கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, June 23, 2007

உலகின் கடிமன்னன் யார்?

NATONAL GEOGRAPHIC சேனலில் பார்த்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.அனைத்து மிருகங்களிலும் கடிக்கும் திறன் அதிகம் உள்ள மிருகம் எது என்பதை அவர்களுக்கே உரிய தொழில்நுட்ப கருவிகளோடு விளக்கினர்.

அவர்கள் தேர்ந்தெடுத்த மிருகங்கள் , நாய்,சிங்கம்,மனிதன்,கழுதைப்புலி,சுறாமீன்,ஆமை,
முதலை,காட்டுநாய் முதலியவை ஆகும்.

இதன் முடிவுகள் நாம் நினைப்பதற்கு மாறாக உள்ளது.
இதில் கடைசியில் இருப்பது மனிதன்.கடிதிறனை பவுண்டுகளில் சொல்கிறார்கள்.

மனிதன்-127
காட்டுநாய்-317
வீட்டுநாய்-327
சுறாமீன்-660
சிங்கம்-691
கழுதைப்புலி-1000
ஆமை-1004
முதலை-2500

இதில் சிங்கத்தை விட கழுதைப்புலி (HYENA) பயங்கரமாக கடிக்கிறது.அதை விட ஆச்சரியம் ஆமை தான்.அந்த ஆமையின் எடை வெறும் 43 கிலோ தான்.ஆனால் இப்படி ஒரு சக்தியை வெளிப்படுத்த எப்படி முடிகிறது என்று தெரியவில்லை.

முதலையிடம் சிக்கினால் நம்மை பீஸ் புரோட்டாவாக ஆக்கி தின்று விடும் என்பது நமது உள்ளுணர்வுக்கு தெரியும்,அதனால் அதன் அருகில் செல்லத் துணிய மாட்டோம்.

ஆனால் ஆமை தானே என்று அலட்சியமாக நடந்து கொண்டால் கையை,காலை காவு கொடுக்க நேரிடும் என்று எச்சரிப்பதே இப்பதிவின் நோக்கம்.

4 comments:

said...

//ஆமை தானே என்று அலட்சியமாக நடந்து கொண்டால் கையை,காலை காவு கொடுக்க நேரிடும் //

என்னமோ உள்குத்துமாதிரி இருக்கே
என்னப்பா விஷயம்?

said...

அன்பு மகி,
போலியையும் நல்லவராக்கும் பொல்லாத போக்கிரிகள் உலாவரும் இணையமிது.

said...

//ஜாலிஜம்பர் said...
போலியையும் நல்லவராக்கும் பொல்லாத போக்கிரிகள் உலாவரும் இணையமிது.//

அங்கன மேல சொல்லிருக்குற அத்தனையையும் தூக்கிச் சாப்பிட்டிருச்சு இந்தக் கடி..

said...

வாங்க உண்மைத்தமிழன்,உலக மிருகங்களிலேயே கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஜந்து ஒன்றை நல்லபாம்பு என்று அழைக்கும் பெருந்தன்மை நமது தமிழர்களுக்கு மட்டுமே உண்டு.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்