கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, November 20, 2007

யானை மீதேறி பூனை பிடிப்பது எப்படி?

அறிவுத்துறையில் அர்த்தநாரீஸ்வரர்கள் இருக்கிறார்கள். உடல் அமைப்பிலே ஆணும்,பெண்ணும் பாதி பாதி ஒட்டிக்கொண்டு ஓருருவமாக இருப்பதில்லை.மனப்பான்மையிலே பழமையும்,புதுமையும் பாதிபாதியாக ஒட்டிக்கொண்டு பலர் இருக்கின்றனர்.அறிவுத்துறையிலே உள்ள இந்த அர்த்த நாரீஸ்வரர்களால் ஏற்படும் அவதி சொல்லுந்தரத்தக்கதல்ல.சகலவகையான புதுமைச்சாதனங்களையும் வசதிகளையும் பயன்படுத்தி மகிழத்தான் செய்கிறர்கள்.அதேபோது பழமையையும் பெருமையாகப் பேசிக்கொள்ளவும் பழைய ஏற்பாடுகள்,சிதைந்து போன சித்தாந்தங்கள்,தகர்ந்து போன தத்துவங்கள்,வெட்டி வேதாந்தம் இவைகளைக் கட்டி அழுவதோடும் நிற்காமல் போற்றிப் புகழவும் செய்கிறார்கள்.அடிக்கடி ரேடியோவில் கேட்கிறோமல்லவா திருப்பாவைக்கு அர்த்தம்,திருவாசகத்துக்கு உரை,இவைப்போல பேசும் அவர்களோ,பேசச்சொல்லும் ரேடியோ நிலையத்தாரோ,ஒரு தடவையாவது சிந்திக்கிறோமா,ரேடியோ என்ன வகையான சாதனம்-எந்தக் காலத்தது?எவ்விதமான அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது-இதனை-நாம் எந்தக் காரியத்திற்கு , எத்தகைய அறிவைப் பரப்பப் பயன்படுத்துகிறோம்ம் என்று எண்ணிப்பார்க்கிறார்களா? கிடையாது.ஏன்?அர்த்தநாரீஸ்வரர் மனம்!

குதிரை மீதேறிக்கொண்டு கொசு வேட்டைக்குக் கிளம்புவது,யானை மீதேறி பூனையைத் துரத்திப்பிடிக்க கிளம்புவது போன்று!

மூலம்:
http://www.arignaranna.info/kalanj_pagutharivu.htm

6 comments:

said...

ஒரு வேளை இதைத் தான் அவங்களும் செய்யுறாங்களோ...

//*குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்*//

said...

தங்கள் பதிவுகளை சுவைத்து கொண்டிருந்த போது அறிஞர் அண்ணாவை பற்றிய தளத்திற்கான தொடர்பை கண்டேன். உடனே நுழைந்தேன் பரவசமடைந்தேன். அறிய பொக்கிஷம். அறிவமுது. அண்ணாவை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனது நெடு நாள் ஆசை நிறைவேறியது. தமிழ் நாட்டு வரலாற்று நாயகனை என் போன்ற இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் அருமையான தளம். இந்த வாய்ப்பை நல்கிய தங்களுக்கு எனது நன்றிகள் பல.

said...

//ஒரு வேளை இதைத் தான் அவங்களும் செய்யுறாங்களோ...//

டிபிசிடி,அவங்க எல்லாம் வழிநடத்துற நிலையில் இருப்பவர்கள்.அதனால் அவங்க அப்படி செய்யக்கூடாது.

said...

அபு முஜாஹித்,வருகைக்கு மிக்க நன்றி.

said...

யானை & பூனை.

ரெண்டும் என் இஷ்ட தெய்வங்களாச்சேன்னு வந்து பார்த்தேன்.

said...

தெய்வங்களின் லிஸ்டில் யானை ஏற்கெனவே இருக்கிறது,இப்போது பூனையுமா?!!

துளசியம்மா,வருகைக்கு நன்றி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்