கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, April 19, 2008

என் கன்னத்தில் அடி.உனக்கு மூன்று ரூபாய் தருகிறேன்.

இரா.அசோகன்,கோப்பெருந்தேவி,மல்லிகைமன்னன் இன்னும் ஒரு இரண்டு,மூன்று பேர்,இவர்கள் தாம் தினமலர் இது உங்கள் இடம் பகுதியில் தொடர்ந்து எழுதுபவர்கள்.அதன் வாசகர்களில் 90% பேர் பிராமணர் அல்லாதவர்களாகவே இருப்பார்கள்.அவர்களிடம் பிழைப்பு நடத்திக் கொண்டு அவர்கள் வாயிலேயே வாழைப்பழத்தை திணிக்கும் திறமைக்காக தினமலரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தினமலரின் இணையப்பதிப்பில் பின்னூட்ட வசதி செய்யப்பட்டுள்ளது.வழக்கம் போல் அம்பியர் கும்மி அருமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்தியாவிலேயே 27% இடஒதுக்கீடு பற்றிப் பேசுகிற ,போராடுகிற தலைவர், கலைஞராகத்தான் இருக்கும் போல் தெரிகிறது.இது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் ஒரு தமிழனாக பெருமிதம் கொள்ளும் செய்தியாக இருக்கிறது.வடநாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாததே வேதனைக்கு காரணம்.க்ரீமி லேயர் பிரச்சினையில் வட இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளும் கலைஞரின் செயல்களையே முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புகின்றன.

க்ரீமி லேயர் பற்றிய கலைஞரின் கருத்தை தினமலர் இன்று வெளியிட்டுள்ளது.(http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=484&cls=row4)அதில் பின்னூட்டங்களை ஆங்கிலத்திலேயே வெள்ளைக்காரக்குஞ்சுகள் இட்டுள்ளனர்.கலைஞரை ஆதரித்து நான் ஒரு பின்னூட்டம் இட்டேன்.

"இடஒதுக்கீடு பிரச்சினையில் இந்தியாவிலேயே ஓங்கி ஒலிக்கும் குரல் கலைஞருடையது தான்.பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்றென்றும் கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பார்கள்"

இதை ஒரு பயங்கரமான பின்னூட்டமாக கருதி இன்னும் வெளியிடாமல் வைத்திருக்கின்றனர்.தினமலரையும் காசு கொடுத்து வாங்கி சவுக்கடி வாங்கும் மக்களை நினைத்தால் கூட பாவமாக இல்லை.அவர்களுக்காக கரடியாக கத்திக்கொண்டிருக்கும் கலைஞரை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

(தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?தமிழ்ப்பதிவுகளுக்கு இந்தியில் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள் என்று அனாதை ஆனந்தன் ஓரிடத்திலே குறிப்பிட்டிருந்தார்.தமிழ் செய்திக்கு ஆங்கிலத்திலே பின்னூட்டம் போடும் நாதாறிகளே,திருந்தவே மாட்டீர்களா?)

9 comments:

said...

//பின்னூட்டங்களை ஆங்கிலத்திலேயே வெள்ளைக்காரக்குஞ்சுகள் இட்டுள்ளனர்.//

//தமிழ் செய்திக்கு ஆங்கிலத்திலே பின்னூட்டம் போடும் நாதாறிகளே,திருந்தவே மாட்டீர்களா?//

அவர்களில் பலருக்கு இகலப்பை பற்றி தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். பின்னூட்டப் பெட்டியிலேயே தினமலர் யூனிகோட் தமிழை தட்டச்சிட ஏற்பாடு செய்யலாம்.

நானும் அங்கு சென்று இப்போதுதான் பின்னூட்டமிட்டேன், தமிழில்தான் என்பதையும் கூறவேண்டுமோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//தமிழ் செய்திக்கு ஆங்கிலத்திலே பின்னூட்டம் போடும் நாதாறிகளே,திருந்தவே மாட்டீர்களா?//

இது சூப்பர்

said...

ஐயா,
தினமலரை இணையம் வழியாக படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் அல்லது அதற்கான வழிமுறைத் தெரியாதவர்களாகவும் இருக்கலாம், சில பதிவுகளுக்கு நான் ஆங்கிலத்தில்/தமிங்கிலத்தில் பின்னூட்டயதுண்டு. அதற்காக நான் என்ன ஆங்கிலேயனா என்ன? அதற்கான வசதி இல்லாமல் கூட இருக்கலாம்.

அதே போல், தினமலருக்கென ஒரு தனி "சட்டம்" உண்டு அது கலைஞருக்கு எதிரானது. அவர் சோத்தை திங்கச் சொன்னார் என்பதற்காக தினமும் சப்பாத்தி மட்டுமே உண்ணும் கும்பல் அது, அதுகிட்டே போயி நியாயம் கேட்குறீங்களே :))

Anonymous said...

உனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதென்றால் தூக்கு போட்டு சாவுடா நாடார் ## ###

said...

டோண்டு அவர்களே வருகைக்கு நன்றி.கலைஞரை ஆதரித்து நிச்சயம் ஆயிரக்கணக்கில் பின்னூட்டம் வந்திருக்கும்.அதில் ஒன்றைக்கூடவா வெளியிடக்கூடாது?

ஆங்கிலப்பின்னூட்டம்,அதிலும் தனக்கு சார்பான பின்னூட்டங்களையே வெளியிடும் தினமலரின் பத்திரிக்கை தர்மம் காறித்துப்பும் படி உள்ளது.

அங்கே தமிழில் பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.

said...

//அதுகிட்டே போயி நியாயம் கேட்குறீங்களே :))//

வாங்க இளா,கல்லுப்பிள்ளையாரை முட்டுனா மண்டை தான் உடையும்னு சொல்றீங்க.அதுக்காக நம் முயற்சியைக் கைவிடக்கூடாது.

said...

//உனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதென்றால் தூக்கு போட்டு சாவுடா நாடார் ## ###//

தாம்பிராஸ் சங்கத்துக்கு நன்கொடை கேட்டு போறப்போ மட்டும் நாடார் இனிக்கிறாரா?

said...

அறிவுரை சொன்ன ஆங்கில அனானி,நன்றி.தவறுதலாக நீக்கி விட்டேன்.

said...

டோண்டு அவர்களே உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் தினமலரில் இட்டேன்.அது வெளியாகுமா என்று தெரியாததால் இங்கே இட்டுள்ளேன்.

"டோண்டு அவர்களே,
கலைஞர்,ராமதாஸ் வீட்டுப் பிள்ளைகள் பிற்படுத்தப்பட்டவர் லிஸ்டில் இருப்பதால் மட்டுமே சீட் கிடைத்து விடாது.குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இரண்டாவது அவர்கள் அங்கே படித்து தான் தங்களை வளப்படுத்திக்கொள்ளும் நிலையில் இல்லை.அவதூறு கிளப்பினாலும் அளவோடு கிளப்புங்கள்."

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்