கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, December 25, 2007

வல்லவனுக்கு வல்லவன்

நல்லவனா வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்,
ஒரு வல்லவனா வாழ்ந்து வந்தா ஊரே தோளில் ஏற்றி வைக்கும்.
"தல"

அடர்ந்த காட்டுக்குள்ளே கண்களில் சிறிதும் பயமின்றி நெஞ்சு நிமிர்த்தி நடந்து வருகின்றான் அரையடி நீளம் கூட இல்லாத நம் கதாநாயகன்,அவன் ஒரு சிறு பல்லி.அவனை விழுங்கிவிட திட்டம் தீட்டி இரு வில்லன்கள் காத்திருக்கின்றனர்.ஒன்று பாம்பு,இன்னொன்று ஒரு பெரிய தவளை.

பல்லி இவர்களை கண்டும் காணாதது போல் தன் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.வழக்கம் போல் பாம்பு அதைக் கவ்விப்பிடித்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன்.ஆனால் பாம்புயோசிக்க ஆரம்பித்துவிட்டது.சில நிமிட தீவிர யோசனைக்குப் பின் தன் முடிவை கைவிட்டு விட்டது.பல்லி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.பெரிய தவளை விழிப்போடு காத்திருக்கிறது,தன் அருகில் வந்ததும் படக்கென்று அதைப் பிடித்து கபளீகரம் செய்து விட்டது.

அடுத்து தான் நம் கற்பனைக்கெட்டாத அந்தக் காட்சி அரங்கேறியது.சந்திரமுகி படத்தில் பேய்வீட்டிற்கு சென்று வந்த வடிவேலு "ஆ" வென்று வாயைத் திறந்து கொண்டு நிற்பாரே அதுபோல் அந்தத்தவளையும் சிலையாக நின்று விட்டது .ஆம்,செத்து விட்டது.

தவளையின் திறந்த வாய்க்குள் இருந்து நிதானமாக நடந்து வெளியே வந்துவிட்டது பல்லி.
உடம்பெல்லாம் விஷம் அந்தப் பல்லிக்கு.தவளை விழுங்கியவுடன் விஷத்தைக் கக்கியிருக்கிறது.

பல்லியின் விஷமத்தனம் தெரிந்து விலகிச்சென்ற பாம்பைப் பாராட்டுவதா,அல்லது பாம்புக்கும் தவளைக்கும் கடுக்காய் கொடுத்த பல்லியைப் பாராட்டுவதா என்று தெரியவில்லை.

(NATIONAL GEOGRAPHIC சேனலில் பார்த்தது)

இதைப்போன்ற இன்னொரு வல்லவனின் சாகசத்தைக் காண இங்கே செல்லுங்கள்.
http://kurangumudi.blogspot.com/2006/04/blog-post_28.html

1 comments:

Anonymous said...

பாம்பையோ,பல்லியையோ பாராட்டி என்ன ஆகப்போகிறது.ஜம்பர் உன்னைய பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது.நீ வளரணும் தம்பி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்