட்டை கொடுத்து சுமந்து வருகிறார்களே அது துயரச்சுவை மிகுந்த நகைச்சுவையாக தெரியவில்லையா?

said...

அக்ணி,நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க.

said...

//இந்த ஊர்வலம்,பேரணி எல்லாம் மக்களுக்கு அல்லாமல் வேறு யாருக்காக.//

ஒரு கட்சிப் பேரணியில் கலந்துகொள்பவருக்கு கிடைக்கும் பலன்களையும் கோவில் ஊர்வலத்தில் கிடைக்கும் பலன்களையும் ஒப்பிட இயலாது.

கடவுள் இருப்பை நம்பிவிட்டால் (அப்படி நம்புவது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறபோது) கோவில் ஊர்வலத்தின் பலத்தை இன்னும் மேலாய் உணர இயலும்.

said...

//ஒரு கட்சிப் பேரணியில் கலந்துகொள்பவருக்கு கிடைக்கும் பலன்களையும் கோவில் ஊர்வலத்தில் கிடைக்கும் பலன்களையும் ஒப்பிட இயலாது.//

சிறில்,கோவில் ஊர்வலத்தினால் கிடைக்கும் பலன்கள் நல்லவை,அரசியல் ஊர்வலத்தினால் கிடைக்கும் பலன்கள் கெட்டவை என்று நினைக்கின்றீர்களா?

கோவில் ஊர்வலங்களினால் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியுமா?

ஒரு உதாரணம்.இவ்வருட மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நூறு மாணவர்களில் கிட்டத்தட்ட 80 பேர் BC,SC பிரிவை சேர்ந்த மாணவர்கள்.நாற்பது வருடங்களுக்கு முன் இந்த நிலை இருந்ததா?

இந்த மாற்றங்களுக்கு காரணம் கடவுளா?அரசியல் இயக்கங்களா? .நீங்களே சொல்லுங்கள்.

said...

//பிள்ளையார் கையில் ஏகே47,கிரிக்கெட் மட்டை கொடுத்து சுமந்து வருகிறார்களே அது துயரச்சுவை மிகுந்த நகைச்சுவையாக தெரியவில்லையா?//

நகைச்சுவை தான் , அதை விட ... வோட்டு வாங்குவதற்காக இஸ்லாமியர்களின் நோன்பின் போது குல்லா போட்டுக்கொண்டு இப்தார் விருந்தில் கலந்து கொண்டு நோம்பு கஞ்சிக் குடிக்கும் பகுத்தறிவு அரசியல்வாதிகளின் செயல் தான் மிகுந்த நகைச்சுவை!

நான் சொல்வது கடவுள் சேவை செய்வேன் வோட்டு போடுங்கள் என்று கேட்பதில்லை , மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொல்லும் அரசியல்வாதிகள் பேரணி என்ற பெயரில் இடையூறு செய்தல் கூடாது என்பதே எனது கருத்து!

said...

'விகடன்' எழுதியிருப்பது, தேவையில்லாமல் திசைதிருப்பப்பட்டுள்ளது. 'விகடனுக்கும் கலைருக்கும் உள்ள நட்புறவை
அறியாதவர்கள், எதெதற்கோ 'முடிச்சு' போடுகிறார்கள். எம்.ஜி.ஆர்.முதல்வராய் இருக்கும் போதே, தன் பத்திரிகை பொன்விழா கவியரங்கத்திற்கு, கலைஞரைக்கூப்பிட்டுத் தலைமைத்தாங்க வைத்த, தமிழ்ப்பற்றுள்ள பத்திரிகை விகடன். விகடனின், சமீபத்திய தமிழ் 'என்செய்க்ளோபீடியா' வெளியீட்டில், தலைமை தாங்கிய கலைஞர்
சொன்னதைத்தான் பதிலாகச்சொல்ல முடியும்: "இதை விகடன் செய்யவில்லை என்றால் தான் நான் ஆச்சரியப்படுவேன்"

'இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.' என்கிற குறளை கலைஞர் நன்கு அறிவார். குறளோவியம் எழுதிய அவருக்கு
தெரியாததா?.. பாவம், இந்த முதிர்ந்த
வயதில் அவரும் தான் எத்தனை விஷயங்களில் கவனம் செலுத்துவார்?
'முரசொலி'யில் இப்படி நல்லுறவைக்
கெடுக்கிற மாதிரி எழுதியமைக்கு உண்மையிலேயே கலைஞர் வருத்தப்படுவார் என்றே நினைக்கிறேன். கலைஞர் மிகச்சிறந்த
பத்திரிகையாளர், பத்திரிகைக்களுக்கிடையே பகைமை
ஏற்படுகிற மாதிரி எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார் என்பதைப் பல நேரங்களில் பலர்
மறந்து விடுகின்றனர்.

said...

வவ்வால்,வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தரும் அமைப்புகளாக இஸ்லாமும்,கிறிஸ்தவமும் உள்ளது என்ற அடிப்படையில் தான் கலைஞர் அவர்களுடன் நட்புறவோடு இருக்கிறார் என்று தான் கருத முடிகிறது.

said...

ஜீவி அய்யா,
கலைஞரும் இதே கருத்தில் தான் தன் பதிலை எழுதியுள்ளார்.அவர் எழுதியதை கீழே தருகிறேன்.

//கலைஞர்:-அறுபது ஆண்டுக்கால சுதந்திரத்தில் முதன்முதலாக ஒரு பெண் ஜனாதிபதி பதவிக்கு வரப்போவதை முன்னிட்டு,தமிழ்நாட்டுத்
தாய்க்குலம் நடத்திய பேரணியைப் பற்றி விகடன் சீனு இப்படி எழுதியிருக்கிறார்.இந்தப் பேரணியாவது மாலை 4 மணிக்கு நடந்தது.
திமுக ஆட்சியில் உலகத்தமிழ் மாநாட்டை முதன்முதலாக அண்ணா நடத்தியபோது இந்த சீனுவின் பாட்டனார் எஸ்.எஸ்.வாசன் அவர்கள்
முன் நின்று , பகல் 12 மணிக்கு அவ்வளவு பெரிய ஊர்வலத்தை ஆரம்பித்து ஒத்திகை பார்த்து நடத்தினாரே;அப்போது லடசக்கணக்கான
மக்களின் மண்டைகளையும் வெயிலில் காயவைக்கும் அளவிற்கு -நமது பண்டைய பெருமைகளைச் சொல்லும் பவனி நடத்தவில்லையா?
இப்போதாவது மாலைவெயில்;மனிதருக்கு மருந்து போன்றது! தம்பி சீனு விநாயக சதுர்த்தியன்று சென்னை வீதிகளில் செல்லும்
ஊர்வலங்களைப் பார்த்ததில்லை போலும்!தற்போது நடைபெற்ற பவனி கூட, சாலையில் ஒரு பக்கத்தில் வழிவிட்டு அதுவும் மிகச்சிறிய
தூரம் செல்வதற்கு மட்டுமே நடத்தப்பட்ட ஒன்றாகும்.அதுவும் மாலை 5 மணி அளவில் ஆரம்பித்து 7.15 மணி அளவில் முடிந்து விட்டது.
அதற்காக அந்த வார இதழில் முதல் பக்கத்தில் "வெயிலோடு போராடி,வியர்வையில் நீராடி" என்றெல்லாம் தலைப்பிட்டு அந்தப் பதிப்பாளர்
இந்த எதிர்ப்பினை முழக்கியிருக்கிறார்.//

கலைஞர் ,நட்பு வேறு , கொள்கை வேறு என்பதில் தெளிவாக இருக்கிறார்.ரஜினியுடன் உளப்பூர்வமான நட்புடன் இருந்த காலத்திலேயே,
அப்போது ரஜினி , ஜெ
யுடன் நட்பு பாராட்டவில்லை,அவர் 2000 வருட பாபா கதை சொல்லிய போது அதை சுட்டிக்காட்டி கண்டிக்கத் தவறவில்லை கலைஞர்.

said...

//வவ்வால்,வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தரும் அமைப்புகளாக இஸ்லாமும்,கிறிஸ்தவமும் உள்ளது என்ற அடிப்படையில் தான் கலைஞர் அவர்களுடன் நட்புறவோடு இருக்கிறார் என்று தான் கருத முடிகிறது.//

இது தான்யா இந்தா ஆண்டின் தலை சிறந்த நகைச்சுவை! :-))

அப்போ இந்து மதத்தில் வஞ்சிக்கப்பட்ட மக்களே இல்லையா, ஒரு பெரியபளையத்தம்மன் கோவிலில் போய் கூழ் குடிப்பாரா கலைஞர்! என்னை கேட்டா பகுத்தறிவுனா எல்லா மதமும் வேண்டாம்னு இருக்கனும். எதுக்கு இந்த வேஷம்!

இன்னமும் கண்டதேவி தேர் இழுக்க ஒரு பகுதி மக்களுக்கு அனுமதி இல்லை அதை எல்லம் வஞ்சிக்கப்பட்ட பட்டியலில் வராதா?

said...

//இந்து மதத்தில் வஞ்சிக்கப்பட்ட மக்களே இல்லையா//

இந்து மதத்திலுள்ள வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஓட்டுக்களைப் பெற்று தான் கலைஞர் முதல்வராகியுள்ளார்.

//ஒரு பெரியபளையத்தம்மன் கோவிலில் போய் கூழ் குடிப்பாரா கலைஞர்! //

பங்காரு,சாய்பாபா போன்றவர்களின் விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறாரே!

//கண்டதேவி தேர் இழுக்க ஒரு பகுதி மக்களுக்கு அனுமதி இல்லை அதை எல்லம் வஞ்சிக்கப்பட்ட பட்டியலில் வராதா? //

அதற்கு நல்லதொரு தீர்வு கலைஞர் ஆட்சியில் காணப்படும் என்று நம்புவோம்.பத்து வருடங்களாக இருந்த பாப்பாபட்டி,கீரிப்பட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லையா?

said...

ஆஹா சாய்பாபாவையும் பஙாருவைஉம் வருஷா வருஷம் கலைஞர் பார்க்கிறார் என்பதை நான் அறியாமல் போய்விட்டேனே. ஆனாலும் இப்படி போய் கஞ்சிக்குடிக்கவா அவர்களை பார்க்கிறார் , தண்ணீர் கோண்டு வந்தார் அதன் பொருட்டும், மேல்மருத்துவரில் ஏதோ ஒரு விழா என்றும். இப்படி சாதாரணமாக முஸ்லிம்களின் ஒரு நிகழ்வை சிறப்பிக்கு போவது போலவா ஆண்டு தோறும் செல்கிறார் கலைஞர்.

வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஓட்டை வாங்கி மேலும் வஞ்சிக்கிறார் அவ்வளவே.

கண்டதேவி இன்று நேற்றா இருக்கிறது , இல்லை இவரும் இன்று தான முதல்வர் ஆனார். எத்தனை காலம் இவரும் முதல்வர் நாற்காலியை தேய்த்துக்கொண்டு இருக்கிறார் அப்போதே செய்வது.

அழகிரியை ரவுடி ,கொலைகாரன் என சன் டி.வியில் சொன்னதும் சொந்தம் என்றும் பாராமல் தயானிதிமாறனை கண்டித்து யார் என்று நினைத்தீர்கள் அழகிரியை அவன் என் ரத்தம் என்று பொங்கிய வேகத்தை கண்டதேவி தேரோட்டத்துகும் காட்டுவாரா?
எல்லாம் வாக்கு அரசியல் தானுங்க!

said...

//ஆனாலும் இப்படி போய் கஞ்சிக்குடிக்கவா அவர்களை பார்க்கிறார் //

கஞ்சி குடித்தால் முஸ்லிம் ஓட்டு விழும் என்றால் மாரியம்மன் கோயிலில் கூழ் குடித்தால் இந்துக்கள் ஓட்டு விழும் என்று தானே அர்த்தம்.இந்த டெக்னிக்கை கலைஞரும்,ஜெயும் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.

//வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஓட்டை வாங்கி மேலும் வஞ்சிக்கிறார் அவ்வளவே//

அவதூறு பிரச்சாரத்தின் உச்சம்.

//கண்டதேவி இன்று நேற்றா இருக்கிறது , இல்லை இவரும் இன்று தான முதல்வர் ஆனார். எத்தனை காலம் இவரும் முதல்வர் நாற்காலியை தேய்த்துக்கொண்டு இருக்கிறார் அப்போதே செய்வது. //

வவ்வால் தலைவா,35 வருடங்களுக்கு முன் போட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவையே இன்னும் முட்டுக்கட்டை போட்டு நிறைவேற்ற விடாமல் சகுனிகள் சிலர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கண்டதேவி பிரச்சினைக்கு ஆப்பு வைக்கப்படும்,பொறுமையாக இருங்கள்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்