கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, August 23, 2007

கலைஞரே இது நியாயமா?

லவகுசா,மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற படங்களைப் பார்த்து பக்தியில் திளைத்துக் கொண்டிருந்த மக்களை,பராசக்தி படத்தின் மூலம் அவர்கள் சிந்தனைகளை பாழ்படுத்தினீர்களே ,இது நியாயமா?

வேலை வெட்டி இல்லாமல் தொல்காப்பியத்துக்கும்,திருக்குறளுக்கும் உரை எழுதினீர்களே,இது நியாயமா?

தமிழறிஞர்களுக்கும்,கவிஞர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கின்றீர்களே,இது நியாயமா?

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்துள்ளீர்களே,இது அடுக்குமா?தர்மமா?நியாயமா?

பெண்களுக்கும் சொத்துரிமை என்று சட்டமியற்றி ஆண்களுக்கு ஆப்பு வைத்தீர்களே இது நியாயமா?

சத்துணவில் மூன்று முட்டைகள் குழந்தைகளுக்குத் தேவையா?

உழவர் துயர்துடைக்க உழவர்சந்தைகள் அமைத்தீர்களே,இது நியாயமா?

வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றீர்களே,இது நியாயமா?

டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பிய சாலைப்பணியாளர்களை திரும்ப அழைத்து வேலை கொடுத்தீர்களே,இது நியாயமா?

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு 10000,15000 என்று அள்ளிக் கொடுக்கின்றீர்களே,இது நியாயமா?

22 comments:

Anonymous said...

That is why the so called friends in allies and cinema star turned politicians are making hue and cry every day. Perhaps they want to 'enjoy' again the rule of Amma so that they can go to jail and keep quite!

said...

டெபாசிட் இழந்த பானிபூரி அரசியல்வாதிகளை வைத்து சிறந்த ஜனாதிபதியியான் கலாமின் மானத்தை வாங்க துப்பில்லை உங்களை தமிழகம் மன்னிக்குமா??

அன்னை சந்தியாவிற்கு கட் அவுட் வைக்காமல் திருவள்ளுவருக்கு குமரியில் சிலை வைக்கத்தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா??

கற்புக்கரசிகள் ஆட்சிக்கட்டிலை அலங்கரிக்க, கண்ணகிசிலையை தூசிதட்டி கடற்கரையில் வைக்க உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது??

said...

அனானி வருகைக்கு நன்றி.
//Perhaps they want to 'enjoy' again the rule of Amma so that they can go to jail and keep quite! //
களி தின்றால் தான் அம்மா பெருமை தெரியும்.

said...

//டெபாசிட் இழந்த பானிபூரி அரசியல்வாதிகளை வைத்து சிறந்த ஜனாதிபதியியான் கலாமின் மானத்தை வாங்க துப்பில்லை உங்களை தமிழகம் மன்னிக்குமா??//

ஜோக்கருடன் சேர்ந்து அவர்களும் ஜோக்கர்களாகிப் போனது தான் மிச்சம்.

வருகைக்கு நன்றி இசை.

said...

இந்த உழவர் சந்தை உருப்படாத சந்தையாகிவிட்டதாமே நாயமா?
சமத்துவபுரம் ...காணவில்லையே...நாயமா??

said...

//இந்த உழவர் சந்தை உருப்படாத சந்தையாகிவிட்டதாமே நாயமா?
சமத்துவபுரம் ...காணவில்லையே//

உழவர் சந்தை,சமத்துவபுரம் போன்ற மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தியதற்காக எங்கள் அம்மாவிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நன்றி யோகன்.

Anonymous said...

கலைஞரே இது நியாயமா?

லவகுசா,மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற படங்களைப் பார்த்து பக்தியில் திளைத்துக் கொண்டிருந்த மக்களை,பராசக்தி படத்தின் மூலம் அவர்கள் சிந்தனைகளை பாழ்படுத்தினீர்களே ,இது நியாயமா?
He did good but he cannot even correcct his family. His wives and Sons (ex Azhgiri ), grandchilds (all) are going to temple and fell and Falling Pappans....What he made difference????

வேலை வெட்டி இல்லாமல் தொல்காப்பியத்துக்கும்,திருக்குறளுக்கும் உரை எழுதினீர்களே,இது நியாயமா?
To make money he wrote the books....Can you tell us where he spend the money. So He wrote for money not for service

தமிழறிஞர்களுக்கும்,கவிஞர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கின்றீர்களே,இது நியாயமா?
Really all the Real Tamil pandits gots awards....Only who can praise MK or need shutdown their mouth awarded.....Simbu and Trisha are done lot for Tamils than Saiva siddhanda kazhkam??????

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்துள்ளீர்களே,இது அடுக்குமா?தர்மமா?நியாயமா?
Still Its not equal as செம்மொழி. Tamil separated as more than 100 years of Old (Understand the calssification) What differece
it made....

பெண்களுக்கும் சொத்துரிமை என்று சட்டமியற்றி ஆண்களுக்கு ஆப்பு வைத்தீர்களே இது நியாயமா?

சத்துணவில் மூன்று முட்டைகள் குழந்தைகளுக்குத் தேவையா?
He improved (Black Crew) Kamaraj and (Malayali) MGR's Plan but he crticized when its started...Say Yes or NO?????? Thats what MK...He critizes everyone's policy/Plans when it success add his little contribution and mark that as his plan...

உழவர் துயர்துடைக்க உழவர்சந்தைகள் அமைத்தீர்களே,இது நியாயமா?

வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றீர்களே,இது நியாயமா?
Who's money its is...Instead giving Job he gave money....That he made as more beggers in Tamilnadu.

டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பிய சாலைப்பணியாளர்களை திரும்ப அழைத்து வேலை கொடுத்தீர்களே,இது நியாயமா?
Did he gave job for all????Only people who were supporting him so he gave the JOB. Why Anganvadi school people are fighting for their rights (last 2 periods of him)

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு 10000,15000 என்று அள்ளிக் கொடுக்கின்றீர்களே,இது நியாயமா?

Just for to catch the CM seat again....That too He created with his mothers name.

My Questions:-
1. He is socialist (Communist ) first ...Why don't he give all the wealth and live with goverment pension.

2. He is a anti-religious.....Why dont his wives can wear white saree and no thilak....

3. Oruvanukku oruthi is Tamil...Why don't he announce why he had 2 wives....

Anonymous said...

sollamarantha sila kalaingerin sadhanaigal;diravida nadu,rupaikku moondrupadi arisi,manila suya aatchy,rail varadha thandavalathil thalai vaithathu.vizzy.

said...

அனானியர்களுக்கு நன்றி.
//Oruvanukku oruthi is Tamil...Why don't he announce why he had 2 wives.... //

கலைஞரே உங்கள் எதிரிகள் இப்படியா நடந்து கொள்கிறார்கள்.இது நியாயமா?

said...

பென்சன் உடனடியாக சேரவும், ரிட்டயர்மண்ட் பணம் உடனடியாக ஊழியர் கைக்கு சேரவும் உத்தரவு போட நீங்கள் யார்?

போலீஸ் வைத்து எல்லா எதிரிகளையும் ராத்திரியில் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய உமக்கு ஏன் தைரியம் போதவில்லை?

said...

வாங்க இளா,தட்டிக்கேட்க ஆள் இல்லைன்னு என்னென்னவோ செஞ்சுக்கிட்டு இருக்காரு.:))

Anonymous said...

அனானி,

//2. He is a anti-religious.....Why dont his wives can wear white saree and no thilak....//

என்ன ஒரு மனசுடா உனக்கு.

Anonymous said...

1. இலவச பஸ் பாஸ் பள்ளிக்கூட குழந்தைகளுக்கு கொடுக்கிறீட்களே, இது நியாயமா?

2. சொன்னபடி கலர் டீ.வி கொடுக்கிறீர்களே, இது நியாயமா?

Anonymous said...

அதெல்லாம் தவறு என்று இரண்டாம் சாணக்கியன் என்ற பெயரில் எழுதும் டோண்டு ராகவன் சொல்கிறாரே?

said...

மடையன் மற்றும் வெங்காயம் அவர்களே,வருகைக்கு நன்றி.

said...

கலைஞரே!

ஐம்பதாண்டு கால தமிழக அரசியலுக்கு மையமாக இருக்கிறீர்களே? இது நியாயமா?

83 வயதாகியும் பாழாய்ப் போன தமிழனுக்கும், தமிழுக்கும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே? இது நியாயமா?

said...

பர்த்டே பேபிக்கு வாழ்த்துகள்.

said...

இவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்களே இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?

மாறன் டிரீட்மெண்ட் வேண்டுமென்றுத்
துடிக்கிறார்களே,கொஞ்சம் கொடுக்க மாட்டேன் என்கிறீர்களே நியாயமா?

அவமானகப் பேசுபவர்களுக்கும் மரியாதை
கொடுக்கிறீர்களே,கொஞ்சம் ஜே டிரீட்மெண்ட் கொடுப்பது தானே நியாயம்!

said...

தமிழன் வருகைக்கு நன்றி.

said...

பாலா,உங்க நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் உங்கள் பின்னூட்டங்களை இனி வெளியிடுவதாக இல்லை.

Anonymous said...

உங்க கூட
ஒரே
தமாசா
போச்சு
போங்க!

ரூம்
போட்டு
யோசிக்கிற
வர்க்கமா
நீங்க?

சுதந்திரம்
வாங்கி
இத்தன
காலம்
ஆகியும்,
இத்தனை
இத்தனை
திராவிடர்கள்
ஆட்சி
வந்தும்,
போயும்,
இருந்தும்
இன்னும்
தலித்
மக்கள்
பிரச்சினைகள்,
இரட்டை
குவளை
முறை,
சாப்பிடுவதற்கு
தனி
பெஞ்ச்
கோயில்களில்
நுழைய
முடியாமை,
சேரிகள்,
படிப்பறிவு
இல்லாமை,
கொத்தடிமைத்தனம்
போன்ற
சமுதாய
சீர்கேடுகளை
அழிக்காமல்
அப்படியே
விட்டுவிட்டு
வளர்த்துக்
கொண்டு
வருவதும்
ஒரு
நியாமான
செயலா?

ஒரு
திராவிட
கட்சிகள்
அனைத்தும்
இது
போன்ற
தலித்
மக்களுக்கு
ஆதரவாக
குரல்
கொடுத்து
அவர்களுக்கு
உண்டான
உரிமைகளை
கொடுத்துவிட்டால்,
இக்கட்சிகளின்
ஆதிக்கர்கள்
மற்றும்
தொண்டர்கள்
சண்டைக்கு
வந்து
விடுவார்களோ
என்று
இருப்பதை
இப்படியே
விட்டுவிட்டு
நடப்புகளை
அமுக்கி
ஒருதலை
பட்சமான
அரசியல்
நடத்தி
வருவதும்
நியாயமோ?

தனது
குடும்பத்தினர்கள்
தமிழ்நாட்டு
மற்றும்
இந்திய
அரசியல்
அரங்கங்களில்
அமர்த்துவதிலேயே
கண்ணும்
கருத்துமாய்
இருக்கிற
கலைஞர்
இதிலும்
ஏதாவது
ஒரு
நியாயத்தை
கண்டாரோ?

நான்
கலைஞரை
மதிக்கிறேன்.
அதற்காக
அவரை
நான்
கண்மூடித்தனமாக
வணங்கமாட்டேன்.
இத்தனை
வருடகால
தமிழக
அரசியல்
அரங்கில்
தனிப்பெரும்
முக்கியத்துவம்
கொண்டிருந்த
கலைஞர்
தலித்
மக்கள்
நல்வாழ்க்கை
முன்னேற்றத்திற்கு
செய்திருக்க
வேண்டிய
எண்ணில்
அடங்காத
சீர்திருத்தங்களை
செய்யாமல்
போனது
மிகவும்
வருந்தத்தக்கது.

said...

மாசிலா,உங்கள் ஆதங்கம் புரிகிறது.சமூக அவலங்களை களைந்தெறிவதில் இன்றைய தேதியில் அவர் தான் முதல்வர்.பத்து வருடங்களாக வெறுப்பேற்றிக் கொண்டிருந்த பாப்பாபட்டி,கீரிப்பட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர் கலைஞர்.
வருகைக்கு நன்றி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்