கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, September 15, 2007

சன் டிவிக்கு சனி பிடித்து விட்டது.

காலையில் விழித்ததே கலைஞர் டிவியில் தான்.செய்திகள் 7.30 மணிக்கு வழங்குகின்றனர்.ஒலி,ஒளியின் தரம் சன் டிவிக்கு சமமாக உள்ளது.கலைஞர் பெயரை சொல்லும் இடங்களில் முதல்வர் கலைஞர் என்று குறிப்பிடுகின்றனர்.முதல்வர் கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிடுவதால் என்ன நட்டம் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை.

அடுத்து கமல் பேட்டி.அவரைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது .ஆர்ப்பாட்டமில்லாத அவருடைய பண்பினைப் பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியவில்லை.

அடுத்து இளையராஜாவின் நிகழ்ச்சி.பாடகர்கள் செய்யும் நுண்ணிய பிழைகளை சரியாகக் கண்டுபிடித்து அதை திருத்துகிறார்.ஒலகம் என்று பாடவேண்டியதை வொலகம் என்று பாடுகிறார் பாடகர்.அதை இளையராஜா, v என்று தொடங்காது,o என்று தொடங்கும் என்று திருத்துகிறார்.தமிழ் மொழியின் மீதும்,இசையின் மீதும் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு தான் அவரை வேறு மொழிகளில் இசையமைக்க விடாமல் தடுக்கிறது.

அடுத்து லியோனி வந்தார்.அண்ணாவின் பிறந்த நாளான இன்று அண்ணாவின் மேற்கோளுடன் தனது உரையைத் தொடங்கினார்.

மூவருமே விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் எல்லாம் சொல்லவில்லை.மொத்தத்தில் கலைஞர் டி.வி விநாயகர் சதுர்த்தியை கண்டுகொள்ளவில்லை.

கலைஞர் டி.வி மைக்டைசனைப் போல் களம் இறங்கியுள்ளது.சன் டி.விக்கு இனி போதாத காலம் தான்.

31 comments:

said...

ஜாலி.....சன் டீவி காலி அப்படின்னு சொல்லிறீங்க..

ஆனா, கலைஞ்சர் டீவி ஆரம்பிச்ச மாதிரி..இன்னும் என்ன என்னவெல்லாம் ஆரம்பிப்பாங்க..

மக்களூக்காக ஏதும் செய்யலையின்னாலும், அவர் குடும்பத்துக்காவது செய்கிறாரே அதையாச்சும் சொல்லுங்க.. :))))

Anonymous said...

sun tv la ippallam athigama captan news varugirathe gavanithira...

said...

ரொம்ப புகழாதீங்க..சளி பிடிச்சிடப்போகுது... கலைஞர் டிவியில் வரும் விளம்பரங்களில் எல்லாம் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Anonymous said...

LP‹R 12-‹ÚR‡ S·¸W«¥ H¼TyP ÚUÖR¥ ÙRÖPŸTÖL YzÚY¨ÛY ÚTÖ§Í ŒÛXV†‰eh AÛZ†‰Y‹‰ «NÖWÛQ SP†‡]Ÿ. «£L•TÖeL• ÚTÖ§Í CÁÍÙTePŸ AZÚLNÁ AY¡P• rUÖŸ 3 U‚ÚSW• «NÖWÛQ SP†‡]ÖŸ. ÚS¼¿YÛW AYŸ C‹R YZeÛL «NÖ¡†‰ Y‹RÖŸ. C‹ŒÛX›¥ ÚS¼¿ CW° AYŸ ‡{ÙW] ÚTÖ§Í Ly|TÖy| AÛ\eh CP• UÖ¼\• ÙNšVTy|·[ÖŸ.

said...

//மக்களூக்காக ஏதும் செய்யலையின்னாலும், அவர் குடும்பத்துக்காவது செய்கிறாரே அதையாச்சும் சொல்லுங்க.. :))))//

டிபிசிடி இது நியாயமா?:-)))

said...

//sun tv la ippallam athigama captan news varugirathe gavanithira...//

ஆமாமா,ரொம்ப நடுநிலைமையா இருக்காங்க.

இன்னொரு ஜோக்.கலைஞர் டிவியில கேப்டன்ங்கிற வார்த்தைய சொல்ல மாட்டாங்க போல.அணித்தலைவர் அப்படின்னு சொல்றாங்க.:-)))

said...

//ரொம்ப புகழாதீங்க..சளி பிடிச்சிடப்போகுது... கலைஞர் டிவியில் வரும் விளம்பரங்களில் எல்லாம் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.//

வாங்க சிந்தாநதி.கடவுளை வாழ்த்துவதுமில்லை.வாழ்த்துவதை தடுப்பதுவும் இல்லை.

Anonymous said...

thannuduaiya rowdimaganukkaga.namadhu mathiyamanthiri,migavum thudippana,thiramaiyana,oruilaignanaiye kaliseidhavarallva kalaignar.

said...

//namadhu mathiyamanthiri//

புல்லரிக்குது அனானி.

Anonymous said...

"சன் டிவிக்கு சனி பிடித்து விட்டது"

அப்டி எல்லாம் ஸொல்லப்படாது.

வலைப்பூ ஓடுகாலிகள் சங்கம் சார்பாக
வன்மையாக கண்டிக்கிறோம்.

Anonymous said...

Athu Olagam illa. Ulagam. Neenkaluma Ilayaraja pola...??????

said...

//வலைப்பூ ஓடுகாலிகள் சங்கம்//

என்னாது இது,புதுசா இருக்கு.

said...

//Athu Olagam illa. Ulagam. //

நாட்டுப்புறப் பாடல்களை பேச்சு வழக்கிலே பாடுவது தான் முறை.

said...

//தமிழ் மொழியின் மீதும்,இசையின் மீதும் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு தான் அவரை வேறு மொழிகளில் இசையமைக்க விடாமல் தடுக்கிறது//

இதெல்லாம் சும்மா கத. மாற்றுமொழிப் படங்கள் பலதுக்கு இசை அமைத்திருக்கிறார்.

ரஹ்மான் அளவுக்கு இந்தியில் பிரகாசிக்காததர்க்கு வேறு பல காரணங்கள் இருக்கு.

-ராசா ரசிகன்
:)

said...

I am still wondering when will these mean politicians will have have a long term thinking for the people...of this country (not of their fmaily)..:-)

At times its really painful to see these...petty poloticians and their politics.

Anonymous said...

ஆனா கலைஞர் (டிவி) உடைய ரம்ஜான் வாழ்த்து உண்டுதானே?

-கரீம்பாய்

said...

//
மூவருமே விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் எல்லாம் சொல்லவில்லை.மொத்தத்தில் கலைஞர் டி.வி விநாயகர் சதுர்த்தியை கண்டுகொள்ளவில்லை.
//
இதுக்கு பேரு தான் எங்க ஊருல சப்பக்கட்டுன்னு சொல்லுவாங்க

said...

வாங்க சர்வே,ராஜாவின் பாடல்களில் இருக்கும் உயிரோட்டம்,ரஹ்மானிடம் மிஸ்ஸிங்.

//ரஹ்மான் அளவுக்கு இந்தியில் பிரகாசிக்காததர்க்கு வேறு பல காரணங்கள் இருக்கு.//

நிச்சயமாக.ஒன்னு,ரெண்டு சொல்லுங்களேன்.

said...

வாங்க அன்பு,
//At times its really painful to see these...petty poloticians and their politics.//

ஆமாங்க,இந்த அத்வானி&கோ வை மொத்தமா கொண்டுபோய் ராமர் பாலத்துக்கு அடியில பொதச்சா தான் இந்தியா உருப்படும்.

said...

//ஆனா கலைஞர் (டிவி) உடைய ரம்ஜான் வாழ்த்து உண்டுதானே?//

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் வாழ்த்து உண்டு.சரியா கரீம் அம்பி.

said...

//இதுக்கு பேரு தான் எங்க ஊருல சப்பக்கட்டுன்னு சொல்லுவாங்க//

வீரா,அது என்ன கட்டாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.இப்படி தன்னை கண்டுகொள்ளாமல் இருப்பவர்களிடமும் கடவுள் கருணையுடன் நடந்து கொள்கிறாரே.அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

Anonymous said...

// எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் வாழ்த்து உண்டு.சரியா கரீம் அம்பி //


உடனே நான் அம்பியா? உங்க திராவிட இம்சை தாங்க முடியலடா சாமி....ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே !!!!

-கரீம்பாய்

said...

பிரம்ம முகூர்த்தத்தில் துவங்கியதாக படித்தேன். கருணாநிதியும் தன் வாழ்த்து இராசி என்ற அளவில் பேசிக் கொண்டிருக்கிறார். சற்று வருத்தமாகத் தான் இருந்தது.

ஒருவேளை வரும்படி தான் இங்கும் செலாவணி ஆகுமோ?

said...

//உடனே நான் அம்பியா? //

அப்ப திராவிடத் தும்பியா?பின் ஏன் அம்பி மாதிரியே சிந்திக்க வேண்டும்?

said...

வருக வருக முகவை மைந்தன் ,
//பிரம்ம முகூர்த்தத்தில் துவங்கியதாக படித்தேன். //
அவர் எந்த நேரத்தில் தொடங்கினாலும் தவறான அர்த்தம் கற்பிக்க ஒரு குரூப் உள்ளது.

//ஒருவேளை வரும்படி தான் இங்கும் செலாவணி ஆகுமோ?//

அந்த வகையில் அய்யா ராமதாஸ் அவர்கள் பாரட்டப்பட வேண்டியவர்.

Anonymous said...

அப்போ உங்களுக்கு 'சனிப்பெயர்ச்சி' யில் நம்பிக்கை உள்ளது..
நல்லதுக்கே காலம் இல்ல பாவம் சனீஸ்வரன்.
kb

said...

/அப்போ உங்களுக்கு 'சனிப்பெயர்ச்சி' யில் நம்பிக்கை உள்ளது..//

சனி என்று சொன்னாலே சனிப்பெயர்ச்சி நம்புபவன் என்று அர்த்தமா?அட தேவுடா!

said...

இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன். உங்களது பின்னூட்டங்கள் அருமையிலும் அருமை. அதுவும் கொண்டையோடு வந்த கரீம் அம்பியை போட்டு செம தாக்கு தாக்குறீங்களே? தூள்...

said...

லக்கி,இந்த அம்பிக எப்பவுமே இப்படித்தான்.அடிச்சா திருப்பி அடிக்காம இன்னொருத்தனை கைகாட்டுவாங்க.இந்த அம்பித்தனத்தை பார்க்கும் போதெல்லாம் வடிவேலு ஜோக் ஒன்னு ஞாபகத்துக்கு வந்துடும்.:-))

Anonymous said...

ஜாலி ஜம்பர் உன்னை பார்த்தான் சிரிப்பா ரொம்ப சிரிப்பா இருக்கு. நீ வளரனும் தம்பி.

said...

//ஜாலி ஜம்பர் உன்னை பார்த்தான் சிரிப்பா ரொம்ப சிரிப்பா இருக்கு. நீ வளரனும் தம்பி.//

அய்யா வளர்ந்தவரே,இப்பவாச்சும் நானும் வளரணும்னு நினைக்கிறீங்களே,ரொம்ப நன்றி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்