கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, June 6, 2008

இது ஒரு பொன்மாலைப் பொழுது

அஞ்சாநெஞ்சனின் அன்புத்தம்பி அன்பிற்குரிய அண்ணன் அரவிந்த்(tbcd),மற்றும் பாசத்திற்குரிய பாஸ்டன் பாலா, இருவரது மதுரை வருகையையொட்டி தடாலடி சந்திப்பு நடைபெற்றது.அது பற்றிய சில குறிப்புகள்.6.30 மணியளவில் சந்திப்பு துவங்கியது. நான் பாபா, அரவிந்த் மூவரும் அறிமுகமாகி பேசிக்கொண்டிருந்தோம்.சீனா ஐயா சிறிது நேரத்தில் வந்து கலந்தார்.அதன்பின் தருமி ஐயா வந்து சேர்ந்தார்.பிரபு ராஜதுரை அவர்கள் நேரமின்மையால் கலந்துகொள்ள இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆளுக்கொரு குட்டி யானை பரிசளித்து தான் யானை போன்ற வல்லமையுடையவன் என்று குறிப்பால் உணர்த்தினார் டிபிசிடி. பாபாவின் தமிழ் வலையுலகம்,இணையத்தமிழ் மீதான ஆர்வம் அவரது கேள்விகளிலிருந்தே உணர முடிந்தது,சரமாரியாக போட்டு வாங்கிக்கொண்டிருந்தார். டிபிசிடி குற்றால அருவி போல் கொட்டிக்கொண்டிருந்தார்.குறைவாகப் பேசுவன் நான் தான் என்னும் குறையைத் தீர்த்து வைத்தார் சீனா ஐயா.தருமி ஐயா உற்சாகமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.எல்லோரிடத்தும் நண்பராக இருப்பது எப்படி என்பதை பாபாவிடம் டியூசன் வைத்து கற்றுக்கொள்ள வேண்டும்,திராவிட இயக்க அரசியலின் தேவையையும்,அதிலுள்ள நியாயத்தையும் உணர்ந்தவராகவே எனக்கு அவர் தோன்றினார்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒரேயிடத்தில் அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.
மதுரை நகரின் நல்ல ஒரு உணவு விடுதியான காலேஜ் ஹவுசில் சிற்றுண்டி முடித்துவிட்டு டிபிசிடி,மற்றும் சீனா ஐயா கிளம்பினர்.நான்,தருமி ஐயா,பாபா,அவரின் சகோதரர் அதற்குப்பிறகும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தோம்.மனதுக்கு நிறைவான ஓர் அனுபவமாக இருந்தது.நன்றி அனைவருக்கும்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்