கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, July 15, 2009

மருத்துவக்கல்லூரி இடஒதுக்கீடு

இந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலைப் பார்த்த போது ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் புலப்பட்டன.தமிழகத்தின் மக்கள் தொகை சாதிவாரியாக பிற்பட்டோர் 46%, மிகவும் பிற்பட்டோர்18%,தாழ்த்தப்பட்டோர்20%,முற்பட்டோர்13%,மற்றவை3%
என்று ஒரு தகவல் கூறுகிறது. மருத்துவக்கல்லூரி மொத்த இடங்கள் தோராயமாக 1500.இந்த இடங்களை தரவரிசைப்படியே நிரப்பினால் ,பிற்பட்டோர் பிரிவு வியக்கவைக்கும் அளவிற்கு அதிக இடங்களைப் பெற்றுள்ளது.சுமார் 1020 இடங்கள்.பிற்பட்டோரின் 46 சதவிகிதப்படி அவர்கள் பங்கு 690 இடங்கள் என்றால்,அபரிமிதமான வளர்ச்சியாக கூடுதலாக 330 இடங்கள் பெற்றுள்ளனர். முற்பட்ட வகுப்பினர் 30,40 ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய நிலையில் தான் இருந்திருக்கவேண்டும்.அந்த நிலையை பிற்பட்டோர் அடைந்துள்ளனர்.இடஒதுக்கீட்டின் நோக்கத்தை எப்போதோ அடைந்து அதைத்தாண்டியும் சென்றுவிட்டனர்.
அடுத்து மிகவும் பிற்பட்டோர் 18சதவிகிதப்படி அவர்கள் பெற வேண்டிய இடங்கள் 270.இட ஒதுக்கீடு இல்லாமல் தரவரிசைப்படியே அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 272. இட ஒதுக்கீட்டின் நோக்கம் இப்போது தான் நிறைவேறியுள்ளது.

அடுத்து தாழ்த்தப்பட்டோர் 20 சதவிகிதப்படி 300 இடங்கள் பெறவேண்டும், பெற்றிருப்பதோ 73 இடங்கள் மட்டும். இட ஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவடையவில்லை.

அடுத்து முற்பட்டோர் 13சதவிகிதப்படி 195 இடங்கள் பெற்றிருக்க வேண்டும்,ஆனால் பெற்றிருப்பதோ 136 இடங்கள் மட்டுமே.1500 இடங்களையும் திறந்த முறையில் தேர்வு செய்தாலும் அவர்கள் பங்கிற்கு குறைவாகவே பெற்றுள்ளனர்.இட ஒதுக்கீட்டின் நோக்கம் நேரடியாக பாதிக்கிறது.

சாலிசம்பர் கமிசன் பரிந்துரைகள்:
பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் மாற்றம் தேவை,இது இப்படியே தொடருமானால் இன்னும் சில,பல ஆண்டுகளில் முற்பட்ட வகுப்பினர் மிகமிகக் குறைந்த இடங்களையே பெறும் சூழ்நிலை உருவாகலாம்.பிற்பட்டோர் இடஒதுக்கீட்டை அப்படியே ரத்து செய்தாலும் பாதிப்பு ஒன்றும் ஏற்படாது,திறந்த முறையிலேயே அவர்கள் பங்கான 690 இடங்களைப் பெற்றுவிடலாம்.ஆனால் ரத்து செய்வது சாத்தியமில்லை என்பதால் 30 சதவிகித ஒதுக்கீடு என்பதை 23சவிகிதமாகக் குறைக்கலாம்.

மிகவும் பிற்பட்டோருக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதால் பாதிப்பு ஒன்றுமில்லை.ஆனாலும் இடஒதுக்கீட்டின் நோக்கம் இப்போது தான் நிறைவேறியுள்ளதால் ,இப்பிரிவினருக்கு சலுகை காலமாக சில,பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவினர் மிகமிகக் குறைந்த இடங்களையே பொதுப்பிரிவில் பெற்றிருப்பதால் அவர்களுக்கான இடஒடுக்கீட்டின் அளவையும் கூட்டி இன்னும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்,அல்லது திறந்த முறையில் அவர்கள் பங்கான சுமார் 300 இடங்களைப் பெறும் வரையிலும் நீட்டிக்க வேண்டும்.

முற்பட்ட வகுப்பினர் தங்கள் பங்கை விட குறைவாகவே பெற்றுள்ளதால் இடஒதுக்கீடு பெற இவர்களும் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.7 சதவிகித இடஒதுக்கீடு கேட்பது நியாயமானதே.அனைத்து முற்பட்டோருக்கும் சேர்த்து 7% ஒதுக்கீடு செய்யலாம்.
அதே நேரத்தில் இதே வகையான ஒதுக்கீடு உயர்கல்வி நிறுவனங்களிலும்,மத்திய அரசு துறைகளிலும் வருவதற்கு முற்பட்ட வகுப்பினர் ஆதவளிக்க வேண்டும்,சமத்துவ இந்தியா விரைந்து மலரட்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
http://www.rediff.com/news/2006/may/30spec.htm
http://www.tn.gov.in/misc/dme/UG-2009-2010/meritlist2009-2010_010709.pdf
http://www.southasianmedia.net/Magazine/Journal/13_obc-reservation.htm




0 comments:

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்