கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, December 26, 2007

மோதி vs கலைஞர்


சிறுபான்மை முஸ்லிம்களை எதிர்த்து அரசியல்
செய்யும் மோதியும் , சிறுபான்மை பார்ப்பனர்களை எதிர்த்து அரசியல் செய்யும் கலைஞரும் ஒன்று தானா?

தங்களுடைய ஆதாயத்துக்காக இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கு கண் , காது ஒட்டவைத்து ஈறைப் பேனாக்கி,பேனைப் பெருமாளாக்கி அதை வைத்து அரசியல் செய்வது உலகம் முழுவதுமுள்ள
அரசியல் , ஆதிக்கவெறியர்களின் வேலை தான்.

ஆனால் பிஜேபியின் கேடுகெட்ட அரசியல் வி.பி.சிங் தலைமையிலான மாபெரும் எழுச்சியை சகிக்க முடியாமல் ஆரம்பமானது.இந்து,சந்து என்று முழக்கமிடும் பி.ஜே.பி அதே இந்துக்களின் நலன் காக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்துவதை தடுக்கும் நோக்கிலேயே ராமர் கோயில் பிரச்சினையைக் கையில் எடுத்தது.

அவர்களே அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் இப்படியொரு ஆதரவை இந்திய மக்கள் தருவார்கள் என்று.சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் கடன் வாங்கி காவடி தூக்கும் மக்கள் நிறைந்த இந்தியாவில் அவர்களுக்கும் இடம் கிடைத்தது.

முஸ்லிம் என்ற ஒரு பொது எதிரியை உருவாக்கி இந்து வெறியை வென்றெடுத்துள்ளது பி.ஜே.பி.
இதற்காக அவ்வப்போது முஸ்லிம்கள் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.அதிகம் பலி கொடுத்தால் அதிகம் பலன் கிடைக்கும். இதை நன்றாகவே புரிந்து கொண்டார் மோதி.

இந்த கேவல அரசியலுக்கும் கலைஞருக்கும் முடிச்சுப் போடுகின்றனர் சில கேவல பிறவிகள்.தமிழ்நாட்டில் இதுவரை எந்த பிராமணரும் கொல்லப்பட்டதில்லை.அவர்களுடைய தத்துவங்களையும்,கோட்பாடுகளையும் கொள்கையளவில் தான் கலைஞர் எதிர்க்கிறாரே தவிர வன்முறையை என்றும் கையில் எடுத்ததில்லை.

ஆரிய எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவையும் ஆரியர்களாலேயே உருவானது.இனவெறியையும்,சாதிவெறியையும் அப்பட்டமாக கடைப்பிடித்துக் கொண்டிருந்த அந்தக்காலத்தில் திராவிட இயக்க அரசியலின் தோற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

இன்னும் ஆரிய எதிர் அரசியலின் தேவை முடியவில்லை.சாதி,இன ரீதியாக தங்களை உயர்ந்தவர் என்று பறைசாற்றுவதில் பிராமணர்கள்
தான் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்கள்.
பிராமணர்களை முதலிடத்தில் இருந்து வெளியேற்றியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களுக்கும் மெதுவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.அதை முறியடிக்கும் முயற்சி தான் இந்து வெறியர்களால் பரப்பப்படும் முஸ்லிம் எதிர்ப்புணர்வு பிரச்சாரம்.

மோதி தன்னுடைய பொருளாதாரத் தத்துவங்களால் தான் வெற்றி பெற்றார் என்று சொல்வது முட்டாள்தனமானது.லாலுவின் ஆட்சியில்
தான் பீகார் காட்டுமிராண்டி தேசமானது என்று பரப்பப்படும் விஷமப் பிரச்சாரம் போன்றது தான் மோதி ஆட்சியில் குஜராத் வளர்ந்து
விட்டது என்ற பிரச்சாரமும்.நீண்ட நெடுங்காலமாகவே குஜராத்திகள் வணிகத்திலும்,பொருள் உற்பத்தியிலும் சிறந்து விளங்கியவர்கள் தான்.
மோதி பெற்றுள்ள வெற்றி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கல்லறைகளின் மேல் கட்டப்பட்ட வெற்றி.

எனவே மோதியின் அரசியலையும்,கலைஞரின் அரசியலையும் ஒப்பிடுபவன் ஒரு பைத்தியமாகத் தான் இருக்க முடியும்.


34 comments:

said...

அருமையான தோலுரிப்பு. பதிவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

well written

said...

உண்மையில் பார்க்க போனால் சங்கராச்சாரியார் போன்ற பார்ப்பீனிய அதிகார வர்க்கங்கள் தி.மு.க ஆட்சியில் நிம்மதியாக வாழ்கின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் அவர் தேசிய பத்திரிக்கையின் கார் டிக்கியில் மறைந்து பயணித்தும், கலவை காடுகளில் மறைந்து வாழ்ந்த காலங்களும் போய்விட்டது.

வராகி said...

ஹிந்துகளை மட்டும் திட்டி மற்ற மதத்தை போற்றும்(உதாரணம் நேற்று அளித்த கிறிஸ்துமஸ் வாழ்த்து) உங்கள் தலைவரை விட மோடி மோஅசமல்ல - வராகி.

Anonymous said...

குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன் - பெயருக்கு ஏற்றால் போல் நிருபித்துவிட்டிர். சாதி ஒழிய படிப்பறிவு ஒன்று தான் வழி. அதை விட்டு பார்ப்பனர் எதிர்ப்பு அல்லது முஸ்லீம் திவிரவாதம் என்பது தேவை இல்லாத வேலை. ஆக்கபூர்வமான வழி எதையும் மோடி அல்லது கருணாநிதி இருவரும் செய்யவில்லை என்பதே உண்மை

Anonymous said...

//சிறுபான்மை பார்ப்பனர்களை எதிர்த்து அரசியல் செய்யும் கலைஞரும் ஒன்று தானா// இதுவே பிழையாகும். கலைஞர் ஒட்டுமொத்த பிராமணர்களை வெறுக்க கூடியவர் அல்லர். பிராமிணியத்தை இன்றும் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அயோக்கியர்களை தான் வெறுக்க கூடியவராக உள்ளார்.

ஆனால் நரமாமிச உண்ணி மோடியோ மொத்த முஸ்லிம் சமூகத்தையும் எதிரியாய் பார்க்கிறவன்.

புத்திசாலி மாணவனுக்கு பாடம் சொல்லி தந்து முதல் மதிப்பெண் வாங்கி தந்த ஆசிரியர் திறமையானவரா அல்லது மக்கு மாணவனை உயர் மதிப்பெண் பெற செய்த ஆசிரியர் திறமையானவரா?

said...

வருகைக்கு நன்றி அபு.

said...

//well written//

நன்றி நன்றி நன்றி.

said...

//உண்மையில் பார்க்க போனால் சங்கராச்சாரியார் போன்ற பார்ப்பீனிய அதிகார வர்க்கங்கள் தி.மு.க ஆட்சியில் நிம்மதியாக வாழ்கின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் அவர் தேசிய பத்திரிக்கையின் கார் டிக்கியில் மறைந்து பயணித்தும், கலவை காடுகளில் மறைந்து வாழ்ந்த காலங்களும் போய்விட்டது.//

உண்மை தானே சதுக்க பூதம்.பார்ப்பனர்களும் மனிதர்கள் தான்,மனித நேய வாதியான கலைஞரால் அவர்களை வெறுக்க முடியாது.

Anonymous said...

சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க.மஞ்ச துண்டையும்,மோடியையும் ஒப்பிடுவது பயித்தியக்காரத்தனம் தான்.
மோடி ஊழலற்ற ஆட்சியைத் தந்தவர்.மஞ்ச துண்டு ஊழல் நாயகன்.மஞ்ச துண்டு குடும்ப நலனுக்காக எண்பது வயதிலும் ஊழல் செய்து பணம் சேர்க்கும்.மோடி குஜாராத் மக்களையே குடும்பமாக நினைத்து செயல் படுபவர்.மொத்தத்தில் கீழ்த்தரமான மஞ்ச துண்டு எங்கே,மன தைரியமும்,கை சுத்தமும் உள்ள மோடி எங்கே?நிர்வாகத்திறன் சிறிதும் அற்ற மஞ்ச துண்டு எங்கே?குஜராத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச் சென்ற மோடி எங்கே?

said...

//ஹிந்துகளை மட்டும் திட்டி மற்ற மதத்தை போற்றும்(உதாரணம் நேற்று அளித்த கிறிஸ்துமஸ் வாழ்த்து) உங்கள் தலைவரை விட மோடி மோஅசமல்ல - வராகி.//

திட்டுனா கெட்டவன்,கொலை செய்தால் நல்லவனா?நல்லாருக்குப்பா நியாயம்?

said...

//ஆக்கபூர்வமான வழி எதையும் மோடி அல்லது கருணாநிதி இருவரும் செய்யவில்லை என்பதே உண்மை//

கலைஞர் ஆக்கபூர்வமா எதுவும் செய்யவில்லையென்றாலும் அழிவுப்பாதையில் செல்லவில்லையே!

said...

//இதுவே பிழையாகும். கலைஞர் ஒட்டுமொத்த பிராமணர்களை வெறுக்க கூடியவர் அல்லர். பிராமிணியத்தை இன்றும் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அயோக்கியர்களை தான் வெறுக்க கூடியவராக உள்ளார்.//

பகுத்தறிவாளர்களால் மனிதர்களை வெறுக்க முடியாது,ஆனால்மதவாதிகளால்மனிதர்களை கொளுத்த முடியும்.

said...

//மொத்தத்தில் கீழ்த்தரமான மஞ்ச துண்டு எங்கே,மன தைரியமும்,கை சுத்தமும் உள்ள மோடி எங்கே?//

அரே சைக்கோ,
மோதி என்ற மதவெறியனை உள்ளே வர அனுமதி மறுத்துள்ளது அமெரிக்கா.அவருடைய பவுசு இதிலிருந்தே தெரியவில்லையா?

said...

முஸ்லிமுக்கு மலவாயில் கழுவுவதால் உலகமகா கொள்ளைக்காரன் கருணாநிதி நல்லவன் ஆனால்
கொலை வெறி பிடித்த கொலை கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபடும்
உலகம் முழுவதுமே தங்கள் கடவுளை கும்பிட வேணும் அல்லது அழிய வேண்டும் என்று நினைக்கும்
..அழிவு நாச வேலைகளில் ஈடுபடும் மிருகங்களை கொன்ற மோடி கெட்டவன்..
இதுதானே ஒரு முஸ்லிமா இருப்பவன் சொல்லுவான் ..

said...

வெத்துவேட்டு,பாகிஸ்தானில் தினமும் குண்டு வெடிக்குதே அது இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமலா நடக்கிறது,சரி அந்தக் கதையெல்லாம் விடுங்கள்,ராமர் மசூதியை என்ன காரணத்துக்கு இடித்தீர்கள்?

said...

Pakistan started feeding terrorism to India now India is repaying it. I really want india to wreck Pakistan.
Ayothi Mosque was destroyed because it was built on a Hindu Temple...it was an action of reclaimment...
did RSS demolish any mosque that was built on a barren land??

said...

குஜராத்தில் வளர்ச்சி என்று மோடி அளக்கும் பொய்களைப் ப்ற்றிய என்னுடைய ஒரு பதிவு. வளர்ச்சி எனப்படுவது யாதெனின்....

said...

//Ayothi Mosque was destroyed because it was built on a Hindu Temple...//

எல்லா மதங்களுமே ஒன்றை ஒன்று அழிக்கத் தான் செய்கின்றன.இப்போது இருக்கும் இந்து மதம் என்ற பிராமண மதம் , புத்த , சமண மதங்களை அழித்து தான் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.பல்லாயிரக்கணக்கான சமணர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இப்போது பழிவாங்க முடியுமா?

said...

வருக வருக உறையூர்காரன்.ஏற்கெனவே படித்து விட்டேன்.காந்தி பிறந்த மண்ணை நன்றாகவே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுக்க பற்றி எரிந்த தீ தமிழ்நாட்டிற்குள் வரவேயில்லை,குஜராத்தில் அணையவேயில்லை.

Anonymous said...

மிக அருமையான பதிவு

நன்றி

Anonymous said...

//தமிழ்நாட்டிற்குள் வரவேயில்லை//

ஜாலிஜம்பர் அய்யா,

நல்ல பார்வை.கோயமுத்தூரில் குண்டு வைத்தது திராவிட தாடிக்கார தீவிரவாதிகளா,அல்லது இஸ்லாமியா தாடிக்கார தீவிரவாதிகளா?பேசாம நீங்க ஒரு லாலி பாப் வாயில வைத்துக் கொண்டு ஜாலியா ஜம்ப் அடிக்கலாம்.வாழ்த்துக்கள்.

said...

///மிக அருமையான பதிவு

நன்றி//

நன்றி அனானி

said...

சைக்கோ அய்யா,
பத்து பேரு செத்தா தானே உங்க கட்சியே வளருது.குண்டு வச்சது நீங்களாக ஏன் இருக்கக்கூடாது.

said...

//அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை.//

சைக்கோ அய்யா,
தீவிரவாதம் எங்கிருந்து வருதுன்னு தெரியுதா?

Anonymous said...

ஜாலி ஜம்பர்: இதோ ஒரு உண்மையான ஒப்பீடு வெகு சுருக்கமாக.
மோதி குஜராத்துக்கு கொடுத்தவை:
(1) எல்லா கிராமங்களுக்கும் 24 மணி நேர மின்சாரம்.
(2) எல்லா விவசாயிகளுக்கும் இன்ன பிற மக்களுக்கும் தண்ணீர் (நர்மதா திட்டம்)
(3) நகர, கிராம புறங்களுக்கு தரமான சாலை வசதிகள்
(4) இஸ்லாமிய தீவிரவாத பாதிக்கப்படா நிம்மதியான வாழ்க்கை மக்களுக்கு
(5) ஊழலற்ற சமுதாயம், அரசு அலுவலகங்கள்
(6) குஜராத்திகளை தேசப் பற்று மிக்கவர்களாகியமை
(7) ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான திட்டங்கள்.

கருணாநிதி தமிழகத்துக்கு கொடுத்தவை:
(1) அரிசி விலையைக் குறைத்து கட்சிக்காரர்களின் சம்பாத்தியத்திற்கு உதவினார்.
(2) இலவச தொலைகாட்சி, இலவச அடுப்பு, இலவச நிலம் என்று கூறி கட்சிக்காரர்களுக்கு வாரி வழங்கினார்
(3) தமிழகத்தை 'இருண்ட' தமிழகமாக்கினார்.
(4) வெற்று கோஷங்களுடன் அரைகுறை, நிர்வாண நடிகைகளின் ஆட்டங்களை 'கலை' என்று உட்கார்ந்து ரசித்தார்.
(5) வெட்டியாய் உட்கார்ந்து தீவிரவாதிக்கு கவிதை வடித்தார்
(6) ராதிகா செல்வி போன்றோரை எம்.பி. ஆக்கினார் (ரவுடியின் மனைவி என்கிற தகுதியின் அடிப்படையில் ஜாதி வெறி கொண்டு)
(7) தன் கடைக்குட்டி பேரன் வரை மந்திரியாக்கி அழகு பார்த்தார்.
(8) பெரும்பான்மை இந்துக்களை புண்படுத்துவதே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்.
(9) தொலையியக்கி குண்டு மூலம் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டுகிறார்.
(10)ஒரு வெத்து கருத்துக் கணிப்பிற்காக, மூன்று அப்பாவி தமிழ் இளைஞர்களை உயிரோடு கொழுத்திக் கொன்றார்.
(11) கள்ளக் கடத்தல், மணல் கொள்ளை, ஆயுத கடத்தல், நக்ஸல்கள் ஊடுருவல் புலி ஊடுருவல் என சகலவிதமான தேச விரோத செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கிறார்.
(12) ஆற்றில் போட்டாலே அளந்து போடுவது என்ற பழமொழிக்கு எதிராக கடலில் கொண்டு தமிழர்களின் பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார்.
(13) தரைக்கு மேலுள்ள சாலைகளை ஆழமாக்கியது போதாமல், கடலையும் வெட்டித் தனமாக நோண்டிக் கொண்டிருக்கிறார்.
(14) ஏழை தமிழனைப் பிச்சைக்காரனாகவே வைத்து அழகு பார்க்கிறார்.
(15) முக்குக்கு முக்கு, சந்துக்கு சந்து, தன் படத்தை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த லிஸ்டிற்கு முடிவே கிடையாது.

இதைத் தவிர கடந்த இரண்டு ஆண்டுகளில் என்ன கிழித்திருக்கிறார் என்பது இயற்கைக்கே வெளிச்சம்.

ஆனால் ஒரு ஒற்றுமை உள்ளது - மோதியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர் தான். அதற்காக பார்பனரைக் குறை கூறிக்கொண்டு, ஓரமாக உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை அவர்.

சற்று உங்கள் குண்டு சட்டிக்குள் இருந்து வெளியே வந்து குஜராத்தில் வாழ்ந்து பாருங்கள் - முன்னேற்றத்தின் வித்தியாசம் புரியும்.

Anonymous said...

எங்கே என்னுடைய பின்னூட்டம்? வெளியிட தைரியம் இல்லையா?

Anonymous said...

ஜாலி ஜம்பர் அய்யா,

ஓ, தெரியுதே.உன்னை மாறி ஆப்ரிக்காவிலிருந்து அந்தமான் வழியா தமிழ் நாட்டுக்கு வந்தேறிய தாடிக்கார திராவிட தீவிரவாதிகளாலும்,உலக அளவில் இஸ்லாமிய தாடிக்கார தீவிரவாதிகளாலும்.உங்களுக்கு சோறு போட்ட தமிழர்களுக்கு இப்படி துரோகம் செய்யறீர்களே?இதனால் நீங்க பெறும் இன்பம் என்ன.நீங்களெல்லாம் ஏன் இப்படி சேடிஸ்ட்களாக மாறினீர்கள்?சொல்லுங்கய்யா சொல்லுங்க.

said...

//மோதியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர் தான். //

உயர்ஜாதியினரின் மதவெறியாவது புரிந்துகொள்ளக்கூடியதே.ஆனால் இவரைப் போன்ற ஆட்களும் பிற்பட்டவர்களும் இந்துத்துவ வெறிக்கு குடைபிடிப்பதால் தான் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் முன்னேற முடியாமல் உள்ளனர்.

said...

//எங்கே என்னுடைய பின்னூட்டம்? வெளியிட தைரியம் இல்லையா?//

அனானி,எல்லா பின்னூட்டங்களும் வெளியிடப்பட்டு விட்டன.

said...

//எங்கே என்னுடைய பின்னூட்டம்? வெளியிட தைரியம் இல்லையா?//

அனானி,எல்லா பின்னூட்டங்களும் வெளியிடப்பட்டு விட்டன.

said...

//ஓ, தெரியுதே.உன்னை மாறி ஆப்ரிக்காவிலிருந்து அந்தமான் வழியா தமிழ் நாட்டுக்கு வந்தேறிய தாடிக்கார திராவிட தீவிரவாதிகளாலும்,உலக அளவில் இஸ்லாமிய தாடிக்கார தீவிரவாதிகளாலும்.உங்களுக்கு சோறு போட்ட தமிழர்களுக்கு இப்படி துரோகம் செய்யறீர்களே?இதனால் நீங்க பெறும் இன்பம் என்ன.நீங்களெல்லாம் ஏன் இப்படி சேடிஸ்ட்களாக மாறினீர்கள்?//

சைக்கோ அய்யா,
இந்துக்களும்,முஸ்லிம்களும் தமிழ்நாட்டில் பிரச்சினை இல்லாமல் வாழ்வது உங்களுக்கு பொறுக்கமுடியவில்லை.சண்டையை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் குள்ளநரி அய்யா,நீங்கள் என்னை சேடிஸ்ட் என அழைப்பது நியாயமா அய்யா?

Anonymous said...

உணர்ச்சிகளின் பெருமிகுதத்தில் வைக்கப்படுகின்ற குட்டுக்கள் இங்கே அதிகம். தமிழகம் குஜராத்தை போல் ஆகிவிட வேண்டும் என்பதில் எந்த நடுநிலைவாதியும் ஆசைபடுவதில்லை அவர்களைப் போன்று நானும். ஏன் இந்த வெறி. முஸ்லிம் கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தையை கூட வயிறருத்து வெந்தனிலில் எரித்து சுகம் காண செய்வது எது? இதை போன்ற கொடூரத்தை எந்த முஸ்லீமும் செய்து விட முடியாது. அப்படி செய்பவன் ஒரு முஸ்லீமாக இருக்க முடியாது. இதில் இரத்தம் குடிக்க நினைக்கும் மனிதர்கள் மனிதர்களாக இருக்க முடியாது. பெயர் தாங்கிகள் செய்வதை இனியேனும் இஸ்லாம் என்று தப்பெண்ணம் கொள்வதை சகோதரர்கள் நிறுத்த கேட்கிறேன்.

கோயிலில் குண்டு வைத்தால் அது முஸ்லிம் தீவிரவாதி. மசூதியில் குண்டு வைத்தால் வெறும் தீவிரவாதியா? முதலில் மதம் சார்ந்த தீவிரவாத அடையாளத்தை சொல்லிக்கொள்ளும் ஈனத்தனத்தை விட்டொழியுங்கள். தீவிரவாதம் களையப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ள சகோதரர்கள் முதலில் உங்கள் சகத்தை அறிந்து கொள்ளுங்கள், மனித நேயம் பேண கற்றுக்கொள்ளுங்கள். இன்று பரவலாக பேசப்படும் அல்லது ஏசப்படும் மார்க்கம் இஸ்லாமாகத்தான் இருக்கிறது. ஏங்க இவ்வளவு ஏசுறீங்களே ஒரு முறையாவது அந்த மதத்தை பற்றி தெரிந்துகொள்ள நடுநிலையோடு அதை அணுகினால் என்ன? இஸ்லாமிய பெயர் தாங்கிகள் செய்யும் அறிவீனமான செயல்களை வைத்து பதில் எழுதும் அறிவாளர்கள் முதலில் அதை செய்யட்டும்.

இஸ்லாத்தை பற்றிய அறிய ஆவல் கொண்டால் நடுநிலையோடு குர்ஆனை படியுங்கள். போரைப்பற்றி நபிகளார் சொல்லும் போது:
1.பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களை கொள்ளாதீர்கள்.
2.பலன் தரக்கூடிய மரங்களை வெட்டாதீர்கள்
3.வழிபாட்டுத்தளங்களை இடிக்காதீர்கள்
4.மதபோதகர்கள், குருமார்கள் பொன்ற மத தலைவர்களை கண்ணியக்குறைவாக நடத்தாதீர்கள் என்பது போன்ற பல கட்டளைகளை நபிகளார் கூறியிருக்கின்றார்.

அரசியலுக்காய் ஓதுகின்ற மந்திரம் இந்த மதவெறி அரசியல் என்பதை புரிந்துகொள்ளுங்கள். சகமனிதர்களை நேசியுங்கள். இறைவனின் வேதம் எதுவும் மற்ற மனிதர்களின் இரத்தங்களை ருசித்து பார்க்க சொல்வதில்லை. அது இந்துக்களின் வேதமானாலும், கிருத்துவர்களின் வேதமானாலும், முஸ்லிகளின் மற்ற இன்னபிற மதங்களின் வேதமானாலும் சரியே. மனிதர்கள் மதம் பிடித்தால் யார் என்ன செய்வது. நியாயம் என்ற நிலையில் உள்ள நடுநிலைவாதிகள் தட்டிக்கேட்டு எந்த மததீவிரவாதிகளுக்கும் (இதில் இந்து, கிருத்துவ, முஸ்லிம் மற்றும் அனைவர்களுக்கும் தான்) வலித்ததில்லை... மண்ணில் சிந்தப்படுவது அப்பாவிகளின் இரத்தமே தவிர வேறு பயன் இல்லை. இது எதுவொன்றும் நியாயமாகிவிட முடியாது.

Anonymous said...

ha, I am going to test my thought, your post bring me some good ideas, it's truly amazing, thanks.

- Norman

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்