கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Sunday, June 10, 2007

பேய்கள்-ஒரு திறனாய்வு

கடவுள் இல்லையென்று கறாராக மறுத்துக் கூற முடியும் என்னால் பேய்கள் இல்லையென்று கூற முடியுமா? முடியாது.பேய் பயம் என்னைப் பிடித்து ஆட்டுகிறது.நடுஇரவு சுடுகாட்டுக்கோ,பிணவறைக்கோ என்னால் போக முடியாது.பேய் இல்லையென்று நிச்சயமாகச் சொன்னால் நடுஇரவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிய வேண்டும்.அது முடியாத போது பேய் இருக்கிறதென்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.என்னுடைய இந்த சிந்தனைகளை ஊக்குவிப்பது போல்,கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்பதைப் பற்றியெல்லாம் எதுவும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாத NATIONAL GEOGRAPHIC,DISCOVERY CHANNEL போன்றவை பேய் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் ஒரு மனிதரின் அனுபவமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்ட்.நாத்திகர்.அவர் ஒருமுறை ஒருவரை சந்தித்ததாகவும் அவர் ஒரு 20 அடி தூரம் தள்ளி நின்று இவருடைய கையிலிருந்த புத்தகத்திலுள்ள வரிகளை அப்படியே வாசித்ததாகவும் அது சில அமானுஷ்ய சக்திகளால் தான் முடிந்தது என்று அவர் கூறுவதாகவும் இந்த கம்யூனிஸ்ட் நண்பர் கூறி வியந்து போனார்.அவர் 60 வயது நிரம்பிய நல்ல மனிதர்.அவருடைய கூற்றைப் புறந்தள்ள என்னால் முடியவில்லை.

ஆகவே நண்பர்களே பேய் பற்றிய தெளிவான ஒரு சிந்தனையை எனக்கு வழங்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

9 comments:

Anonymous said...

There are lot of ghosts writting posts here, wait for them to provide you some info

said...

பேய்கள் நாடாண்டால் பினம் தின்னுமாம்.

முன்பு பேய்கள் நாட்டை ஆட்டிப்படைத்தன். தற்பொழுது கழுகுகள் அதை செய்து வருகின்றன.

http://govikannan.blogspot.com/2006/06/blog-post_13.html> முன்பு பேய் பயம் குறித்து எழுதி இருக்கிறேன்

said...

கோவியாரே உன்கள் பதிவு பல விளக்கங்களை எனக்கு கொடுத்துள்ளது.எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் என்னிடம் 'நேற்று இரவு அய்யா என்னை அடித்து விட்டார்'என்று கூறினார்.அய்யா என்றால் முனி என்று விளக்கம் சொன்னார்.ஆனால் அந்த முனி ஒரு வவ்வாலாகவோ,ஒரு பூனையாகவோ,அல்லது நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பலகையாகவோ இருக்கலாம் என்று இப்போது புரிகிறது.
மிக்க நன்றி.

said...

ஜாஜா,
பட்டுக்கோட்டையார் சொன்னது போல் 'சின்ன வயதிலே சொல்லி வச்சாங்களே' அதைவிட்டு நம்மால் வெளிவர முடியவில்லை என்பதுதான் உண்மையென நினைக்கிறேன். எல்லா நாட்டிலும், எல்லா மதத்திலும் இந்த நம்பிக்கைகள் இருப்பதோடு கட்டிக் காப்பாற்றப் படுவதாலும், சிறுவயதிலேயே இவைகள் நமக்குப் புகட்டப் படுவதலேயே நம்மால் இந்த விஷயங்களோடு தொடர்புள்ள அச்சங்களைத் தவிர்க்க முடிவதில்லை என்று நினைக்கிறேன்.

Anonymous said...

//அய்யா என்றால் முனி என்று விளக்கம் சொன்னார்.//

அடப்பாவி,தமிழர் தந்தையை இப்படி சொல்வதா?அதுசரி,கடவுள் இருக்கிறரோ இல்லையோ,ஆனால் பேய்,பூதம் கண்டிப்பா இருக்குங்க.மஞ்ச துண்டு,அழகிரி ,அதைத் தவிர இவங்களுக்கு பூத ஏஜென்ட், இவங்களெல்லாம் இருக்காங்களே.

said...

தருமி ஐயா,பயத்திற்கு காரணம் பேயா அல்லது இருட்டா என்று குழப்பமாக உள்ளது.நடு இரவில் சுடுகாட்டுக்கு செல்லமுடியாது அதே நேரம் மீனாட்சி அம்மன் கோவில் சன்னதிக்குள் தனியாக செல்ல முடியுமா என்பதும் சந்தேகம் தான்.

பூதப்பாண்டி said...

//ஆனால் பேய்,பூதம் கண்டிப்பா இருக்குங்க//

பேய் இருக்கிறதோ இல்லையோ பூதம் கண்டிப்பாக இருக்கிறது.தமிழ்நாட்டைக் காவல் காக்கும் பெண்பூதம் தான் அதற்கு சாட்சி.

Anonymous said...

//தமிழ்நாட்டைக் காவல் காக்கும் பெண்பூதம் தான் அதற்கு சாட்சி.//

நீங்க யாரைச் சொல்றீங்க?போலிஸ் அம்மா லத்திகா சரண் அவங்களை சொல்றீங்களா?பாத்தா பல நாள் பட்டினி கிடந்த பூதம் மாறி இருக்காங்க.பாவங்க அந்த பூதம்.

பூதப்பாண்டி said...

தமிழ்நாட்டைக் காவு கேட்கும் பூதம் என்று திருத்தி வாசிக்கவும் அனானி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்