
இரண்டடி நீளத்தில் பத்துப்பதினைந்து கிலோ எடை கூட தேறாத அவனைப்பார்த்ததுமே சிங்கங்கள் கிலியாகிவிட்டன.நிமிர்ந்த நடையும்,நேர்கொண்ட பார்வையுமாக வருபவனை விரட்டும் முயற்சியில் இறங்கின சிங்கங்கள்.சுற்றிச்சுற்றி வரத்தான் முடிந்ததே தவிர அவனுடைய முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை.நிதானமாக ஒவ்வொரு அடியாக முன்னேறிக்கொண்டிருக்கிறான் பல்லியன். மூன்று சிங்கங்கள் விரட்டும் முயற்சியைக்கைவிட்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன. ஒரு சிங்கம் மட்டும் தைரியத்தை இழக்காமல் களத்தில் இருந்தது.பயப்படும் அறிகுறி பல்லியிடம் இல்லை.ஒரு அடி முன்னால் வந்து உறுமிக்காட்டுவதும் இரண்டு அடி பின்னால் ஓடுவதுமாக சிங்கத்தின் நிலை பரிதாபமாக ஆகிக்கொண்டிருந்தது.பின்னணியில் போடா போடா புண்ணாக்கு பாட்டு ஒன்று பாடாதது தான் குறை. இறுதியில் பல்லி வென்றே விட்டது,மிச்சமிருந்த சிங்கமும் வாலைச்சுருட்டிக்கொண்டு பங்காளிகளுடன் போய் சேர்ந்து கொண்டது.நான்கு சிங்கங்களின் பாதுகாப்பு அரணோடு பல்லியன், எருமையின் மீதேறி வயிற்றுக்குள் தலையைவிட்டு சாப்பிட ஆரம்பித்ததைப் பார்க்கும் யாவரும் வாயைப்பிளக்காமல் இருக்கமுடியாது.
கொடிய விசமுள்ள நாகப்பாம்பும் கூட பல்லியின் முன் மண்டியிடுகிறது.நாகத்தை நார்நாராகக்கிழித்துத் தொங்கவிடும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.காட்டுராஜா சிங்கம் என்பதை மீள்பரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது.

வல்லவனுக்கு வல்லவன் - I
0 comments:
Post a Comment