
இந்தத் தகவலை இங்கே குறிப்பிட காரணம்,அறிவுசீவி ஒருவரின் அழிச்சாட்டியம். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை ஒன்று காலச்சுவடு இதழில் வெளிவந்தது.அந்தக்கட்டுரையில் ஓரிடத்தில் கூட கலைஞர் பெயர் குறிப்பிடப்படவில்லை.அண்ணாவின் வாழ்க்கையிலும்,திமுகவின் வரலாற்றிலும் கலைஞர் பெயர் குறிப்பிடாமல் கட்டுரை வரையும் போட்டி காலச்சுவடு நடத்தியதா என்று தெரியவில்லை.கட்டுரையாளருக்கு ஏன் கலைஞர் மீது இப்படி ஒரு காழ்ப்பு?.
சோற்றுக்கு சிங்கியடித்து,பிள்ளைகுட்டிகளை தவிக்கவிட்டுவிட்டு,கடைசியில் அனாதையாக சாவதே நல்ல தலைவனின் இலக்கணமாக ஒரு கருத்தாக்கம் நம்மை அறியாமலே நாம் உருவாக்கிக்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.இத்தகைய தியாகங்கள் செய்யாததால் கலைஞர் ஒரு சாராரால் வெறுக்கப்படுகிறார் என்றும் எண்ண வேண்டியுள்ளது.
கடவுளே , திராவிடர்களிடமிருந்து கலைஞரைக் காப்பாற்று,ஆரியர்களை அவரே பார்த்துக்கொள்வார் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் இக்கட்டான நிலைக்கும் நம்மை கொண்டுவந்துவிட்டார்கள் இந்தக்காழ்ப்பாளர்கள்.
படத்திற்கு நன்றி: சண்டே இந்தியன் இதழ்
8 comments:
எல்லோரும் கூட்டமாக கலைஞர் இல்லாத ஒரு புதிய வரலாற்றை எழுதுவதற்கு மாய்ந்து மாய்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்
yaar intha karunanidhiyin kaikkooli
annaavaip patri ezhuthum pothu thurogikalai patri kurppida vaendum endru enna thaevai..?
அவர் எதோ தெரியாம சொல்லிட்டாருங்க!
திராவிட கட்சின்னா சும்மாவா?
ஆனா என்ன!, இப்போ கலைஞர் லெட்டர் எழுதினா கட்சிகாரங்கங்கங்கர பேர்ல முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கேட்டு எழுத வேண்டியிருக்கும்!
//எல்லோரும் கூட்டமாக கலைஞர் இல்லாத ஒரு புதிய வரலாற்றை எழுதுவதற்கு மாய்ந்து மாய்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்//
எப்பேர்ப்பட்ட கேணத்தனம்.
நன்றி உடன்பிறப்பு.
//yaar intha karunanidhiyin kaikkooli
annaavaip patri ezhuthum pothu thurogikalai patri kurppida vaendum endru enna thaevai..?//
அனானி,
வெறுப்பைக் குறைத்துக்கொண்டு நிதர்சனத்தை உணரவேண்டும்.
//அவர் எதோ தெரியாம சொல்லிட்டாருங்க!//
நீங்க சொல்றதால சும்மா விடுறேன்.
//கடவுளே , திராவிடர்களிடமிருந்து கலைஞரைக் காப்பாற்று,ஆரியர்களை அவரே பார்த்துக்கொள்வார் //
கடவுளே , திராவிடர்களிடமிருந்து கலைஞரைக் விடுவித்துவிடு,ஆரியர்களை அவரே சரிக்கட்டிக் கொள்வார் - என்றிருக்க வேண்டும் !
:)
கோவியாரே,
27% இடஒதுக்கீடு பிரச்சினைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?கிரீமிலேயர் என்னும் தடைக்கல்லை போட்டபோது,கிரீமிலேயரின் வரம்பை 4-5 லட்சமாக மாற்றி , தடைக்கல்லையும் படிக்கட்டாக மாற்றும் வித்தை கலைஞரைத் தவிர வேறு யாருக்காவது இருக்கிறதா?.
சொல்லுங்கள்,திராவிடர்களிடமிருந்து கலைஞரை விடுவித்துவிட்டு வேறு யாரை தலைவராக போடலாம்?
Post a Comment