கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, June 6, 2007

எம்.ஜி.ஆர் ஏன் விலகினார்?


அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் தலைமையில் மதுரையில் நடக்கும் மாநில மாநாட்டுக்கு
எம்.ஜி.ஆர் தனது காதலி ஒருவரை மாநாட்டு மேடையில் அமர வைக்க கலைஞரிடம் வேண்டுகிறார்.கலைஞரோ அக்காதலி யாரென தெரிந்து அதிர்ந்து போய் இது நமது இயக்கத்துக்கு விரோதமான செயலாக அல்லவா அமைந்து விடும் என்று எடுத்துக் கூறுகிறார்.காதலியின் மீதுள்ள மோகத்தில் எம்.ஜி.ஆர் விடாப்பிடியாக இருக்கவே,மாநாட்டுத் தலைவரான மதுரை முத்துவிடமே
போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.மதுரை முத்துவோ அப்பெண்மணியை அழைத்துக் கொண்டு மதுரை வந்தால்
ஊர் எல்லையிலேயே உங்களை திருப்பி அனுப்பி விடுவேன் என்று எச்சரிக்க வேறு வழியில்லாமல் எம்ஜிஆர் தனது காதலிக்கு
மாநாட்டு மேடையிலும் , திமுக விலும் இடம் பிடிக்கும் முயற்சியைக் கைவிடுகிறார்.

எம்ஜிஆர் திமுக வை விட்டு விலகியதற்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்பதை விட முக்கியகாரணமே இது மட்டும் தான் என்பது தான் உண்மை.

அதற்குப்பின் பல கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறிய எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து,ஆட்சியைப் பிடித்து,அதே மதுரையில் நடக்கும் உலகத்தமிழ் மாநாட்டில் தன் காதலியை ஆடவிட்டு ரசித்ததும் வரலாறு.

எம்ஜிஆர் என்ற இழிதகையின் அந்த அடாத செயலால் , துரோகத்தால் எந்த ஆதிக்கசக்திகளை ஒடுக்க போராடினார்களோ,அதே
ஆதிக்க சாதியில் இருந்து ஒரு பெண்மணி ,திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய கட்சிக்குத் தலைவராகி இந்தத் தமிழ்நாட்டையும்
இரண்டு முறை ஆண்டதை நம்மைப் பீடித்த சனி என்று சொல்லித்தான் ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்.

20 comments:

said...

தலைவா போட்டு தாக்கு ஒங்குதிரைக்கு கூட பதிவு போட்டு இந்த தமிழ்மானத்தை காப்பாத்து

said...

ரிலாக்ஸ்... ரொம்ப கோபப் படாதீங்க.

//துரோகத்தால் எந்த ஆதிக்கசக்திகளை ஒடுக்க போராடினார்களோ,அதே
ஆதிக்க சாதியில் இருந்து ஒரு பெண்மணி ,திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய கட்சிக்குத் தலைவராகி//

இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை. போற போக்கைப் பார்த்தா இனிமே எல்லா அரசியல் கட்சிகளும் கொள்கையின் அடிப்படியிலேயே நடக்க வேண்டும்னு சொல்லுவீங்க போல இருக்கே.

said...

நந்தா!

உங்களுக்கு அரசியலின் அரிச்சுவடியாவது தெரியுமா? தெரியாதா?

பட இடங்களில் நீங்கள் போடும் பின்னூட்டங்களைப் பார்த்தால் உண்மைத்தமிழனின் தரத்தில் தான் இருக்கிறது :(

said...

வருகைக்கு நன்றி மகீ.

நந்தா ,சரி கோபப்படவில்லை.கண்ணதாசனுக்கும்,பட்டுக்கோட்டைக்கும் வாயசைத்த எம்ஜிஆரையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதில் ஜெயாவும் நாடாள்வதை ஜீரணிக்க முடியவில்லை.

ஜெயாவுக்கு என்னவிதமான அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்.

said...

வாங்க லக்கி பாஸ்.தவறை சுட்டியமைக்கு நன்றி.

said...

என்ன சொல்றீங்க எனக்குப் புரியலை.

கொள்கை ரீதியா அரசியல்கட்சிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று சொல்கிறீர்களா?

கலைஞரோ, அம்மாவோ நல்ல விஷயத்தை யார் செய்தாலும் பாராட்டுவதும், அவர்களே தவறு செய்யும் போது அதற்கு தார்மீக எதிர்ப்பு காட்டுவதும் கூடாது என்கிறீர்களா? என்ன பண்றது சார். நான் தீவிர உடன் பிறப்போ அல்லது அம்மாவின் காலில் விழுந்து வணங்கி புண்ணியம் தேட நினைக்கும் சுய மரியாதை அற்றவனோ இல்லை.

ஆதிக்க சாதியினரையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடிய ஒரு இயக்கத்தின் தலைவரின் பெயரில் கட்சி நடத்தும் ஒருவர் அந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதை மக்கள் கொஞ்சம் கூட மதிக்க வில்லை. இவர்களுக்குப் போய் இதைச் சொல்கிறீர்களே ஜாலி ஜம்பர் என்பதை தான் நான் நக்கலாகச் சொன்னேன்.

//பல இடங்களில் நீங்கள் போடும் பின்னூட்டங்களைப் பார்த்தால் //

என்னாலும் ஒரு அனானியாக வந்து எதாவது பேசி விட்டுப் போயிருந்திருக்க முடியும் லக்கி. ஒரு நல்ல பகிர்தலை வேண்டியே என்னை மறைத்துக் கொள்ளாமல் உங்களுடன் விவாதத்தில் இறங்கினேன். நடு நிலைமையுள்ள யாராவது சொல்லட்டும் எனது கேள்விகள் கேனைத்தனமானது என்று.

இதுல ஏங்க சம்பந்தமில்லாமல் உ.த வை இழுக்கிறீங்க? அவருடைய தரத்தை நிர்ணயம் செய்ய நீங்காள் யார்?

said...

//ஜெயாவுக்கு என்னவிதமான அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன என்று நீங்களே எண்ணிப்பாருங்கள். //

நான் கூற வந்தது தவறாக புரிந்துக் கொள்ளப் பட்டது ஜாலி ஜம்பர்.

//எல்லா அரசியல் கட்சிகளும் கொள்கையின் அடிப்படியிலேயே நடக்க வேண்டும்னு சொல்லுவீங்க போல இருக்கே.//

இதற்கு அர்த்தம் இப்படி எதிர் பார்ப்பது தவறு என்பதல்ல. மக்கள் இப்படி எதிர் பார்ப்பற்று மந்தைகளாகவே இருக்கிறார்கள் என்பதை அப்படி சொல்ல வந்தேன். இதை ஒரு நக்கலாக கருதிப் பார்ப்பீர்கள் என்று எண்ணினேன். ஒரு வேளை நான் தான் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வாக்கிய அமைப்பை மாற்றி விட்டேனோ? அப்படியாயின் மன்னிக்க. அதுக்காக லக்கி சொன்னது கொஞ்சம் ஓவராக எனக்குத் தோன்றியது.

Anonymous said...

I feel that it is too late to post this information. Much water has flown under the bridge. The beneficiary has amassed enormous wealth and even the government of India cannot shake her. A jungle mass is ready to take care of her.

Anonymous said...

உண்மை தமிழன் கெடக்கான் கொசகெட்ட பய புள்ள. கலஞர் குடும்பத்திலே எத்தன பேர் இருந்தா இவனுக்கு எங்க பொத்துகிட்டு வடியுது!

said...

நந்தா!

உங்கள் பின்னூட்டங்கள் உண்மைத்தமிழனின் தரத்தில் இருப்பதாக சொன்னேனே தவிர "கேணைத்தனமாக" என்ற வார்த்தையை எங்கே பயன்படுத்தியிருக்கிறேன்.

//நடு நிலைமையுள்ள யாராவது சொல்லட்டும் எனது கேள்விகள் கேனைத்தனமானது என்று.

இதுல ஏங்க சம்பந்தமில்லாமல் உ.த வை இழுக்கிறீங்க? அவருடைய தரத்தை நிர்ணயம் செய்ய நீங்காள் யார்?
//

நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் உண்மைத்தமிழனின் தரம் கேணைத்தனமாக இருக்கிறது என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்?

தரநிர்ணயம் செய்ய நான் ஐ.எஸ்.ஐ. அதிகாரி அல்ல.


யப்பா.... இந்த நடுநிலை நாயகங்க தொல்லை தாங்கமுடியலடா கோவிந்தா.....

said...

நந்தா ,உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்குப் பிறகு தான் முதல் பின்னூட்டம் புரிந்துகொள்ளப்படுகிறது.

Anonymous said...

ஜாலிஜம்பர்,

ரொம்ப சவுண்ட் உடாதீங்க.அண்ணாவின் இதயக்கனியையா இப்படி கேவலமா பேசறீங்க.இது அண்ணாவையே அவமானப்படுத்துவது போலானது.இப்படி கேவலமா மஞ்ச துண்டுக்கு ஜால்ரா போடறீங்களே?உங்களுக்கு வெட்கமாக இல்லை?இந்தா மாதிரியாவது கோவிந்தா போட்டு பிரியாணி சாப்பிட்டு உடம்பை வளர்க்கணுமா?

said...

//The beneficiary has amassed enormous wealth and even the government of India cannot shake her.//

கஜபதி,ஜனநாயகத்தின் சாபக்கேடு என்று சொல்கிறார்களே அது இது தான்.ஆனால் ஜெ யைப் போன்ற மட்டமான அரசியல்வாதிகள் இங்கிலாந்து,அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் இருக்கிறார்களா?

said...

//நந்தா ,உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்குப் பிறகு தான் முதல் பின்னூட்டம் புரிந்துகொள்ளப்படுகிறது. //

இது எனது தவறுதான். தலையைச் சுற்றி மூக்கைத் தொட நினைத்ததால வந்த வினை இது.

//யப்பா.... இந்த நடுநிலை நாயகங்க தொல்லை தாங்கமுடியலடா கோவிந்தா..... //

என்ன பண்றாது லக்கி, கலைஞரோ, அம்மாவோ, அவர்கள் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவனாய் இருப்பதை விட நடு நிலை நாயகமாய் இருப்பதில் தவறில்லை.

Anonymous said...

The original problem is Karunanidhi and MGR sharing......


Karunanidhi's 3 offcial + not enough and MGR keeping everything unauthorized. also captured some of karunanidhi so thats why MGR asked Karunanidhi KEEPS list he did not show to MGR so he went out....


Thanks for giving original reasons...I will start writing soon about Karunanidhi's real life...

Once again thanks for making karunanidhi daaaaaaaaaaaaarrrrrrr in Blogs

Anonymous said...

ஆரம்பமாகி விட்டது அனானிகளின் அற்புத வேலைகள்.

said...

இந்த பதிவை வன்மையாக நான் கண்டனம் செய்கிறேன்.

said...

வாங்க சதுர்வேதி,உங்களது நாகரீகமான பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.மேலே உள்ள அனானிகள் இவரைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.

said...

சேற்றிலே கூட செந்தாமரைகள் முளைக்கலாம்.ஆனால் செந்தாமரையல்ல அது வெறும் நடிப்புத்தான்,உண்மையில் சேறுதான் என்று வாரி வீசிக்கொண்டிருப்பதை என்ன சொல்வது?
சேற்றிலே உழன்றவர்கள் வரிசையாக நின்றால் முகத்தையும் காட்ட முடியாதே!
சேற்றிற்கும் சந்தணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பூசிக் கொள்பவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் உண்டாகிறது.பணமும்,பதவிகளும் சரித்திரத்தை மாற்றிவிடாது என்பதை விரைவில் உணர்ந்தால் சரி.

said...

நன்றி தமிழன்.எந்தவித சிறப்புத் திறமையும் இல்லாத எம்ஜிஆர் அரசியல்வாதிகளுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அரசியல் செய்யக் கற்றுக்கொண்டது தமிழர்களின் துரதிர்ஷ்டம்

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்