கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, August 23, 2007

கலைஞரே இது நியாயமா?

லவகுசா,மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற படங்களைப் பார்த்து பக்தியில் திளைத்துக் கொண்டிருந்த மக்களை,பராசக்தி படத்தின் மூலம் அவர்கள் சிந்தனைகளை பாழ்படுத்தினீர்களே ,இது நியாயமா?

வேலை வெட்டி இல்லாமல் தொல்காப்பியத்துக்கும்,திருக்குறளுக்கும் உரை எழுதினீர்களே,இது நியாயமா?

தமிழறிஞர்களுக்கும்,கவிஞர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கின்றீர்களே,இது நியாயமா?

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்துள்ளீர்களே,இது அடுக்குமா?தர்மமா?நியாயமா?

பெண்களுக்கும் சொத்துரிமை என்று சட்டமியற்றி ஆண்களுக்கு ஆப்பு வைத்தீர்களே இது நியாயமா?

சத்துணவில் மூன்று முட்டைகள் குழந்தைகளுக்குத் தேவையா?

உழவர் துயர்துடைக்க உழவர்சந்தைகள் அமைத்தீர்களே,இது நியாயமா?

வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றீர்களே,இது நியாயமா?

டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பிய சாலைப்பணியாளர்களை திரும்ப அழைத்து வேலை கொடுத்தீர்களே,இது நியாயமா?

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு 10000,15000 என்று அள்ளிக் கொடுக்கின்றீர்களே,இது நியாயமா?

Wednesday, August 22, 2007

நிஜமாகிவிட்ட தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்

மாபெரும் தாக்கத்தை எனக்கு ஏற்படுத்திய படைப்புகளுள் ஒன்று தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்.காதல் ஒரு சுனாமியாய் என்னை சுருட்டிக்கொண்டு போகவிருந்தபொழுது என்னைக் காப்பாற்றியது இப்புத்தகம்.



கதையின் நாயகி,உயிரினும் மேலாக தன் காதலனைக் காதலிக்கிறாள்.தன் பணியின் காரணமாக சிறிது நாள் வேறிடம் செல்ல நேர்கிறது நாயகனுக்கு.மனமின்றி பிரிகிறான்,எப்படியும் விரைந்து திரும்புவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு .



பிரிவின் வலியை தாங்காமல் தவிக்கிறாள் நாயகி.இச்சூழ்நிலையில் தற்செயலாக ஒருவனை சந்திக்கிறாள்.அவனுடன் பழகிய சில காலங்களிலேயே அவனிடமும் மனதைப் பறிகொடுத்து விடுகிறாள்.



முன்னர் காதலித்தவன் வரமாட்டான் என்றெண்ணி புதியவனிடம் சேர்ந்து வாழத் துணிந்து விடுகிறாள்.



இந்நேரத்தில் விதி விளையாடுகிறது.பழைய காதலன் வந்துவிடுகிறான்.அவனைப் பார்த்தவுடன் குழப்பமடைகிறாள்.இறுதியில் புதிய காதலனைக் கைவிட்டு விட்டு, பழைய காதலனுடன் ஓடோடிச்சென்று சேர்ந்து கொண்டு,புதியவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள்.



தலையில் இடி விழுந்ததைப் போல கலங்கிப்போன புதிய காதலனின் வார்த்தைகள் மூலம் காதலுக்கு புதிய இலக்கணத்தைப் படைக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.



இப்போது விசயத்திற்கு வருவோம்.சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று இன்றைய தினமலரில் வந்துள்ளது.கணினித்துறையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் பல வருடங்களாக ஒருவரைக் காதலித்து பதிவுத் திருமணமும் செய்துள்ளார்.திருமணம் முடிந்தவுடன் கணவர் வெளிநாடு சென்று விட்டார்.



இரண்டு வருடங்களாக தனிமையின் கொடுமையில் இருந்த பெண் இன்னொரு ஆணுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டார்.



இப்போது வெளிநாட்டில் இருந்தவர் வந்துவிட்டார்.ஆனால் பெண்ணோ,புதிய காதலருடன் உள்ளார்.விசயம் காவல்துறை வரை சென்று விட்டது.காவலர் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.



இளம்பெண் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறார்.இன்னும் இரண்டு நாட்களில் தன் முடிவை தெரிவிக்கிறேன் என்று சொல்லி வீடு திரும்பியுள்ளார்.



காதல் மனிதனை என்ன பாடு படுத்துகிறது என்று பாருங்கள்.

அப்பெண் என்ன முடிவு எடுக்கப் போகிறார்?ஆவலுடன் காத்திருக்கிறேன்.

http://www.dinamalar.com/2007aug22/events_tn3.asp

Wednesday, August 8, 2007

என்னோட தங்கமினி-புகைப்பட போட்டிக்கு




எப்படி இருந்த மண்டைய






இப்படி ஆக்கிட்டாங்க.


Tuesday, August 7, 2007

குறி கேட்கப்போன விவசாயி.

பட்டிக்காட்டு விவசாயி ஒருவன் பூசாரியிடம் போய் மழை எப்போது பெய்யுமென்று குறி சொல்லும்படி கேட்டான்.

அந்தப்பூசாரி தடதடவென்று மும்முரமாக உடுக்கை தட்டிக்கொண்டு பின்வருமாறு பாடத்தொடங்கினான்,

கேளப்பா தம்பி,தொண்டி மாடனும் வீரனும் துணையாகக் கேளப்பா,தம்பி,மழைக்குறி சொல்லக்கேள்.

அட இன்னைக்கானாலும்

நாளைக்கானாலும்

ஒரு மாஸஞ் சென்றேனும்

ஒரு வருஷஞ் சென்றேனும்
என்றைக்கானாலும் மழை பெய்தே தீருமடா!

பூசாரி உடல் வியர்க்க இங்ஙனம் பாடி முடித்தவுடன் அவன் இத்தனை சிரமப்பட்டுக் குறி சொல்லியதற்கு மிகவும் நன்றியுடையவனாய்,அந்த மூட விவசாயி பூசாரிக்கு இரண்டு தேங்காய்களும்,வெற்றிலை பாக்கும்,கால்ரூபாயும் காணிக்கை செலுத்திவிட்டு மிகவும் பூரிப்புடன் வீடு போய்ச் சேர்ந்தான்.வீட்டுக்குப் போனவுடன் அவன் மனைவி அவனை நோக்கி,மழை விஷயமாய் குறி கேட்கப் போனீரே?என்ன தெரிந்துகொண்டு வந்தீர் என்று கேட்டாள்.

விவசாயி பித்தனைப்போல் விழிக்கலானான்.நெடுநேரம் யோசித்துப் பார்த்தான்.கடைசியாக,தன் புத்தி ஹீனத்தால் பூசாரியுடைய பாட்டிலும் குடுகுடுப்பைச் சத்தத்திலும் மயங்கிப்போய் விஷயமொன்றும் தெரிந்துகொள்ளாமலே மீண்டு வந்த செய்தி அவன் புத்திக்கு எட்டியது.

மனைவியிடம் ஒன்றும் மறுமொழி சொல்லாமல்,உடனே எழுந்து போய் பூசாரியிடம் கால்ரூபாயையும்,தேங்காய்களையும் திருப்பிக் கொடுத்துவிடும்படிக் கேட்டான்.

பூசாரி குறி சொன்ன கூலியைத் திருப்பிக் கொடுக்க முடியாதென்றும், அது சாஸ்திரத்துக்கும்,நெடுங்கால வழக்கத்துக்கும் விரோதமென்றும் இன்னும் தெளிவாகக் கேட்க இஷ்டமுண்டானால் மறுபடி கால்ரூபாயும்,இரண்டு தேங்காய்களும் கொண்டு கொடுக்கும் பட்சத்தில் தான் நொண்டி ராமசாமியையும்,வீரனையுங் கலந்துகொண்டு தெளிவாகக் குறிசொல்லக் கூடுமென்றும் தெரிவித்தான்.

அவன் வீட்டு வாசலிலே நின்று விவசாயி மண்ணை வாரி தூற்றி விட்டுத் தனது இல்லம் போய்ச் சேர்ந்தான்.அது முதல் அந்த விவசாயி எந்த விஷயத்தைக் குறித்தும் யாரிடத்திலும் குறி கேட்பதாகிய பழக்கத்தை அறவே விட்டு விட்டான்.

நன்றி மீசைக்காரக் கவிஞருக்கு.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்