கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, December 8, 2007

யார் பிராமணன்?

இந்து மதம் என்பது ஒரு மதமல்ல , அதை ஒரு வாழும் நெறி என்று சொல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரே கூறியுள்ளார்.வாழும் நெறிக்கு ஆதாரம் வேதங்கள்.அதனால் இந்தமுறையை வேதநெறி அல்லது வைதீக நெறி என்று சொல்கிறார்கள்.

வேதநெறியின் படி பிராமணர் என்பவர் யார்?

குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்றுணர்ந்து, பருவ வயதில் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு , பின் காட்டிற்குள் சென்று துறவறம் மேற்கொண்டு ஆன்மீக உயர்நிலையை அடைந்து, இறுதியில் யாசகம் பெற்று தன் வாழ்வை நடத்துவதே ஒரு பிராமணனின் செயலாகும்.

இந்தக்கருத்துக்களை எல்லாம் அறிந்து கொள்வதற்கு முன்பே நான் நம்முடைய அம்மண சாமியார்களை பார்த்து வியந்து இருக்கிறேன்.முற்றும் துறந்தவர்கள் அவர்கள்.தனக்கென ஒரு கோமணத்துணி கூட வைத்துக்கொள்ளாத மகான்கள் , இவர்களைத் தான் பிராமணன் என்று நாம் கருத முடியும்.இவர்களிலும் போலிகள் உண்டு , அந்த போலிகளின் வழித்தோன்றல்கள் தான் இப்போது தங்களை பிராமணர் என்று கருதிக்கொள்பவர்கள்.

கடவுள் பக்தி , ஆன்மீகம் இரண்டும் வேறுவேறானவை.மனிதன் உணவுக்காக போராடும் காலத்திலேயே கடவுளைக் கண்டுபிடித்து விட்டான்.உணவுக்காகப் போராடும் நிலை போய் சொத்து சுகங்களுடன் வாழ ஆரம்பித்த பிறகு மனிதனுக்கு ஆன்மீக சிந்தனை தோன்றுகிறது.

ஆதிவாசி ஒருவன் அம்மணமாக திரிந்தால் அது அநாகரீகமாக நம்மால் பார்க்கப்படுகிறது,அதுவே அரசன் ஒருவன் தன்னை உணர்ந்து,இவ்வுலகத்தின் நிலையாமையை உணர்ந்து, தன் அறியாமையை உணர்ந்து
விழிப்புணர்வு அடைந்து அம்மணமானால் அவன் ஒரு உயர்ந்த துறவியாக கருதப்படுகிறான்.அப்படிப்பட்டவர்கள் தான் புத்தரும்,மகாவீரரும்.

இவர்கள் தான் உண்மையான பிராமணர்கள்.இவர்கள் தாம் பெற்ற இன்பத்தை , முக்தியை அனைவரும் அடையலாம் என்று சொல்லி அதற்கான வழிகளையும் காட்டினார்கள். அதற்கு அர்த்தம் ,மனிதரில் உயர்வு, தாழ்வு கிடையாது, அனைவரும் பிராமணர் ஆகலாம் என்பது தான்.

இந்தியா செல்வச்செழிப்பில் திளைத்த அந்தக் காலத்திற்கு இதெல்லாம் பொருத்தமான சிந்தனைகள் தான்.இப்போது பெரும்பாலான மக்கள் உணவுக்குப் போராடிக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் ஆன்மீக தத்துவங்களை மூட்டை கட்டிவிட்டு கொலைவெறியுடன் உலக அரங்கில் போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு
http://karuppupaiyan.blogspot.com/2006/11/blog-post_29.html
http://vaithikasri.blogspot.com/2007/11/blog-post.html

2 comments:

said...

//கடவுளைக் கண்டுபிடித்து விட்டான்.//
கண்டுபிடிக்கவில்லை உருவாக்கிகொண்டான்.
கண்டுபிடிக்க கடவுள் எங்கும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை.
அப்படிஒன்று இருந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு

வால்பையன்

said...

//அப்படி ஒன்று இருந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு//

வால்,நீங்களும் நம்ம குரூப்பு தானா!!
:-))

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்