கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, October 4, 2007

ஸ்புட்னிக்

50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அமெரிக்காவின் தலையில் இடியாக இறங்கியது அந்தச் செய்தி.அன்று தான் புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகி பூமியைச் சுற்றி வரும் ஒரு சாதனத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக அனுப்பியிருந்தது சோவியத் ரஷ்யா.மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மாபெரும் மைல்கல்லாக இது கருதப்படுகிறது.

ஏற்கெனவே சோவியத்துக்கும்,அமெரிக்காவிற்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் மேலும் தீவிரமடையத் தொடங்கியது.நாஸா என்ற புதியதோர் அமைப்பையே அமெரிக்க அரசு தோற்றுவித்தது.இன்டர்நெட்டுக்கான தேவையை இந்த விண்வெளி யுகம் தான் தூண்டியது.

சியல்கோவ்ஸ்கி என்ற அறிஞர் சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் தொழில்நுட்பத்தின் முன்னோடி ஆவார்.இவரது திட்டங்களையே ரஷ்யா நிறைவேற்றியது.

மனித இனத்தின் தொட்டிலாக பூமி உள்ளது.ஆனால் என்றென்றும் அப்படியே இருந்திடாது என்று கூறினார் சியல்கோவ்ஸ்கி.மனிதன் வேறு கிரகங்களில்
குடியேறுவான் என்பதையே அவ்வாறு சொன்னார் சியல்கோவ்ஸ்கி.

எப்போது குடியேறுவான் என்பதை நம் ஜோதிட நிபுணர்கள் தான் சொல்ல வேண்டும்.:-))

வல்லரசாக அமெரிக்காவிற்கு 200 ஆண்டுகள் தேவைப்பட்டது,ரஷ்யாவிற்கு 30-40 ஆண்டுகள் தேவைப்பட்டது.இந்தியாவிற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என தெரியவில்லை.இங்கேயுள்ள துருப்பிடித்த மூளைகளைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டால் இந்தியாவும் நிச்சயம் சாதிக்கும்,அந்த மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுபவர்கள் தலித் மக்களாகத் தான் இருப்பார்கள்.

0 comments:

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்