கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, September 7, 2007

1990 ல் தி.மு.க அரசு நீக்கப்பட்டது ஏன்?

வெறும் 50 எம்.பி க்களை வைத்துக்கொண்டு இந்தியாவை ஆள நினைத்த சந்திரசேகர்,ஆட்சி செய்த 6 மாதங்களில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்யத் துணிந்தார்.அந்த அயோக்கியத்தனத்துக்கு துணைபோனவர் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

தி.மு.க மீதும்,கலைஞர் மீதும் அப்படி என்ன கோபம் அவருக்கு?

காமராஜர் முதல்வராக இருந்த போது சட்டசபையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர் ஆசைத்தம்பி எழுந்து ஒரு விரலைக்காட்டி பேசுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்.உடனே அப்போதைய நிதி அமைச்சரான ஆர்.வெங்கட்ராமன் எழுந்து உறுப்பினருக்கு அவசரம் என்றால் வெளியே போக வேண்டியது தானே என்று ஜோக் அடித்திருக்கிறார்.உடனே கலைஞர் எழுந்து ஆசைத்தம்பிக்கு அவசரம் என்றால் இவர் ஏன் வாயைத்திறக்கிறார் என்று கேட்டவுடன் சபையே கொல்லென்று சிரித்து அடங்கியதாம்.

கலைஞரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட ஆர்.வி சமயம் பார்த்து கழுத்தை அறுத்திருக்கிறார்.

இப்போது இந்த ஆள் இருக்கிறாரா,போய்ச் சேர்ந்து விட்டாரா என்று தெரியவில்லை.

8 comments:

said...

இப்படி ஒரு காரணம் இருக்கா? சூப்பரப்பு!!! :-))))

said...

வருகைக்கு நன்றி லக்கி.:-)))

Anonymous said...

DMK Government was dismissed in 1991 and not in 1990

said...

மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி என்பதை கொள்கை முழக்கமாக வைத்து அதை அடைய கடுமையாக போராடியது திமுக.

ராஜிவ் அரசு ஊழல் கறை படிந்த நிலையில் சமூகநீதிக் காவலன் வி.பி.சிங் தலைமையில் இந்திய அரசில் முதன்முறையாகப் பங்கேற்றது திமுக.

காங்கிரஸ் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த தயங்கிக் கொண்டிருந்தபோது வி.பி.சிங் தைரியமாக அதை நிறைவேற்றினார்.

அனைவரும் இந்துக்களே என்று ஓலமிடும் பிஜேபி ,பெருமளவில் இந்துக்கள் பயனடையும் மண்டல் கமிஷனை எதிர்த்து ,அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று வி.பி.சிங்கை கவிழ்த்தது.

அப்போது ராஜிவ் , மாபெரும் இந்திய அரசைக் கேவலப்படுத்தும் விதமாக ,சந்திரசேகர் தலைமையில் ஒரு டம்மி அரசை உருவாக்கினார்.

தலைவிரிகோலமாக ஜெயலலிதா,ராஜிவுக்கு கொடுத்த நெருக்கடியால் சந்திரசேகர் புலிப்பிரச்சினையைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைத்தார்.

ராஜிவின் அரசியல் ஆலோசகர்களாக இருந்த பல பிராமணர்களின் தவறான வழிகாட்டுதலால் அந்த மாபெரும் தலைவரின் உயிரை இழந்தது தான் மிச்சம்.

Anonymous said...

ithu superu

Anonymous said...

//original manithan said...
ithu superu//

மத்தவங்கல்லாம் ஒரிஜினல் மிருகமா?

said...

வெங்கட்ராமன் எதற்கும் வாய் திறப்பார் என்பதை கலைஞர் நன்கு அறிந்தவர்தான்.
எம்.ஜி.ஆர் உதவியுடன் துணை ஜனாதிபதி ஆனதும் நடி்கரின் காலில் விழுந்து வணங்கினாராம்.
கலைஞர் ஆட்சியைக் கலைத்தது பார்ப்பனத்திமிரின் உச்ச கட்டம்.பார்ப்பன அதிகாரிகள்,சு.சுவாமி,நாராயணன்,
சேஷ்ன்,அம்மையார் அனைவரும் சேர்ந்து ஆடிய ஆட்டம்.பார்ப்பனரால் சூழப் பட்ட ராஜிவ் தான் பரிதாபம்.

said...

//பார்ப்பனரால் சூழப் பட்ட ராஜிவ் தான் பரிதாபம். //

முற்றிலும் உண்மை.நேரு பிராமணராக இருந்தாலும் ஆரிய,திராவிட வேறுபாடுகளையும்,மொழிப்பிரச்சினையில் மக்களின் உணர்வுகளையும் புரிந்து நடுநிலையாக இருந்தார்.அவர் சுய சிந்தனையாளராகவும்,நாத்திகராகவும் இருந்ததால் பிராமணர்களின் வறட்டு தத்துவங்களுக்கு செவிசாய்க்கவில்லை.

ராஜிவ்,சூழ்நிலையால் தலைவரானதால் வஞ்சகர்களின் சதிக்கு இரையாகிவிட்டார்.

மிக்க நன்றி தமிழன்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்