
இந்தத் தகவலை இங்கே குறிப்பிட காரணம்,அறிவுசீவி ஒருவரின் அழிச்சாட்டியம். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரை ஒன்று காலச்சுவடு இதழில் வெளிவந்தது.அந்தக்கட்டுரையில் ஓரிடத்தில் கூட கலைஞர் பெயர் குறிப்பிடப்படவில்லை.அண்ணாவின் வாழ்க்கையிலும்,திமுகவின் வரலாற்றிலும் கலைஞர் பெயர் குறிப்பிடாமல் கட்டுரை வரையும் போட்டி காலச்சுவடு நடத்தியதா என்று தெரியவில்லை.கட்டுரையாளருக்கு ஏன் கலைஞர் மீது இப்படி ஒரு காழ்ப்பு?.
சோற்றுக்கு சிங்கியடித்து,பிள்ளைகுட்டிகளை தவிக்கவிட்டுவிட்டு,கடைசியில் அனாதையாக சாவதே நல்ல தலைவனின் இலக்கணமாக ஒரு கருத்தாக்கம் நம்மை அறியாமலே நாம் உருவாக்கிக்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்.இத்தகைய தியாகங்கள் செய்யாததால் கலைஞர் ஒரு சாராரால் வெறுக்கப்படுகிறார் என்றும் எண்ண வேண்டியுள்ளது.
கடவுளே , திராவிடர்களிடமிருந்து கலைஞரைக் காப்பாற்று,ஆரியர்களை அவரே பார்த்துக்கொள்வார் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் இக்கட்டான நிலைக்கும் நம்மை கொண்டுவந்துவிட்டார்கள் இந்தக்காழ்ப்பாளர்கள்.
படத்திற்கு நன்றி: சண்டே இந்தியன் இதழ்