உடைந்து போன ஊசியைக் கூட செத்த பின்னால் மனிதனால் கொண்டு செல்ல முடியாது,எனவே அனைவரும் இறைவனைத் தொழுது,தன்னிடம் உள்ளதைப் பிறரிடம் பகிர்ந்து வாழ வேண்டும் என்று பிரபல சித்தர் பட்டினத்தார் வலியுறுத்துகிறார்.
இதைப் போன்ற சிந்தனைகள் நம்முடைய சித்தர்களுக்குத் தான் தோன்றும்,மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சிந்தனை மரபு இல்லை என்று தான் தோன்றுகிறது.பொருளாயத வாழ்க்கையை முற்றமுழுக்க அனுபவித்த ஒருவனால் தான் இப்படி சிந்திக்க முடியும்.நம் முன்னோர்கள் அப்படி ஒரு ராஜ வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.
இதே கருத்தை வலியுறுத்துவதாக இருந்த ஒரு மேலை நாட்டு கார்ட்டூன் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருந்தேன்.உலகின் மாபெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸை கிண்டல் செய்யும் கார்ட்டூன்.
மைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் ஸ்லோகன் "WHERE DO YOU WANT TO GO TODAY?". சமாதி ஒன்றில் பில்கேட்ஸ் பெயரையும் அதற்குக் கீழே இந்த வாக்கியத்தையும் வரைந்து அருமையான ஒரு கேலிச்சித்திரம் உருவாக்கி இருந்தார்கள்.
அது இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன் , கிடைக்கவில்லை.அதனால் நானே வரைந்து பதிவு செய்து வைத்துள்ளேன்.
பில்கேட்ஸ் என்ற மாமனிதனை எப்படி கிண்டல் செய்துள்ளார்கள் பாருங்கள் மக்களே!
0 comments:
Post a Comment