கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, November 19, 2007

ஜோதிடம் உண்மையா? பொய்யா?.முடிவு என்ன?

விஜய் டிவியின் சென்ற வார நீயா,நானா நிகழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.ராசி பலன்கள் நம்மை ஆட்டுவிக்கின்றனவா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் சில காட்சிகளை பார்த்தேன்,படு காமெடியாக இருந்தது.பிரபல ஜோதிடர் கோழியூர் நாராயணன் (பத்து விரல்களிலும் மோதிரம் போட்டுக்கொண்டு ஜெயா டிவியில் வருபவர்) தலைமையில் ஒரு அணி.பகுத்தறிவாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஒரு அணி.



ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசி,லக்கினத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்குமாம்.கோழியூர் இதை நிரூபிக்க வேண்டி எதிர்தரப்பினரிடம் அவர்களது சில குணங்களை சொல்ல சொல்கிறார்.மூன்று பேரிடம் அவ்வாறு கேட்கிறார்,மூவரும் தமது சில குணங்களை சொல்கின்றனர்.கோழியூர் அவர்களுக்கான ராசி,லக்கினத்தை சொல்கிறார்,மூன்றுமே தவறான விடை.

கோழியூராரின் முகம் இருண்டுவிட்டது,எச்சிலைக் கூட்டி விழுங்குவதை க்ளோஸப்பில் காட்டுகின்றனர்.



அடுத்து சுப.வீ நல்ல ஒரு கேள்வி கேட்டார்.குஜராத் பூகம்பத்திலும்,கும்பகோணம் தீ விபத்திலும் அத்தனை பேர் ஒரே நேரத்தில் மாண்டார்களே,அவர்கள் அனைவருக்கும் ஒரே ராசி,லக்கனமா என்பதை சொல்லுங்கள் என்று கேட்கிறார்.அதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.ஏன் இந்தக் கேள்வி கேட்டார் என்றால்,ஒருவனுடைய ஜாதகத்தை வைத்து அவன் எப்போது இறப்பான் என்பதை கூறமுடியும் என்பது ஜோதிட அறிஞர்களின் கூற்று.

நிகழ்ச்சியை முழுவதும் பார்த்து ரசித்தவர்கள் அதில் இடம்பெற்ற சூடான,சுவையான விவாதங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.

24 comments:

said...

சுரியனை ஒரு கிரகமாக பார்கிறீர்களே
ஆனால் விஞ்ஞான அதை நட்சத்திரம் என்கிறது என்றால் சுப .வீ

கோழியூர் எப்படி வேணா சொல்லலாம் என்றார்

நல்ல கூத்து .

said...

நன்றி தியாகு.

கிரகத்துக்கும்,நட்சத்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்துகொண்டு வானியலில் நாங்க தான் கிங்கு என்று சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.

said...

பேரே காமெடியா இருக்கு... சின்னவயசுல கோழிதிருடி இருப்பாரோ?? நல்ல நேரம் அந்த ஆள் படிக்கல இல்லன்னா எல்லாமே தான்னு கதைவிட்டிருப்பான்... நம்ம மக்கள திருத்தமுடியாதுடே...

said...

உண்மையில் உருப்படியான ஒரு நிகழ்ச்சி.
சுப.வீரபாண்டியனின் பேச்சு ரசிக்கும்படியாகவும் சரியாகவும் இருந்தது.
ராசிபலனை நம்பும் ஒரு பெண் சொன்னது, "எனது ராசி விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுடன் நெருக்கமாக இருக்கமாட்டேன் என்று அதற்கு சுப.வீரபாண்டியன் சொன்ன பதில் அருமையாக இருந்தது. பழகும் முன் அவர்களிடம் நீங்கள் என்ன ராசி என்று கேட்டுவிட்டுதான் பழகுவீர்களா? மனிதர்களை மனிதர்களாக தேடுங்கள் ராசிகளாக தேடாரீர்கள் என்று கூறியது உண்மையில் அவர்களுக்கு சவுக்கடி.


அஸ்டமி நவமி எமகண்டம் சனிக்கிழமை செவ்வாய்கிழமை போன்ற நாட்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடியது என்றால் அந்நாட்கள் மாதத்தில் 18 நாட்கள் வருகிறது மாத்தில் 18 நாட்கள் ஒன்றும் செய்யமுடியாது என்றால் சமூகம் எப்படி முன்னேறும் மிகச்சரியான கருத்து.

சுபவீர பாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காழியுர் நாராயணன் மற்றும் பக்கத்தில் இருந்த மற்றொரு டூபாக்கூரின் முகத்தில் ஈயாடுவதை பார்க்க வேண்டுமெ...மொத்தில் மிகசரியான விவாதம்...நூறு பெரியார்கள் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

said...

வாங்க இசை,
கோழி போன்றவர்களுக்கும் பிழைப்பு ஓடுவது ஆச்சரியமூட்டுகிறது.எனக்கும் இந்த மாதிரி ஒரு ஜோசியக்கடை போட்டுருவோமா என்று ஒரே சிந்தனையாக இருக்கிறது.

said...

இந்தப் பதிவை போட்டவரும், இதுவ்ரை பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோருமே ஒரே மாதிரி ** ராசிக்காரர்கள். அதனாலதான் உங்களுக்கெல்லாம் ஒரே மாதிரி சந்தேகம் வந்திருக்கு. என்னிட்ட ஒரு தாயத்தும் தகடும் இருக்கு. எல்லோரும் வாங்கி வச்சிக்கிட்டீங்கன்னா இந்த சந்தேகமெல்லாமே தீர்ந்துரும்.

:)

said...

வாங்க பிரதாப்,மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு.
அற்பத்தனங்களை வளர்த்தெடுப்பதில் சமூகத்தில் முன்னேறியவர்களே வலிந்து ஈடுபடும் போது சாதாரண மக்களும் அவர்களை பின்பற்ற விரும்புகின்றனர்.

சேலம் பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பு தனக்குப் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை தகப்பனே கொடுரமான முறையில் கொலை செய்துள்ளான்.விசாரணையில் ஜோதிடர் தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னதால் குழந்தயைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாகவும் , பெண்ணாகப் பிறந்ததால் கொன்றதாகவும் கூறியுள்ளான்.

பாழாய்ப்போன ஜோசியத்தால் ஒரு உயிரையும் கொன்று தன் வாழ்வையும் சீரழித்துக் கொண்டான்.

said...

//என்னிட்ட ஒரு தாயத்தும் தகடும் இருக்கு. எல்லோரும் வாங்கி வச்சிக்கிட்டீங்கன்னா இந்த சந்தேகமெல்லாமே தீர்ந்துரும்.

:)//

தருமி அய்யா,
வாங்க பார்ட்னர்ஷிப் போட்டு தொழிலை தொடங்கிருவோம். :-)).

இந்த ஒரே ராசி,லக்கினம் மேட்டரை வைத்து ஒரு கேள்வி கேட்டிருந்தேன்.ஜெயலலிதா பிறந்த அதே நேரத்துல பிறந்தவங்க எல்லோரும் ஏன் தமிழக முதல்வராக வரவில்லை அப்படின்னு கேட்டிருந்தேன்.அதுக்கு ஒருத்தரு போட்டாரு பாருங்க அருவாள.அதாவது ஒருத்தருடைய ராசி,நட்சத்திரம் மட்டும் பலன்களைப் பாதிக்காதாம்,அவருடைய அப்பா,அம்மாவின் ராசி மற்றும் அவருடைய பூர்வ ஜென்ம பலன்கள் எல்லாம் சேர்ந்து தான் தீர்மானிக்கிறதாம்.

இன்டர்நெட் காலத்துலேயும் பூர்வஜென்ம கதை சொல்றவங்க எந்த தைரியத்துல சொல்றாங்கன்னே புரியல.

said...

பேரே காமெடியா இருக்கு... சின்னவயசுல கோழிதிருடி இருப்பாரோ?? நல்ல நேரம் அந்த ஆள் atomic physics படிக்கல இல்லன்னா எல்லாமே atom தான்னு கதைவிட்டிருப்பான்... நம்ம மக்கள திருத்தமுடியாதுடே...

இது தான் நான் சொல்ல வந்தது. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய மறந்துட்டேன்

said...

ஜாஜா,
அதில பெரிய சோகம் என்னன்னா, உங்கள மாதிரி இளம் வயசு ஆளுங்க நிறைய பேரு நம்பிக்கையுள்ளவர்களாக இருந்ததும் மட்டுமின்றி, மிகவும் தீவிர ஆதரவாளர்களாகவும் இருந்ததுதான்.

இதை நான் பழைய கட்டுரைகளில் எழுதியிருந்திருக்கிறேன். சுப.வீயும் அதையே குறிப்பிட்டார்.

நம்பிக்கையற்றவர்கள் குழுவில் என் வயசுக்காரர் ஒருவர் ஆணித்தரமாக பேசியது சந்தோஷமாயிருந்தது.

//இன்டர்நெட் காலத்துலேயும் பூர்வஜென்ம கதை சொல்றவங்க எந்த தைரியத்துல சொல்றாங்கன்னே புரியல.//

என்னங்க ஜாஜா, அந்த கம்ப்யூட்டர்லயே ஜாதகம் கணிச்சி சொல்றாங்க. கூடன்குளம் வேலை ஆரம்பிச்சப்போ பூசை நடந்ததாகக் கேள்வி. :(

said...

ஏதோ ஒரு தேர்தல் சமயத்தில ஏதோ ஜோஸ்யர் ஒரு ஹேஷ்யத்தை ஜோஸ்யமாகச் சொல்லி அது புஸ்வாணமா போச்சுது. அந்த மாதிரி ஆளுகளை நினைவில் வச்சிருந்து அதற்குப் பிறகு "மூக்கை உறிச்சிருக்கணும்". அதை யாரும் செய்ய மாட்டேனென்கிறோம்.

Anonymous said...

the famous astrolger kazhiyur narayanan predicted that according to ms jayalalitha's rasi her party aiadmk would get 160 to 170 assemly seats in 2006 elections.
(jaya tv)that party got just 60,
now it has 59 mlas only

said...

//என்னங்க ஜாஜா, அந்த கம்ப்யூட்டர்லயே ஜாதகம் கணிச்சி சொல்றாங்க. கூடன்குளம் வேலை ஆரம்பிச்சப்போ பூசை நடந்ததாகக் கேள்வி. :(//

தருமி அய்யா,அறிவியல் விந்தைகளை அற்ப விசயங்களுக்கு பயன்படுத்துவோருக்கு பேரறிஞர் அண்ணா சாட்டையடி கொடுத்திருக்கிறார்.அதை தனியே ஒரு பதிவாக இடுகிறேன்.

பூர்வ ஜென்ம கதை சொல்லியவர் ஒரு பார்ப்பனர்,பெண்கள் அசுத்தமானவர்கள் அதனால் கோயிலில் பூஜை செய்ய தேவையில்லை என்ற ரீதியில் கருத்து சொன்ன கமலா செல்வராஜ் அவர்களும் பார்ப்பனர்.வேடிக்கை என்னவென்றால் இருவருமே டாக்டர்கள்.

பார்ப்பனீயத்தை கட்டிக் காப்பதற்காக தங்கள் அறிவையே அடகுவைக்கத் துணிந்தவர்கள்.

said...

இசை உங்கள் விளக்கத்திற்குப் பின் அந்தப் பின்னூட்டம் நன்றாகப் புரிந்தது.நன்றி.

அனானி வருகைக்கு நன்றி.

said...

ரேசன் கார்டில் ஜாதம் இணைத்து அனுப்பினால் அரசாங்கம் யார் யார் எந்த ஆண்டுவரை உயிரோடு இருக்கவேண்டும் என்று Expiry Date ம் அடித்துக் கொடுத்துவிடுவார்கள்.

அது சம்பந்தமான புத்தகங்களுக்கு அணுகவும் சுப்பையா வாத்தியார் :-))
http://kalvetu.blogspot.com/2007/11/blog-post_20.html

said...

//ரேசன் கார்டில் ஜாதம் இணைத்து அனுப்பினால் அரசாங்கம் யார் யார் எந்த ஆண்டுவரை உயிரோடு இருக்கவேண்டும் என்று Expiry Date ம் அடித்துக் கொடுத்துவிடுவார்கள்.//

கல்வெட்டு,
எப்ப மண்டைய போடப்போறோம் என்று தெரிந்து கொள்வதில் மக்களுக்கு ஒரு ஆர்வம்.எத்தனை கல்யாணம் என்று கூசாமல் ஜோதிடர்களிடம் கேட்பவர்களும் உண்டு.ரெண்டு பொண்டாட்டி என்று அவரும் ஏத்தி விடுவாரு.

ஜாதகப்படி தான் எல்லாம் நடக்கிறது என்றால் எதற்கு சிறைச்சாலை,நீதிமன்றம் எல்லாம்?

said...

13 பகுதிகளாக நான் பதிந்த ஜோதிடம் பற்றிய பதிவுகளுக்கு இங்க உங்க இடத்தில ஒரு சின்ன விளம்பரம் கொடுத்துக்கிறேன்.

நன்றி

said...

விஜய் டிவியில் இன்று மறுபடியும் ஒளிபரப்பப்பட்டது.

"எல்லாவித நம்பிக்கைகளுக்கும் பின்னால் குறைந்தபட்ச பகுத்தறிவுடன் செயல்பட்டாலே போதும்.எல்லாமே நல்லது தான்"

நிகழ்ச்சி நடத்துனர் கோபி அவர்கள் இதை முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார்.

Anonymous said...

all you might be right or wrong, but let know about only one thing... how our ancestors were able to predict full moon day, new moonday, position of planets, distance between planets before thousands of years... answer for this question will get you answer for all occult science related questions... and you know... all planets are stars only in this galaxy only. we have named as planets for those stars... else we have not named as planet for other stars... internet can/will never change the nature's creations and routines. internet cannot make 1+1 =3... so be aware... technology development is just an additional facilty for human being... its not the solution or answer for all your problems... any reply will be appreciated

said...

//how our ancestors were able to predict full moon day, new moonday, position of planets,
distance between planets before thousands of years... answer for this question will get you answer//


வானியலில் இந்தியர்களின் பங்கை மேலைநாட்டினரே வியந்து போற்றத்தான்
செய்கிறார்கள்.துரதிர்ஷ்டவசமாக மேலைநாட்டினர் இந்தியர்களின் அறிவையும் விஞ்சி
மேலே மேலே போய்க்கொண்டிருக்கிறார்கள்.நாம் இன்னும் ஆயிரமாண்டு காலப்
பெருமையையே பேசிக்கொண்டு இருக்கிறோம்.

//internet can/will never change the nature's creations and routines. internet cannot make 1+1 =3... //

மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ்பவன் அல்ல,அதை மீறியும்,இயற்கையை தனக்கு ஏற்றவாறு மாற்றியும் தான்
வாழ்ந்து வருகிறான்.அமெரிக்காவில் பிறந்து பத்து நிமிடங்களே ஆன குழந்தையை
மதுரையில் இருந்து பார்த்து மகிழ்ந்த தாத்தா,பாட்டி உண்டு , இது
இன்டர்நெட்டினால் தான் சாத்தியமானது.

இன்டர்நெட்டினால் 1+1=3 என்று ஆக்கிவிட முடியாது.ஆனால் ஜோதிட நிபுணர்களால்
2+3=9, 5+4=3 என்று சொல்ல முடியும்.:-))

//so be aware... technology development is just an additional facilty for human being... its not the solution //

இந்தியா இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு இது ஒன்று தான் காரணம்.

வருகைக்கு நன்றி பா.

Anonymous said...

தன்னை நம்பாதவன் தான் சோதிடத்தை நம்புவான் - சுப.வீ

இது உண்மைய்ளும் உண்மை!!!

www.selvarayan.blogspot.com

said...

வருகைக்கு நன்றி ராயன்.

said...

இந்த ஜோதிடம் எல்லாம் மனிதனுக்கு மட்டும்தானா இல்லை ஆடு மாடு கோழி எல்லாவற்றிர்கும் உண்டா? அப்படியானால் யாராவது ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஜோதிடம் பார்த்து சொல்ல முடியுமா? ஒரு முட்டையின் ரேகையை வைத்து யாராவது அந்த முட்டை எப்போது இடப்பட்டது என்று கூற முடியுமா?. அப்படி என்றால் தீபாவளிக்கும் ஞாயிற்றுகிழமைகளிலும் சாகும் கோழி ஆடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பிறந்ததா?.

said...

//அப்படி என்றால் தீபாவளிக்கும் ஞாயிற்றுகிழமைகளிலும் சாகும் கோழி ஆடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பிறந்ததா?.//

புரட்சித்தமிழன் , இந்தக்கேள்விக்கு தான் பதிலே தெரியவில்லை.

காழியூர் என்ன விளக்கம் கொடுத்தாருன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா!

வருகைக்கு நன்றி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்