கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, June 16, 2007

கேளுங்கள் தரப்படும்?

பகுத்தறிவாளனின் ஒரு பதிவில் நான் கேட்ட ஒரு கேள்வியும் அவர் அளித்த பதிலும் கீழே உள்ளது.



கேள்வி:

கர்த்தரின் கருணை யேசுவுக்கு மட்டுமா?எல்லோருக்குமா?இறந்து போன என் பாட்டியை திரும்பக் கேட்டு கதவைத் தட்டினால் காரியம் நடக்குமா?



பகுத்தறிவாளனின் பதில்:

நல்ல ஓர் கேள்வி.ஜாலி ஜாம்பர், நான் இங்கே கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்யவரவில்லை.நன்றாக பதிவுக் கருத்தை கவனிக்கவும். பைபிளில் இருக்கும் ஒரு கருத்தை இல்லை என தனது 53 வருட பில்டப்பின் மூலம் சாதித்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் ஒருவருக்காக கொடுக்கப்பட்ட பதில் இது.நீங்கள் உடனடியாக ஒரு பாதிரியாரை சந்தித்து உங்கள் கேள்வியைக் கேட்கலாம்.எனினும் ஒரு முஸ்லிமாக இதற்கு என் பதில்,கண்டிப்பாக கர்த்தர் கேட்டதை கொடுப்பார்; தாராளமாக கேளுங்கள். கேட்பதில் உங்களுக்கு சோர்வு மட்டும் வந்து விடவேண்டாம்.



ஒரு முஸ்லிமாக இன்னொரு மதக் கடவுளை ஏற்றுக்கொண்டதற்கு நிச்சயமாக அவர் பாராட்டுக்குரியவர்.



ஆனால் அவர் அளித்துள்ள பதில் அறிவு பூர்வமாக ஏற்க முடியாததாக உள்ளது.சென்ற வாரம் கோவையில் நடந்த ஒரு சம்பவமே இதற்கு சரியான உதாரணம்.



இறந்து போன தன் சகோதரனின் பிணத்தை வைத்து கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக கர்த்தரிடம் பிரார்த்தனை செய்துள்ளார் ஒருவர்.இதை காவல்துறை கண்டுபிடித்து சென்று பார்த்த போது ஒரு குடும்பமே பிணத்தை சுற்றி அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்து உள்ளது.பிணம் எலும்புக்கூடாக இருந்துள்ளது.



பிரார்த்தனை செய்த சகோதரர் மேல் மத நம்பிக்கைகளை கேவலப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளது காவல்துறை.

பகுத்தறிவாளன் போன்றவர்கள் தெரிந்தே செய்யும் பிரச்சாரத்தால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் தான்.

3 comments:

said...

படிப்பு,அறிவு என்பதெல்லாம் எதற்காக?
இலை தளைகளை அணிந்த மனிதன் தன் உடைகளை மாற்றிக் கொள்வதில் எந்தத் தயக்கமும் காண்பிப்பதில்லை.உணவிலும் உடையிலும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் உள்ளங்களைப் பாருங்கள்.
பிற்க்கும் குழந்த்தையை எந்த நாட்டிலே யாரிடம் விட்டு வளர்க்கிறோமோ அந்த நாட்டு,அந்த மதம்.அந்த இயல்புகள் இதுதான் வாழ்க்கை.
மதம்,மதம் என்று மதம் பிடித்து அலையும் மனிதர்கள் சிந்திக்க...

1.மதத்திற்காக மனிதர்களா?மனிதர்களுக்காக மத்ங்களா?
2.மத்த் தருமங்களை மதித்துப் பரப்பும் மதத்தலைவர்கள் இன்றைய கால வச்திகளுடன் வாழ்கிறார்களா இல்லை வறுமையிலே வாடி,காலால் நடந்து,உடலால் உழைத்து,உணவிலே வெறுத்து ஏழை பங்காளர்களாக வாழ்கிறார்களா?
3.மதங்களால்,மதவெறியால் மடியும் உயிர்களை எந்த இறைவன் சாகச் சொன்னான்?
4.கோவில்,மசூதி,சர்ச்சு என்று கட்டித் தள்வதை இறைவன் கணக்கெடுக்கின்றானா?
5.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல் நீர பிற'
என்பதைவிட வேறு வாக்கு வேண்டுமா?

said...

வருகைக்கு நன்றி தமிழன்.நாம் எழுப்பும் குரல் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் யாராவது ஒருவரை எழுப்பும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

Anonymous said...

//பிரார்த்தனை செய்த சகோதரர் மேல் மத நம்பிக்கைகளை கேவலப்படுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளது காவல்துறை.//

என்ன ஒரு முரண்பாடு?மத நம்பிக்கையை மதிக்காமல் செயல்பட்டுள்ளது காவல்துறை தான்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்