கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, October 6, 2007

ஜோசியம் பார்க்கலாம் வாங்க.

குமார் என்பது அவனது பெயர்.ஒரு 15 வருஷமா ஒன்னுமே செய்யாம வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறான்.வயசு 36 ஆச்சு.காலையில் எழுந்தவுடன் டிவியில் சொல்லும் ஜோதிட பலன்களை பார்த்துக்கொண்டு அன்றைய பொழுது ஆரம்பிக்கும்.சேகர் மஹாதன் ராஜா,லட்சுமி ஜயஸ்வரூபா,ஒயிட்&ஒயிட் நீல்கண்ட சிவா இப்படி பல ஜோதிட நிபுணர்களையும் அலசி ஆராய்வது தான் முக்கியமான வேலை.இவர்களில் யார் சிறந்தவர் என்று சர்டிபிகேட் வேறு கொடுப்பான்.

இப்படி ஒரு ஜோசியக் கிறுக்கனா இருப்பது காலேஜ் முடிச்சு ஒரு 4 வருஷம் கழித்து தான் தெரியவந்தது.ஆளாளுக்கு ஒரு வேலைய பார்த்து செட்டில் ஆகியிருந்தாங்க நம்ம நண்பர்கள்.எனக்கு ஏழு வருஷம் சனி பிடிச்சுருக்கு,அதனால் நான் இப்படி தான் இருப்பேன் என்று சொன்னான்.

உட்கார்ந்தே தின்னும் அளவுக்கு சொத்து இருப்பதால் சரி தான், பய வாழ்க்கையை என்ஜாய் பண்றான் போலன்னு நினச்சுக்கிட்டேன்.இவன் சோம்பேறியா இருப்பதற்கு ஜோசியத்தை நம்பினானா அல்லது ஜோசியத்தை நம்பியதால் சோம்பேறி ஆகிவிட்டானா என்று இன்று வரையில் தெரியவில்லை.ஆனால் அவனே ஒரு கட்டத்தில் ஜோசியம் பார்க்கும் அளவுக்கு அதில் பரிச்சயம் பெற்று விட்டான்.

அதனால அவனை எல்லோரும் ஜோதிடபூஷாணம் என்று சொல்லி கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.அவனை சந்திக்கும் போது கையை காண்பித்து குறி கேட்பார்கள் நண்பர்கள்,அவனும் பல விசயங்களை சொல்வான்.

நான் அவனை பல கேள்விகள் கேட்டு டார்ச்சர் கொடுப்பதால் தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என நினைத்து ஒரு குண்டை தூக்கிப் போட்டான்.நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்தது இது.அதாவது கலைஞர் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் காலமாவார் என்றான்.

இந்த ஜோசியம் பாக்குறவன்,சாமியை விழுந்து விழுந்து கும்புடுறவன்,சாதி இந்து என்று பெருமையா நினச்சுக்கிறவங்களுக்கு எல்லாம் கலைஞரை கண்டாலே ஆவாது.இந்த தகுதி எல்லாம் நம்மாளு கிட்டேயும் இருக்கிறதுனால அவனும் அவரை வெறுத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.ஆனாலும் இப்படியா ஒரு மனிதன் சாவதற்கு நாள் குறிப்பார்கள்,என்ன மனிதனடா இவன் என்று மனம் வெறுத்துப் போய்விட்டேன்.

பின் மனதைத் தேற்றிக்கொண்டு அவனை அழைத்து ,நண்பா நீ சோதிடத்தை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் கலைஞருக்கு நாள் குறித்து இருக்கிறாய்.கலைஞர் வயதிற்கு எந்த நேரமும் மரணமடைய வாய்ப்புகள் மிகமிக அதிகம்.அதனால் அவர் மரணமடைந்தால் அதில் உன் திறமையை நினைத்து மெச்சிக்கொள்ள ஒன்றுமே இல்லை என்று சொல்லி விட்டு,அவனை திருத்த இது ஒரு நல்லவாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்து அவ்வாறு நடக்காவிட்டால் நீ சோதிடம் பார்ப்பதையோ,நம்புவதையோ விட்டுவிட வேண்டும் என்று சொன்னேன்.அவனும் வேகமாக மண்டையை ஆட்டிவிட்டு சென்றான்.

2003 டிசம்பர்15 கெடு முடிந்துவிட்டது.நண்பன் கண்ணிலேயே சிக்காமல் தலைமறைவாகி விட்டான்.நீண்ட
இடைவெளிக்குப் பின் கையில் சிக்கியவுடன் கேட்ட முதல் கேள்வியே யப்பா ஜோதிட சிகாமணி உன் ஜோதிடம் என்ன ஆச்சு என்பது தான்.என்னிடம் ஏன் கேட்கிறாய் ,பல பெரிய ஜோதிட அறிஞர்கள்,ஆராய்ச்சியாளர்கள்,நிபுணர்கள் இவர்கள் எல்லாம் சொன்னதை வைத்துத் தான் நானும் சொன்னேன்,அதனால் அவர்களிடம் போய்க் கேள் என்றான் எகத்தாளமாக.நான் திகிலடித்துப் போய் ,சரி பயல் இன்னும் திருந்தவில்லை என்று நினைத்துக் கொண்டு உனக்குத் தான் ஏழு வருஷம் சனி எல்லாம் முடிந்து விட்டதே இன்னும் ஏன் இப்படி வெட்டியாய் இருக்கிறாய் என கேட்டதற்கு இன்னும் ஒரு 4 வருடங்கள் இப்படித் தான் இருப்பேன் என்று ஜோசியர் சொல்லிவிட்டார்.அதனால் நான் என்ன செய்தாலும் அது நிறைவேறாது ,அப்படி நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஒரு 2 லட்சம் கொடு,இரண்டே மாதத்தில் அது என்ன ஆகிறதென்று நீயே பார்த்துக்கொள் என்கிறான்.

ஜோசியம்,ஜோசியம் என்று சொல்லி வீணாய்ப் போகிறானே என்று பரிதாபப் பட்டால் கடைசியில் நம்மை கேணப்பயலாக்கி விட்டானே என்று நொந்து கொண்டேன்.இதை தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மனசை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.

11 comments:

said...

அய்யா வணக்கம்..
நானும் ஜோதிட ஆலோசனை வழங்குபவன் தான் /ஆனால் நான் ஒரு ஜோதிடன் என்று நினைப்பதில்லை.(என்னைப்பற்றி மேலும் அறிய கவிதை07 என்ற என் வலைப்பூவை பார்க்கவும்).

ஜோதிடத்தில் எழுதப்படாத ஒரு விதி என்னவென்றால் எந்த ஜாதகத்துக்கும் ஆயுர்தாயம் செய்யக் கூடாது என்பதாகும்.

ஜோதிடம் என்பது சாய்ஸுடன் (இது அல்லது அது/மரணம் அல்லது சிறை/ அறுவை சிகிச்சை அல்லது விபத்து) சொல்லப் பட்டால் அதை நம்பலாம். இது போலன்றி எந்த அளவுக்கு டீட்டெயில்டாக சொல்லப் படுகிறதோ அது அந்த அளவுக்கு டுபாகூர் என்று அர்த்தம். காரணம் ஜோதிட சாஸ்திர விதிகளில் இப்போது நம்மிடம் உள்ள விதிகளை அப்ளை செய்து பலன் சொல்லவே ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் தேவை. ரகசியம் ரகசியம் என்று மூடி மறைத்ததால் பல அற்புத கிரந்தங்கள் பார்ப்பனர் வீட்டு பரண்களில் செல்லரித்து போய்விட்டன.

கடைசியாக ஒரு வார்த்தை:


ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை

ஜோதிடம் பொய்த்தால், ஜோதிடர் கோட்டை விட்டு விட்டார் என்று பொருள்.

said...

//பல அற்புத கிரந்தங்கள் பார்ப்பனர் வீட்டு பரண்களில் செல்லரித்து போய்விட்டன.//

முருகேஷன் அய்யா,இந்த அரிய விஞ்ஞானத்தை கண்டுபிடித்தது அவர்கள் தானா!!
நல்ல தகவலுக்கு நன்றி அய்யா.

said...

ஜோதிடம் என்பது ஒரு நம்பிக்கை என்பவர்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை... ஆனால் இந்த ஜோதிடத்தை விஞ்ஞானத்தோடு சம்பந்தப்படுத்துபர்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகளால் புறந்தள்ளப்பட்ட விசயம் இந்த ஜோதிடம்.சில படித்த மேதைகளே இதை உண்மை என நம்பி இத பரப்ப வேறு செய்கிறார்கள்.பெரிய மனிதர்களே இப்படி செய்தால் வளரும் குழந்தைகளின் மனநிலை எப்படி போகும்.தன்நம்பிக்கையோடு உழைக்க வேண்டிய இளைஞர்களின் மனதை சூம்பிப் போகத்தான் செய்யும் இந்த ஜோதிட நம்பிக்கை.

அறிவுப் பூர்வமான,விஞ்ஞான ரீதியான கருத்துக்களை சிறுவர்,சிறிமிகளிடம் பரப்ப வேண்டிய தருணம்.

'ஜோதிடத்தில் எழுதப்படாத ஒரு விதி என்னவென்றால் எந்த ஜாதகத்துக்கும் ஆயுர்தாயம் செய்யக் கூடாது என்பதாகும்'

இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு விதியை சொன்னால்தானே மக்களை கேணப்பயலாக்க முடியும்..

said...

//ஜோதிடம் என்பது ஒரு நம்பிக்கை என்பவர்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை... //

பாபு , நம்பிக்கைக்கும் ,மூடநம்பிக்கைக்கும் மயிரிழை தான் வித்தியாசம்.செவ்வாய் தோசம்,மூலநட்சத்திரம் என்று சொல்லி எத்தனையோ பெண்களின் வாழ்வு பாதிக்கப் படுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.

பெண்ணுக்கு மூல நட்சத்திரம் இருந்தால் அவளுடைய மாமனாருக்கோ,அல்லது மாமியாருக்கோ உயிருக்கே ஆபத்து ஏற்படுமாம்.

என் மனைவிக்கு மூல நட்சத்திரம் என்று சொல்லி திருமணத்திற்கு தயங்கினர் என் மனைவியின் வீட்டார்.நான் தான் அவர்களை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தேன்.திருமணம் முடிந்து 6 வருடங்களாகி விட்டது.என் அப்பா,அம்மா நன்றாகத் தான் இருக்கிறார்கள்.

Anonymous said...

"நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் ஒரு 2 லட்சம் கொடு,இரண்டே மாதத்தில் அது என்ன ஆகிறதென்று நீயே பார்த்துக்கொள் என்கிறான்."

சரியான காரியக்கிறுக்கனா இருப்பாம்போலத் தெரியுதே?

எதுக்கும் உசாரா இருப்பா.

said...

ஜோதிடத்தை நம்பிக்கை என்று சொல்லுபவர்களிடம் பேசிப் பயனில்லை என்ற அர்த்தத்தில்தான் அப்படி சொன்னேன்.

Anonymous said...

ஹி,ஹி,ஹி,ஹிஹி.

Anonymous said...

ஜோதிடத்தை னம்புவதும் ன்ம்பாததும், அவரவர் சூழ்னிலை தான் னிர்னயம் செய்கிறது என்பது என் கருத்து.

said...

//சரியான காரியக்கிறுக்கனா இருப்பாம்போலத் தெரியுதே?//

ஆமாங்க அனுமான்,கடைசில நம்மள ஜோக்கர் ஆக்கிட்டுப் போய்விட்டான்.

said...

//ஜோதிடத்தை நம்பிக்கை என்று சொல்லுபவர்களிடம் பேசிப் பயனில்லை என்ற அர்த்தத்தில்தான் அப்படி சொன்னேன்.//

பாபு,நல்லா சொன்னீங்க.நம்பிக்கை உள்ளவர்களிடம் பேசினால் மனக்கசப்பு உண்டாகிறது.ஒரு கட்டத்தில் நாம் தான் சமூகத்திலிருந்து தனிமைப் பட்டுப் போகிறோம்.

Anonymous said...

//ஜோதிடத்தை னம்புவதும் ன்ம்பாததும், அவரவர் சூழ்னிலை தான் னிர்னயம் செய்கிறது என்பது என் கருத்து.
//

நாட்டாமை தீர்ப்ப மாத்து

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்