கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Sunday, October 7, 2007

நல்லபாம்பு-பெயர்க் காரணம்

"உலக மிருகங்களிலேயே கொடிய விஷமுள்ள ஜந்து ஒன்றை நல்லபாம்பு என்று அழைக்கும் பெருந்தன்மை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு" என்று ஒரு பின்னூட்டத்திலே நான் குறிப்பிட்டிருந்தேன்.

இன்று வரை அவ்வாறு தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.இந்தியாவில் பசு புனிதமான மிருகமாக கருதப்படுகிறது.அதைப்போல் பாம்பும் சிவனுக்கு மிகவும் வேண்டிய ஒரு மிருகமாக இருப்பதால்
அதுவும் புனிதமாக மக்களால் கருதப்படுகிறது,அதனாலேயே இது நல்லபாம்பு என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகின்றது என்று எண்ணியிருந்தேன்.

ஜாலியின் தீவிர வாசகரான அருமை அய்யா நன்னன் அவர்கள் எனக்கு விளக்கம் சொல்லும் விதமாக நேற்று மக்கள் தொலைக்காட்சியிலே அருமையாக விளக்கினார்.தமிழிலே ஒரு வழக்கம் உண்டு,ஒரு விசயத்தை முரணாக சொல்வது.காட்டாக தண்ணீரே இல்லாத பல ஊர்களுக்கு சமுத்திரம் என்று தமிழ்நாட்டில் பெயர் உண்டு.அதைப் போன்றதா நல்லபாம்பு என்று அழைப்பதும் என்றால் இல்லை.இப்போது ஒருவன் கீழே விழுந்து அடிபட்டுவிட்டான்,உடனே நாம் நல்ல அடி என்கிறோம்,மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது ,நல்ல மழை என்கிறோம்,விளைச்சல் அமோகமாக இருக்கிறது,நல்ல விளைச்சல் என்கிறோம்.நல்ல என்ற சொல் மிகுதியான,அதிகமான என்ற பொருளிலே பயன்படுத்தப்படுகிறது.அதேபோல நல்லபாம்பு என்பதும் மிகுதியான விஷமுள்ள பாம்பு என்ற பொருளிலே பயன்படுத்தப் படுகிறது என்று அருமையான விளக்கம் கொடுத்தார்.

இன்னொரு பாம்பைப் பற்றிய ஒரு தகவலையும் சொல்லி விடுகிறேன்.ஆனைகொன்றான் தெரியுமா உங்களுக்கு?உலகின் மிகப்பெரிய பாம்பு.இதற்கு விஷம் இல்லை,ஆனால் தனது இரையை பிடித்தவுடன் அதனை நெரித்தே கொன்றுவிடும்.நம் காடுகளில் இருக்கும் மலைப்பாம்புகளின் பங்காளி தான் இவர்.மலைப்பாம்புகள் இரையை சுற்றி இறுக்கி மூச்சு திணற வைத்து கொல்லும்,ஆனைகொன்றான் இரையின் எலும்புகளை நொறுக்கி விடும்.ஆனைகொன்றான் இறுக்கும் போது 9டன்
அளவுள்ள சக்தியை வெளியிடுகிறது,ஒரு பஸ் நம் மீது ஏறி இறங்கினால் எப்படி இருக்குமோ அதே அளவு சக்தி.அமேசான் காடுகளில் இவைகள் வாழ்கின்றன.அங்கு வாழும் சில ஆதிவாசிக் குழுக்கள் இவற்றை தெய்வமாக வழிபடும் கூத்தும் நடைபெறுகிறது.

ஆனைகொன்றான் என்றால் என்னய்யா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.அனகோண்டா தான் ஆனைகொன்றான்.

ஆனைகொன்றான் என்ற தமிழ் வார்த்தை தான் அனகோண்டாவாக மாறியுள்ளது.

20 comments:

said...

நல்ல தகவல்கள் ஜாலி ஜம்பர்..!!!

said...

இது "நல்ல" பதிவு... :))))
(இது நிஜமாலுமே நல்ல பதிவுங்க.. "நல்ல பாம்பு", "நல்ல அடி" மாதிரி இல்லை....)

said...

நம்ம தமிழர் கிண்டல் கில்லாடிகள்.கறுப்பனுக்கு வெள்ளைத்தம்பி எனப் பெயர் வைப்பவங்க..
நல்லபாம்பும் இப்படியே, நல்லெண்ணை கூட அப்படியே...
இந்த ஆனை கொண்டான் பதிவு ஒன்று ஆரம்பத்தில் போட்டுள்ளேன்.
http://johan-paris.blogspot.com/2006/09/blog-post_21.html#comments

said...

//இன்று வரை அவ்வாறு தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.இந்தியாவில் பசு புனிதமான மிருகமாக கருதப்படுகிறது.//

ஜாலிஜம்பர் ஐயா,

பசுக்கள் ஆரியர்களின் செல்ல பிராணி, பசு மேய்ச்சல்தான் அவர்களின் வாழ்வாதரமாக இருந்திருக்கிறது. நான்கு வேதங்களில் பசுவைப்பற்றி வான் அளவு புகழ்ந்திருக்கிறார்கள். எனவே பசு இந்தியாவின் புனிதமிருகமாக மாறிப் போனதில் வியப்பில்லை.

பாம்பு வழிபாடு, நடுக்கல் வழிபாடு உலகில் உள்ள அனைத்து பழங்குடியினரின் வழிபாடாகவும் இருந்திருக்கிறது. எனவே பாம்பை நல்ல பாம்பு என்று போற்றுவதிலும் வியப்பில்லை.

புனித பசு, நல்ல பாம்பு பொருள் புரிகிறதா ?

said...

நல்வரவு செந்தழல்.

said...

//இது "நல்ல" பதிவு... :))))
(இது நிஜமாலுமே நல்ல பதிவுங்க.. "நல்ல பாம்பு", "நல்ல அடி" மாதிரி இல்லை....)//

பின்னூட்டம் போட்டு அதற்கு ஒரு உள்குத்து விளக்கம் வேறா?
நீங்க நல்ல நல்லவர்.:-))

said...

யோகன்,நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று படித்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.

said...

ஜாலி,

ஒரு பெண்: நேத்து எங்க மாமியாரை கடிச்சது "நல்ல" பாம்பு...

அவர் தோழி:இல்லையே கட்டு விரியன் பாம்புனு சொன்னாங்களே?
அந்த பெண்: எங்க மாமியாரை கடிச்சா அது "நல்ல" பாம்பு தான்!

சும்மா ஒரு "நல்ல" தமாசு சொன்னேன்!

ரொம்ப கஷ்டப்படாம இழுத்துக்கிட்டு இல்லாம செத்தா அதை நல்ல சாவு என்பார்கள் கிராமத்தில், அதே போல நல்லப்பாம்பு கடிச்சாலும் பொட்டுனு ஆள் போய்வான்ல அதான் நல்ல பாம்பு! சொல்றாங்க

said...

கோவியாரே,
பாம்பு,பசு,யானை,எலி,சிங்கம்,புலி இப்படி எல்லாவற்றையுமே புனிதமாக கருதி மனிதனை புனிதமற்றவனாக ஆக்கிய கொடுமை நன்றாகவே புரிகிறது.

said...

//ஒரு பெண்: நேத்து எங்க மாமியாரை கடிச்சது "நல்ல" பாம்பு...

அவர் தோழி:இல்லையே கட்டு விரியன் பாம்புனு சொன்னாங்களே?
அந்த பெண்: எங்க மாமியாரை கடிச்சா அது "நல்ல" பாம்பு தான்!//

வவ்வால் நல்ல ஜோக்.கடைசில "நல்ல" என்பதற்கு அர்த்தமே மாறிடும் போல!
ஏற்கெனவே வடிவேலு பாதி மாத்தி வச்சுருக்காரு.

said...

சிறப்பான பதிவு. என்ன ஐயா, "நல்ல" என்கிற வார்த்தையையே சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டீர்கள்.

இன்னொரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். சரியா என்று அறிந்து சொல்வீர்களா? சமையல் செய்யாத இயற்கையான சைவ உணவினை மட்டுமே உண்ணும் உயிரினங்களை நல்ல பாம்பு கொத்துவதில்லை; வீட்டுப் பிராணிகளைக் கூட (பசு போன்றவற்றை) நாம் பழைய சோறு வரை சாப்பிட வைத்து விட்டதால் தான் அவை பாம்புக் கடிக்கு உள்ளாகின்றன; காட்டில் எந்த மாட்டினையும் பாம்பு கொத்துவதில்லை என்பது சரியான தகவலா?

RATHNESH

said...

வாங்க ரத்னேஷ்,உங்களுடைய பல பதிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தன.ஆனால் பின்னூட்டம் போட தெரியவில்லை.எப்படி என்று சொல்லுங்கள்,முடிந்தால் பின்னூட்டப் பெட்டியை நார்மலாக வைத்தால் நன்றாக இருக்கும்.

நீங்கள் சொல்லும் தகவல் தவறாகவே எனக்குத் தோன்றுகிறது.விசாரித்து சொல்கிறேன்.

said...

"தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் இதற்கேது ஈடு
பூப்போல வைத்துன்னைக் காப்பதென் பாடு"

said...

//சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு//

ஓகை அண்ணா அவர்களே வருக,வருக.

பசு மாடு வளர்க்க வசதி உள்ளவன் பசுவை வளர்க்கிறான்,பன்றி வளர்க்க வசதி உள்ளவன் பன்றியை வளர்க்கிறான்.இருவருமே சம்சாரிகள் தான்.இதில் தான் வளர்ப்பது தான் உயர்வானது என்று ஒருவன் சொல்லும் போது சண்டை ஆரம்பமாகி விடுகிறது.தான் நம்புவது தான் சரியானது என்பதை நிரூபிக்க சம்பந்தப்பட்ட மிருகத்தின் சிறுநீரைக் கூட குடிக்க முற்படுவது அபத்தத்தின் உச்சம்.

said...

//பசு மாடு வளர்க்க வசதி உள்ளவன் பசுவை வளர்க்கிறான்,பன்றி வளர்க்க வசதி உள்ளவன் பன்றியை வளர்க்கிறான்.இருவருமே சம்சாரிகள் தான்.இதில் தான் வளர்ப்பது தான் உயர்வானது என்று ஒருவன் சொல்லும் போது சண்டை ஆரம்பமாகி விடுகிறது.தான் நம்புவது தான் சரியானது என்பதை நிரூபிக்க சம்பந்தப்பட்ட மிருகத்தின் சிறுநீரைக் கூட குடிக்க முற்படுவது அபத்தத்தின் உச்சம்.//

பதிவை விடவும் விஞ்சிய பஞ்ச்சுகள் பின்னூட்டத்தில் வருவதற்கு சரியான உதாரணம் இந்த பதில். நன்று.

said...

பாராட்டுக்கும்,பின்னூட்டப்பெட்டி மாற்றத்திற்கும் நன்றி ரத்னேஷ்.

said...

//
ஜாலிஜம்பர் said...

//இது "நல்ல" பதிவு... :))))
(இது நிஜமாலுமே நல்ல பதிவுங்க.. "நல்ல பாம்பு", "நல்ல அடி" மாதிரி இல்லை....)//

பின்னூட்டம் போட்டு அதற்கு ஒரு உள்குத்து விளக்கம் வேறா?
நீங்க நல்ல நல்லவர்.:-))
//
நானும் ரத்னேஷ் சொன்னது போல "சிறப்பான" பதிவு ன்னு சொல்லிருக்கலாமோ.... :)

said...

ஜெகதீசன் உங்கள் பாராட்டு நன்னன் அய்யா அவர்களைத் தான் சேரும்.வருகைக்கு மிக்க நன்றி.

said...

//சமையல் செய்யாத இயற்கையான சைவ உணவினை மட்டுமே உண்ணும் உயிரினங்களை நல்ல பாம்பு கொத்துவதில்லை; வீட்டுப் பிராணிகளைக் கூட (பசு போன்றவற்றை) நாம் பழைய சோறு வரை சாப்பிட வைத்து விட்டதால் தான் அவை பாம்புக் கடிக்கு உள்ளாகின்றன; காட்டில் எந்த மாட்டினையும் பாம்பு கொத்துவதில்லை என்பது சரியான தகவலா?

RATHNESH//

நிச்சயமாக இது தவறான தகவல் தான் என்று உயிரியல் பேராசிரியரான தருமி அய்யா தெரிவித்துள்ளார்.

said...

//பசு மாடு வளர்க்க வசதி உள்ளவன் பசுவை வளர்க்கிறான்,பன்றி வளர்க்க வசதி உள்ளவன் பன்றியை வளர்க்கிறான்.இருவருமே சம்சாரிகள் தான்.இதில் தான் வளர்ப்பது தான் உயர்வானது என்று ஒருவன் சொல்லும் போது சண்டை ஆரம்பமாகி விடுகிறது.தான் நம்புவது தான் சரியானது என்பதை நிரூபிக்க சம்பந்தப்பட்ட மிருகத்தின் சிறுநீரைக் கூட குடிக்க முற்படுவது அபத்தத்தின் உச்சம்.//

தாய்ப்பாலுக்கு மாற்றாக பலகாலமாக பசும்பாலைத் தான் மக்கள் பயன்படுத்தினார்கள். பசுவும் தன் கன்றுக்கு தேவையானதை விடவும் ஏராளமான உபரிப் பாலைத் தரவல்லது. தாய்க்கு அடுத்தபடியாக கருதக் கூடிய ஒரே விலங்கு என்பதால் பசு போற்றுதலுக்குரியதாகிறது. இவ்வுண்மை நீங்கள் அறியாததல்ல.

வேறு பதிவில் சந்திப்போம்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்